தேசிய துப்பாக்கி சுடுதல் சாம் பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் மத்திய பிரதேசத்தின் பிரகதிதுபே (117), நீருதண்டா (114) முதலிரண்டு இடம் பிடித்தனர்.நீரு தண்டா அடுத்து நடந்த பைனலில், 41 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து, தங்கத்தை வென்றார். கஜகஸ்தானில் சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். பிரகதி துபே, நீரு தண்டா, மணிஷா கீர் அடங்கிய ,மத்திய பிரதேச அணி, பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில், 339 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே டில்லி, பஞ்சாப் அணிகள் தட்டிச் சென்றன.டில்லி (323 புள்ளி), தமிழகம் (295), ராஜஸ்தான் (274) ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான 'டிராப்' பிரிவில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்..
இன்று நடக்கஉள்ள 5வது 'டி-20' போட்டி இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோதும்.. இதில் வென்றால் இந்திய அணி 5-0 என தொடரை முழுமையாக வெல்லலாம்.முதல் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.5வது, கடைசி போட்டி இன்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
.கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்' 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 38, ஓபன் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 22, வெண்கலம் கைப்பற்றினர்.உலக 'ரேபிட்' பிரிவில் 5 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் ஹம்பி.ஏற்கனவே 2 தங்கம் (2019, 2024), ஒரு வெள்ளி (2023), ஒரு வெண்கலம் (2012) வென்றிருந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இத்தொடரில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீரரானார். இப்போட்டி மீதான இவர்களது அர்ப்பணிப்பு பாராட்டத் தக்கது. இவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,' என, அர்ஜுன், ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவின் ஹம்பி உலக 'ரேபிட்' சாம்பியன்ஷிப்பில் 7வது சுற்று முடிவில் 6 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார் .உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் ,முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர். 8வது சுற்றில் சகவீரர் நாராயணனை அர்ஜுன்வென்று,. 8 சுற்று முடிவில் அர்ஜுன் 6.5 புள்ளியுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார். குகேஷ் (8.5) 8, நிஹால்சரின் (6.0) 16 வது இடங்களில் உள்ளனர்.141 பேர் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் ஹம்பி, 7வது சுற்றில் ஸ்பெயினின் சாராவை வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் டிங்ஜீ மோதிய 7வது சுற்று 'டிரா' ஆனது.இந்தியாவின் ஹம்பி, 6.0 புள்ளியுடன் , ஏழு சுற்று முடிவில் முதலிடத்துக்கு முன்னேறினார். ஹரிகா (5.5) 5,திவ்யா (5.0) 10வது இடங்களில் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டி நடந்தது. கர்நாடக வீராங்கனை திலோத்தமா, 591 புள்ளியுடன் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட திலோத்தமா 17, மொத்தம் 466.9 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கேரளாவின் விதர்சா, (462.9), ரயில்வேயின் அயோனிகா (451.8) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
இந்திய பெண்கள் அணி நான்காவது 'டி-20' போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில்இலங்கையை வென்றது. ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா அரை சதம் கடந்தனர்.ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொட ரில் ,முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா,3-0 , நேற்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்த , நான்காவது போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது,இலங்கை அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி வென்றார். ஐந்தாவது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.
' .பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர், மகாராஷ்டிராவின் சோலாபுர் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் வைதேகி சவுத்ரி 25, ஜப்பானின் மிச்சிகா ஒஜெகி மோதினர். முடிவில் வைதேகி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். 4வது ஐ.டி. எப்., ஒற்றையர் பட்டம் வைதேகி கைப்பற்றினார். இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வைஷ்ணவி அத்கர் ஜோடி இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' பிரட் லீ, 49. இரு முறை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார். 2003, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் 22 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்தி ரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். 13 ஆண்டு (1999– 2012) ஆதிக்கம் செலுத்திய இவர், ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக உள்ளார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, வாழ்நாள் சாதனையாளருக்கான 'ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆப் பேம்' பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டார்.
ஐ.டி.எப்., டென்னிஸ் பெண்களுக்கான தொடர் இந்தியாவின்மகாராஷ்டிராவில் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். முதல் செட்டை ராஷ்மிகா 6-2 என வென்றார். 2 வதுசெட்டை மாயா 7-5 என கைப்பற்றினார்.மூன்றாவது செட்டை ராஷ்மிகா 6-1 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கஇந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. நேற்று திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் ,மூன்றாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மீண்டும் பீல்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன்,. இந்தியஅணி 13.2 ஓவரில் 115/2 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நான்காவது போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.