தேவையான பொருட்கள் -200 கிராம் பாசிப்பருப்பு,5டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுதண்ணீர். செய்முறை -முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும் இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி, பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, ஒரு5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும். மிகவும் ருசியான ஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார் வாங்க சாப்பிடலாம்.பொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்-1 கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,வெண்ணெய் - சிறிதளவு , தேவையான அளவு வெந்நீர்செய்முறை -தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம் பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு, அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது, இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும். இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-½கப் வரகு அரிசி,அரை கப் பயத்தம் பருப்பு,1கப் பொடித்த வெல்லம்,1தேக்கரண்டி ஏலக்காய் பொடி,4 தேக்கரண்டி அதி மதுரம் பொடி,½ தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி.½தேக்கரண்டி குங்குமப்பூ,1கப் டெசிகெடெட் ஸ்வீடன்ட் தேங்காய் துருவல்,. ¼கப் உருகிய வெண்ணை, 20 முந்திரி ,1/4கப் உலர்ந்த திராட்சை,சிட்டிகை உப்புசெய்முறை -குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் மேஜைகரண்டி சூடான நீரில் கரைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் 1 மேஜை கரண்டி உருகிய வெண்ணையில் முந்திரி திராட்சை வறுக்கவும். திராட்சை உப்பும், முந்திரி பொன் சிவக்கும். வறுத்ததை தனியே எடுத்து வைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் வரகு, ப பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் ஒரு கிண்ணத்தில்3 கப் கொதிக்கும் பாலில் 30 நிமிடங்கள் ஊற வைக்க பின் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.மிதமான நெருப்பில் வாணலியில்½ கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்க. கிளறிக்கொண்டே இருக்க, கெட்டி பாகு பதம் வேண்டும். ½ தேக்கரண்டி சிரப் நீரில் போட்டு டெஸ்ட் செய்கவும். சுருண்டு வந்தால் பாகு தயார். நெருப்பை சிம்மர் ஆக்கவும்.வேகவைத்த வரகு, பயத்தம் பருப்பு கலவையை உதிர்த்து சிறிது சிறிதாக பாகில் சேர்த்து கிளற.. புட்டு மணல் மணலாக இருக்கும். குங்குமப்பூ, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும். ஜாதிக்காய், அதிமதுரம் துருவி கிளறவும்.மீதி வெண்ணை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். வரகரிசி புட்டு தயார்.
தேவையான பொருட்கள்-1 கப் கிழங்கு புட்டு மாவு,1/4 கப் தேங்காய்,3/4 கப் சர்க்கரை பாகு,தேவைக்குஉப்புசெய்முறை -மரவள்ளி கிழங்கை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்துகொள்ளவேண்டும்.அதில் உப்பு, சர்க்கரை பாகு கலந்து, புட்டு மாவு பாதத்திற்கு கொண்டு வரவேண்டும்.ஒரு சிரட்டை எடுத்து அதில் ஓட்டை போட்டு சில் வைக்க வேண்டும் பின்னர் தேங்காய் மாவு தேங்காய் போட்டு நிரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு புட்டு தயார்.
தேவையான பொருட்கள்-1 கப் கவுணி அரிசி மாவு,3/4 கப்நாட்டு சக்கரை,1/2 கப் தேங்காய். ,2 டேபிள்ஸ்பூன் நெய்,. 8-10 முந்திரி, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,ஒரு சிட்டிகை உப்பு.செய்முறை -(கருப்பு கவுணி அரிசியை2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு) ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசைந்துக்கவும். கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும், இடியாப்ப தட்டில் பிசைநது வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து,15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்.அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும், அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக்கவும்.அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் ஆரோக்கியமான கருப்பு கவுணி அரிசி வெல்ல புட்டு தயார்.சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி.இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:-உளுந்தம் பருப்பு - 1 கப் ,பொடித்த வெல்லம்- 1 கப்,தேங்காய் துருவல் - 1 கப்,உப்பு, தண்ணீர் -தேவையான அளவு.செய்முறை:-உளுந்தை வறுத்து பொடியாக்கவும், இதில் உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் பிசையவும். பின், ஆவியில் வேகவைத்து வெல்லம், தேங்காய் சேர்க்கவும்சத்துகள் நிறைந்த, 'உளுந்து புட்டு' தயார், அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்-ஜவ்வரிசி 1கப், நல்ல பலாப்பழம்- 5 சுளைகள்,வெல்ல பாகு அரை கப், ஏலக்காய்தூள் அரைஸ்பூன் ,தேங்காய்- அரைமூடி,முந்திரிபருப்பு- 8,கிஸ்மிஸ்பழம் 15,நெய்-6 ஸ்பூன் செய்முறை -முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக் கட்பண்ணிக் கொள்ளுங்கள்.வெல்லப்பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளுங்கள்..ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய்பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். முதல் பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.வெல்லப்பாகு சேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்.வாணலியில்2ஸ்பூன்நெய்விட்டு, முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.
