தேவையான பொருட்கள்-500மிலி பால், 2 டேபிள்ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்,1/2 கப்சர்க்கரை, 1/4 கப்சேமியா, 1/2 டீ ஸ்பூன் நெய், பாதாம், முந்திரி – சிறிதளவுசெய்முறை-ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சூடானதும் சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும் சேமியா பொன்னிறம் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் சிறிதளவு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பிறகு வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து கலந்து விடவும்.சேமியா வெந்ததும் கஸ்டர்ட் மிக்ஸை சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். லேசாக கெட்டியாக வரும் போது இறக்கவும். கடைசியாக அதன் மேல் பாதாம் முந்திரி துண்டுகளுடன் அலங்கரித்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:-பாஸ்தா - 1 கப்பால் - 3 கப் சர்க்கரை -100 கிராம்நெய், தேங்காய் - சிறிதளவுஏலக்காய் பொடி, முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:-பாஸ்தாவை தண்ணீரில் வேகவைக்கவும், பாலில் சர்க்கரை கலந்து பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்றாக அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை அதில் சேர்க்கவும். பின், வேக வைத்த பாஸ்தாவை போட்டு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி கலந்து இறக்கவும்.சுவை மிக்க, 'பஞ்சாபி பாஸ்தா பாயசம்!' தயார்,
தேவையான பொருட்கள் - 2 கப் கோதுமை ரவை, 1/4 கப் கடலை பருப்பு,1/2 கப் தேங்காய் துருவல்2-பச்சை மிளகாய் 4-வரமிளகாய்,1 துண்டு பொடியாக நறுக்கின இஞ்சி, 1ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,2 ஸ்பூன் எண்ணெய், 1ஸ்பூன் நெய், கருவேப்பிலை,உப்புசெய்முறை - ஸ்டவ்வில் வெறும் வாணலி வைத்து மிதமான சூட்டில் கோதுமை ரவையை வாசம் வரும்வரை வறுக்கவும். கடலை பருப்பை முழுகும். அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடத்துக்கு பிறகு தண்ணி வடிகட்டி வரமிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.ஸ்டவ்வில் கடாய் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ,கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம். வறுக்கவும்.அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிறகு 3-4 கப் தண்ணி ஊற்றி உப்பு சேர்க்கவும்.அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, மற்றும் தேங்காய் துருவல், நெய் சேர்த்து ,நன்கு கொதிக்க விட்டு வறுத்த கோதுமை ரவை சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.நன்கு வெந்ததும் ஆறவிட்டு சின்ன கொழுக்கட்டைகளாக செய்து இட்லி தட்டில் எடுத்து வைத்து 7 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.வித்தியாசமான சுவையுடன் கூடிய கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை தயார்... தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.கோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை மிகவும் வித்தியாசமான ருசியில் சுவையாக இருந்தது.
தேவையான பொருட்கள் - குதிரைவாலி அரிசி 1 கப்,கேரட் துருவல் 2 டீஸ்பூன்,பச்சை மிளகாய் 2எண்ணெய், கடுகு, பெருங்காயம் சிறிதளவு,தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு.செய்முறை - வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் குதிரைவாலி அரிசி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தபின் ஆறவிட்டு சிறு உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.சத்துள்ள,'குதிரை வாலி பிடி கொழுக்கட்டை!' தயார். புதினா சட்னி, சாம்பாருடன் தொட்டு சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.
தேவையான பொருட்கள் - இரண்டு கப் சாமை அரிசி,அரை கப் தேங்காய் துருவல்,ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு,ஒரு டீஸ்பூன் கடுகு,ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு,அரை டீஸ்பூன் சீரகம்,ஒரு டேபிள்ஸ்பூன் கல் உப்பு,நான்கு பச்சை மிளகாய்,1பெரிய துண்டு இஞ்சி துருவியது,நான்கு கப் தண்ணீர்,இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்செய்முறை - முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாமை அரிசியை நன்கு அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.இப்பொழுது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலை பருப்பு சேர்த்து சீரகமும் சேர்த்து வறுத்து இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக தேங்காய் துருவலும் சேர்த்து வதக்கவும்.நான்கு கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன் ,ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து 10 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும்.அது நன்கு வெந்து இருக்கும்.இப்பொழுது இட்லி பானையில் வேகவைக்கும் தட்டில் ,பிடி கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து 10 நிமிடம் வேக வைக்கவும்.சுவையான சாமை அரிசி பிடி கொழுக்கட்டை தயார்.இதற்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி ஏதுவாக இருக்கும்.
