25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆரோக்கியம்

Dec 26, 2025

பிஸ்தா பருப்பில் உள்ள ஊட்டச்சத்துகள் .

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. சுமார்28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டிஅக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது  கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட்1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது.குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை  உற்பத்தி செய்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.கூர்மையான மூளை, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு.உடலில் வீக்கத்தைக் குறைக்கும்.இரத்த சோகையைக் குணப்படுத்தும்.வயிற்று எரிச்சலுக்கு உதவுகிறது.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.முதுமை வரை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.வயதானதால் அதிகரித்து வரும் விளைவுகளைத் தடுக்கிறது.

Dec 23, 2025

மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக்கீரை .

வல்லாரைக்கீரை ஆற்றங்கைரையிலும் வயல் வரப்பிலும் குளக்கரையிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்ப்பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.இந்தக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிகமாக உள்ளன. இதை உணவாகப் பயன்படுவதைவிட, மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியவை குணமாகும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, ஆனால், இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி, மயக்கம் முதலியவை வருமாம். அளவோடு சேர்க்கவும்.வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும் மருத்துவக் குணமும்கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்துச் சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்துப் பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம்.வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால்குடல்புண், குடல்நோய்,வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவை அகலும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இது, கண்நோய்களுக்குச் சிறந்த மருந்து,வல்லாரைக்கீரைபொதுவாகமூளைவளர்ச்சிக்குஉதவுகிறது.ஞாபகசக்தியைவளர்க்கிறது.நரம்புத்தளர்ச்சியைக்கட்டுப்படுத்துகிறது.இதயபலத்துக்கும்.தாதுவிருத்திக்கும்உதவுகிறது.காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர்க்கோளாறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

Dec 22, 2025

மழைக்காலத்தில் நாம், சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

பால் மற்றும் பால் சார்ந்த தயிர். வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.மதிய உணவின் போது, துாதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.இரவு துாங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் துாள், மிளகு துாள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை இந்த சீசனில் உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.கண்டிப்பாக மழைக்காலத்தில் நம் உணவு பதார்த்தங்களில் மிளகுப் பொடியைச் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.மழை நேர காய்ச்சலுக்கு, நிலவேம்பு கஷாயம் கொடுப்பது சிறந்தது. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த நிலவேம்பு பொடியுடன், தண்ணீர் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

Dec 19, 2025

ஆரோக்கியமாக இருக்க வீட்டு மருத்துவம்.

ஒரு செவ்வாழைப் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால்.வலிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகிவிடும்.இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.

Dec 17, 2025

திராட்சை விதை மருத்துவ குணங்கள் நிறைந்தது.

உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன. திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன. உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உட லில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்ப தால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவு கிறது. திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதை களை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும்ஆய்வுகள் தெரிவிக்கின்றன.விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.

Dec 15, 2025

தூதுவளை சளி , காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு  பிரச்சனைகளிலிருந்து எளிதாக குணம் அடைய முடியும். சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இரத்தத்திலுள்ள  சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரியான அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கு இரத்த அணுக்களின் அளவு மிகவும் அவசியமானது. இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது. தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த  சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்துசாப்பிட்டுவரும் பொழுதுநல்லபலனைஅடையமுடியும்.தினமும் இரண்டு தூதுவளை பூக்களை மென்று தின்ன உடல் பளபளப்பாக மாறும்.தூதுவளை பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட உடல் வலுவடையும்.ஒரு ஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து' இரவில் ஒருவேளை மட்டும் அருந்தினால் நரம்புகள் இறுகும்.உடல் உறுதி பெறும். என்றும் இளமையோடு இருக்கலாம்.

Dec 13, 2025

கணைய பாதிப்பு எதனால்..

கணையம் என்பது மனித உடலில், வயிற்றுக்கு பின்னால்  உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என் சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய் கிறது. உட்சுரப்பி நிலையில் செயல்படும்போது, ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இன்சுலின் மற்றும் குளூகோகான் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள், கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு நாளமில்லா செல்கள், ஹார்மோன்களை சுரந்து உடலில் சர்க்கரையின் சமநிலையை பேண உதவும் வகையில் இன்சுலினை வெளியிடுகின்றன. அதிகமாக மது குடிப்பது, பித்தக்கற்கள், கணைய சாற்றுநீர் வெளியேறும் பாதை தடைபடுவது, அழற்சி ஏற்படுவது போன்றவற்றால் கணையம் வலுவிழக்கிறது. புற்று நாய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை பிழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது.அதிககொழுப்பு, கணையச் செல்களுக்கு நேரடி காயம், தொற்று போன்றவையும் கணைய செயல் இழப்புக்குகாரணமாக வாய்ப்பு உள்ளது.

Dec 12, 2025

கோழி முட்டையில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது.

 மருத்துவ அறிவியல்கோழி முட்டையில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது என்று கூறுகிறது. 100 கிராம் முட்டையில் கால்சியம் 56 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் என்பது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. தசை ஒத்துழைப்பு மற்றும் நரம்பு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் இரும்புச்சத்து 1.75 மி.கி உள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் தட்டுக்களை உருவாக்கி ஆக் சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. உடல் சோர்வு மற்றும் நரம்பு பலவீனத்தை தடுக்கிறது. பாஸ்பரஸ் சத்தும் மிகுதியாக உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை உருவாக்கும் பொருளாகும். முட்டையில் பொட்டாசியம் சத்தும் இருப்பதால், இதய துடிப்பை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டையில் உள்ளசோடியமானது, திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதுதவிர செலினியம், துத்தநாகம், மக்னீ சியம், மாங்கனீசு சத்துக்களும் அடங்கி உள்ளன. மேலும் முட்டையில் காணப்படும் வைட்டமின்கள், கொழுப்பு சத்துக்கள் மனித உடலை பல நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக உள்ளன.

Dec 11, 2025

கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் வாயு பிரச்சினை தீரும்.சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக கருஞ்சீரகம் உள்ளது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் குணமடையும்.வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் என ஐந்து ராஜ உறுப்புகளும் பலப்படும்.கருஞ்சீரகத்தை உடலுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம்.கருஞ்சீரக எண்ணெயை, முன் தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம், முடி உதிர்தல் குறையும்.கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை போக்க வல்லது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும். கண் எரிச்சல் தீரும். கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது, ஒட்டுமொத்த கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதுசர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளும் போது இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும்.நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியை அடியோடு விரட்டி அடிக்கும் அற்புதமான மருந்தக  கருஞ்சீரகம் உள்ளது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், சரிசெய்யும் தன்மை கொண்டது, தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.ஒரு சிறிய சிட்டிகை கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையிலேயே குடிக்கவும், தினமும் எடுத்தால் மூட்டு வலி, உடல் வீக்கம் மற்றும் உடல் சோர்வு குறையும்.அரை கரண்டி கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன் எடுத்தால் தூக்கம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உணவில் சமைக்கும் போது அரை கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் செரிமானம் சீராகி வயிறு வீக்கம், வாயுமற்றும் குடல் தொந்தரவு குறையும்.

Dec 10, 2025

அத்திப்பழம் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும். 

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் மாதவிடாய் நின்ற பிறகு மார்பகபுற்றுநோய் வருவதைத் தடுக்கும். இதன் காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன்செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில்ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும்  வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.தினசரி2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க5பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில்(வினிகர்)ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.  தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவுஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின்,ஏ.பி.சி.ஈ.கே. நிறைந்தது.உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.தோல் நோய்களை தடுக்கும்.அதிக கலோரி உள்ளது.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டுவந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில்  கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 40 41

AD's



More News