தேவையான பொருட்கள் -கேரட் 5,நெய் தேவையான அளவு,முந்திரி தேவையான அளவு, உலர் திராட்சை தேவையான அளவு,தேங்காய் சிறிது அளவு, வெல்லம் தேவையான அளவு,பால்_1கப்,ஏலக்காய் தூள் சிறிதளவுசெய்முறை -கேரட்டை துருவி நெய்யில் வதக்கி ஆறவைத்து,அரைத்துக் கொள்ளவும்.முந்திரி உலர் திராட்சை நறுக்கிய தேங்காய் ஓரு கை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும்.அதனுடன் ஒரு டம்லர் தண்ணீர் ,வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைபட்டால் தண்ணீர் மீண்டும் ஒரு டம்ளர் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் கேரட் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன்1 கப் பால் சேர்க்கவும்.சேர்த்து கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்போது நெய் சேர்த்து கிளறவும். சுவையான கேரட் பாயாசம் ரெடி.
தேவையான பொருட்கள்-1/4 லிட்டர் பசும்பால்,2 துண்டு பட்டை,2 ஏலக்காய்,2 கிராம்பு,20 மி.லி நெய் ,100 கிராம் சர்க்கரை,3 டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டு, தேங்காய் பால் அரைப்பதற்கு - 100 கிராம் கொப்பரை தேங்காய்,2 டீஸ்பூன் கசகசா,முந்திரி பேஸ்ட் செய்வதற்கு -20 கிராம் பாதாம்,20 கிராம் முந்திரி ,1 அக்ரூட் செய்முறை ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து ,அதில் பாதாம் மற்றும் கொப்பரை தேங்காய் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.இப்போது ஒரு மிக்ஸியில் கொப்பரை தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து, அதை பால் எடுத்துக் கொள்ளவும் .மூன்று முறை அரைத்து பால் எடுத்து வடிகட்டி கொள்ளவும்.இப்போது மிக்ஸியில் பாதாம் ,முந்திரி, ஒரு அக்ரூட், சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு ,அதில் நெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,சேர்த்து அதனுடன் காய்ச்சிய பசும்பாலை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.கொதித்த பசும்பாலுடன் அரைத்து வைத்து தேங்காய் பால் மற்றும் பாதாம் முந்திரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.சர்க்கரை மற்றும் மில்க் மேடு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வைக்கவும்.இப்போது பாயாசம் ரெடி.
தேவையான பொருட்கள் -1 கப் வரகரிசி, 2 கப்பால், தேவைக்குதண்ணீர், அரைகப்சர்க்கரை, தேவைக்குமுந்திரி, திராட்சை, பாதாம் ஏலக்காய், 2ஸ்பூன்நெய்செய்முறை - வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின் குக்கரில் தேவையான தண்ணீர்ஊற்றி நன்றாகவேக வைக்கவும்.வேகவைத்த வரகரிசியை வேறுபாத்திரத்தில்மாற்றிபின், சர்க்கரை2ஸ்பூன் கேரமல்பண்ணிசேர்க்கவும்.பின்தேவையானபால் மீதி சர்க்கரையைச்சேர்க்கவும்.நெய்1ஸ்பூன்சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடிசேர்க்கவும்.நெய்யில்முந்திரி, திராட்சை,வறுத்துசேர்க்கவும்.பாதாம் முந்திரி,திராட்சைவைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம்ரெடி.கேரமல்சேர்ப்பதால்வித்தியாசமான ருசியைக்கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.