தேவையானவை - ஒரு கப் சிகப்பு அவல்,உப்பு தேவையான அளவு,எண்ணை தேவையான அளவு,1 பெரிய வெங்காயம்,2 பச்சைமிளகாய்,ஒரு டீஸ்பூன்கடுகு,அரை டீஸ்பூன்சீரகம்,ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன்உளுத்தம்பருப்பு,இஞ்சி சிறிய துண்டு,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு,அரை மூடிதுருவிய தேங்காய்செய்முறைசிகப்பு அவல் கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான உணவு.சிகப்பு அவலை சுத்தம் செய்து கழுவிய பின் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ,இஞ்சி, இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை ,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ,இவற்றை தாளித்து கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் சற்று வதக்கி கொள்ளவும்.அவலை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும் .தாளிப்பை மற்றும் உப்பு சேர்த்து, வடித்த அவலுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.தாளித்துச் சேர்த்த அவலை கொழுக்கட்டையாக பிடித்து ,இட்லி பானையில் வைத்து10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.10 நிமிடத்திற்கு பிறகு சிவப்பு அவல் கார கொழுக்கட்டை எடுத்துப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்-2 கப் இட்லி அரிசி (2 மணி நேரம் ஊறவைக்கவும்)2 கப் வெல்லக் கரைசல் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.1/2கப் தேங்காய் துருவல், உப்பு, சிறிது ஏலக்காய்த்தூள், சிறிதுநெய்செய்முறை -மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் துருவலை சேர்க்கவும். பிறகு ஊறவைத்த இட்லி அரிசியை உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு மற்றும் வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி சேர்த்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் துருவிய தேங்காய்ஏலக்காய்தூள், சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து சூடாக்கவும்.நெய் சூடானதும் அதில் அரைத்து கலந்து வைத்த மாவை ஊற்றி கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் மாவை ஒரு நிமிடம் மிதமான சூட்டில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.சிறிது மாவை எடுத்து உள்ளங்கையை வைத்து அழுத்தி பிடிக்கவும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.10 நிமிடம் கழித்து கொழுக்கட்டைகளை பரிமாறவும். மற்றொரு முறையாக கொழுக்கட்டை அச்சில் சிறிது நெய் தடவி வேக வைத்த மாவை உள் வைத்து நன்றாக அழுத்தவும்.மெதுவாகத் திறக்கவும் .மீதமிருக்கும் மாவையும் இதேபோல் செய்து இட்லிப் பானையில் சிறிது தண்ணீர் விட்டு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
தேவையான பொருட்கள்-கொழுக்கட்டை மாவு செய்வதற்கு - 2கப்-பச்சரிசி, 1/2 கப் – சுடுதண்ணீர்,தேவையான அளவு உப்புகொழுக்கட்டை பூரணம் செய்வதற்கு - 1 கப் - வேர்க்கடலை,3/4 கப் - துருவிய வெல்லம்கொழுக்கட்டை வேகவைப்பதற்கு - வாழை இலை ,2 டேபிள்ஸ்பூன் - எண்ணெய் செய்முறை -பச்சரிசியை நன்றாக அலசி வெயிலில்10 நிமிடம் உலர வைக்கவும்.பின்னர் அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் சேர்க்கும்போது அரிசி சிறிய அளவு ஈரப்பதத்தோடு இருக்கவேண்டும்.அரைத்த மாவை சல்லடையில் கொட்டி நன்றாக சலித்துக் கொள்ளவும். கட்டிகள் ஏதேனும் இருந்தால் அதை தனியாக எடுத்து விடவும்.பின்னர் கட்டிகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சலித்த அரிசி மாவை, ஒரு துணியில் பரப்பி விடவும்.அந்தத் துணியின் எல்லா பக்கங்களையும் சேர்த்து ஒரு மூடி போட்டு கொள்ளவும். பின்னர் அதை ஒரு இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவி கட்டிக் கொள்ளவும்.வேகவைத்து எடுத்த அரிசி மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.அதில் தேவையான அளவு உப்பு, சுடு தண்ணீர் கலந்து மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கொழுக்கட்டை செய்வதற்கு மாவு தயார்.இப்பொழுது கொழுக்கட்டையில் பூரணம் எப்படி செய்வது என்று பார்ப்போம். உள்ளே வைக்கும் இனிப்பு பூரணத்திற்கு முதலில் 1 கப் வேர்க்கடலைவறுத்து தோலை உரித்துக் கொள்ளவும்.பின்னர்3/4 கப் அளவிற்கு வெல்லம் எடுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையையும் ,வெல்லத்தையும் ,மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது உள்ளே வைக்கும் கொழுக்கட்டை பூரணம் தயார். ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.கொழுக்கட்டை மாவில் இருந்து ஒரு சிறு உருண்டையை எடுத்துக் கொள்ளவும். அதை வாழை இலையில் நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.அதனுள்ளே தேவையான அளவுக்கு பூரணம் வைத்துக் கொள்ளவும்.அதை நன்றாக மூடி தேவையான வடிவத்தை செய்து கொள்ளவும்.பின்னர் கொழுக்கட்டை வைத்திருக்கும் வாழையிலையில் நன்றாக மடித்துக் கொள்ளவும். இதன்படி மீதம் இருக்கும் அனைத்து கொழுக்கட்டையும் வாழையிலையில் தட்டி கொள்ளலாம்.பின்னர் அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து,10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். அரிசி மாவில் இருந்து செய்த வாழை இலை கொழுக்கட்டை தயார்.
தேவையான பொருட்கள் - 1 கப் கெட்டி அவல்,1 கப்வெல்லம்,4 கப் பால்,5முந்திரி, 5திராட்சை,ஏலக்காய் தேவைக்கேற்ப, 1 டீஸ்பூன்நெய்செய்முறை - அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு, வெல்லம் சேர்த்து, கரைத்து வடிகட்டவும்.ஒரு கடாயில் பால் சேர்த்து அதில் அவல் சேர்த்து .மூடி பத்து நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.அவல் வெந்ததும் . அதில் வெல்ல பாகு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.பிறகு அதில் நெய் விட்டு முந்திரி ,திராட்சை, வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் - 1கப்பச்சரிசி,1 கப்வெல்லம்,4ஏலக்காய்,1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்,2 டேபிள்ஸ்பூன்கோதுமை மாவு,ஒரு சிட்டிகை உப்பு,1டேபிள்ஸ்பூன்நெய்,எண்ணெய் பொரிப்பதற்குசெய்முறை – பச்சரிசியை கழுவி4 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் ஒரு துணியில் பரப்பிவிட்டு,காய்ந்தவுடன், மிக்ஸி ஜாரில் ஏலக்காய் சேர்த்து,அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவை,ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பேக்கிங் பவுடர், ஒரு பின்ச் உப்பு,போட்டு கலந்து கொள்ளவும்,பொடித்த வெல்லத்தை, சிறிது தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு, கரைத்து, பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்,.மாவுடன் நெய் மற்றும் வெல்லத்தையும் ஊற்றி, கலந்து கொள்ளவும், கட்டியாக இருந்தால் லேசாகத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்,மாவு கரண்டியில் எடுத்து ஊத்தும் பதத்திற்கு,இருக்க வேண்டும்.இதனை2 மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடவும்.இரண்டு மணி நேரம் கழித்து,கடாயில் பொரிப்பதற்கு, தேவையான எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும்,மாவை ஒரு கரண்டியில் எடுத்து, நடுவில் ஊற்றவும்,சிறிது நேரம் கழித்து,அது மேலே வரும்,ரெண்டு புறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வந்தவுடன், எடுக்கவும்,சுவையான,இனிப்பான நெய் அப்பம் தயார்,