25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Dec 24, 2025

78வது தேசிய பாட்மின்டன் தமிழக அணி சாம்பியன் .

மாநிலங்களுக்கு இடையிலான 78வது தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்  ஆந்திராவின் விஜயவாடாவில் ,அரையிறுதியில் தமிழக அணி 3-2 என உத்தரகாண்ட்டை வென்றது.அடுத்து நடந்த பைனலில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதினஹரியானாவின் மன் ராஜ் சிங், தமிழகத்தின் சங்கர் முத்துசாமியை முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில்வென்றார்.  தமிழகத்தின் ரித்விக்கை அடுத்தபோட்டியில் ஹரியானா வீரர் பாரத் ராகவ், வென்றார். அணி 0-2 என பின் தங்கியது.  தமிழகத்தின் ஹரி ஹரன், ரூபன் ஜோடி அடுத்து நடந்த இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றனர். தமிழக வீரர் சுகி ஜாய் பாலா சிங், கவுதம் அரோராவை வீழ்த்த,  மூன்றாவது ஒற்றையர் போட்டியில் 2-2 என சமன் ஆனது. இரண்டாவது இரட்டையர் போட்டி  கடைசியாக தமிழகத்தின்நவீன்  லோகேஷ் ஜோடி, 10 ஒரு மணி நேரம், நிமிடம் நடந்த போராட்டத்துக்குப் பின், மயங்க், ஆர்யன் ஜோடியைவென்றது. முடிவில் தமிழக அணி  3-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.ஹரியானா அணி, சிந்து இடம் பெற்ற ஆந்திராவை பெண்கள் பிரிவு பைனலில் சந்தித்தது. ஹரியானா அணிசிந்து விளையாடாத நிலையில் 3-0 என வென்று சாம்பியன் ஆனது. 

Dec 24, 2025

இரண்டாவது வெற்றி  பெற்ற இந்திய  கிரிக்கெட் பெண்கள் அணி .

 ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்  பங்கேற்கஇந்தியாவந்துள்ள இலங்கை பெண்கள் அணியை  முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது போட்டியில்'டாஸ்' வென்ற இந்திய அணிகேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்தது,  7  விக்கெட்  வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 129/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.   

Dec 24, 2025

இந்தியாவின் தீப்தி சர்மா ஐ.சி.சி., தரவரிசையில் 'நம்பர்-1' .

 இந்தியாவின் தீப்தி சர்மா சர்வதேச 'டி-20 பவுலர் தரவரிசையில், முதன் முறையாக முதலிடம்பிடித்தார். 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.,) சார்பில், 'டி-20' போட்டியில் தரவரிசை பட்டியலில் ,737 புள்ளியுடன் ஒரு  இடம் முன்னேறிய தீப்தி, முதன் முறையாக 'டி-20' அரங்கின் . 'நம்பர்-1' பவுலர் ஆனார். 

Dec 24, 2025

குளிர்கால ஒலிம்பிக் போட்டி   ஒலிம்பிக் ஜோதியை நடிகர் ஜாக்கி சான் ஏந்தி வந்தார்.

 அடுத்த ஆண்டு (பிப்.6-22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி  இத்தாலியின் மிலன், கோர்டினா நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தாலியின் 110 மாகாணங்களில் 12,000 கி.மீ.,  இதற்கான ஜோதி உலா வர உள்ளது. பிப்.6ல் மிலன் சான் சிரோ மைதானத்தில் நடக்கும் துவக்க விழாவில் ஏற்றப்படும், ஒலிம்பிக் ஜோதியை, நேற்று பாரம்பரிய பொம்பெயி நகர பகுதியில் பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி வந்தார்.

Dec 24, 2025

 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா- பிரதமர் மோடி சந்திப்பு  .

. ஈட்டி எறிதல் இந்தியாவின் வீரர் நீரஜ் சோப்ரா, 27.கடந்த 2021ல் டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டு தோஹா டைமண்ட் லீக் தொடரில், தனது கனவு இலக்கான 90.23 மீ., துாரம் ஈட்டி எறிந்துசாதித்தார். இவருக்கு ராணுவத்தில் 'லெப்டினன்ட் கவுரவ கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுர விக்கப்பட்டது. உலகதடகளசாம்பியன் ஷிப்பிலும் பதக்கங்கள் வென்றார். தனது மனைவி ஹிமானி மோர் உடன், நேற்று நீரஜ் சோப்ரா பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது அதிகாரப் பூர்வ இல்லமான 'லோக் கல்யாண் மார்க்'கில் சந்தித்தார்.இது பற்றி பிரதமர் மோடி  சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட  செய்தியில், “நீரஜ் சோப்ரா, அவரது மனைவியை சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடினோம்,' என தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் விளையாட்டுத் துறை மீதான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும்இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும்,' என குறிப்பிட்டுள்ளார். நீரஜ் சோப்ரா வெளியிட்ட செய்தியில், 'எங்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

Dec 23, 2025

இந்திய அணி 'பிபா' கால்பந்து தர வரிசையில் 142வது இடத்தில் உள்ளது.

சர்வதேச கூட்டமைப்பு ,சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, வெளியிட்டது. உலக கால்பந்து ('பிபா') இதில் இந்திய அணி (1079.52) 142வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியஅணி, இந்த ஆண்டு விளையாடி (2'டிரா', 3 தோல்வி)ஒரு போட்டியில் கூட வெற்றி பெற வில்லை. இதனால் கடந்த நவம்பரில் வெளி யான தரவரிசையில் 6 இடம் பின்தள்ளப்பட்டு, 142வது இடம் பிடித்தது. தற்போது இதே இடத்தில் நீடிக்கிறது.

Dec 23, 2025

ஆனந்த், நகமுரா மோதிய குளோபல் செஸ் லீக் தொடரில் ,'போட்டி 'டிரா' ஆனது.

குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன்  இந்தியாவின் மும்பையில் மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.3, 4வது இடம் பிடிக்கும் அணிகள், 3வது இடத்திற்கான போட்டியில் பங்கேற்கும்.இந்தியாவின் ஆனந்த், , உலக கோப்பை வென்றஉஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம்  பெற்ற கேங்கஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் அணி, அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியை சந்தித்தது.ஹிகாரு (அமெரிக்கா நகமுராவை )  ஆனந்த், எதிர்கொண்டார். ஆனந்த் போட்டியின் 41வது நகர்த் தலில் 'டிரா' செய்தார். கேங்கஸ் வீரர் ரவுனக் சாத்வானி (இந்தியா), முர்ஜினை வீழ்த்தினார். முடிவில் கேங்கஸ் அணி 12.0-3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.போட்டி முடிவில் வேணி (24 புள்ளி), திரி கேங்கஸ் (15), ஆல்பைன்பைப்பர்ஸ் (15), மும்பை (12) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. இன்று கடைசி நாளில் பைனலில் வெற்றி அணி, கோப்பை வெல்லலாம். 

Dec 23, 2025

ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர், ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்தார்.

 ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் தலைமையில் 2023-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி, தொடர்ந்து 10 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.  ஆஸ்திரேலியாவிடம் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் தோற்று, கோப்பையை கோட்டை விட்டது. இதிலிருந்து மீண்ட இவர், 2024-ல் 'டி-20' உலக கோப்பை, 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார்.  கடந்த 2022ல் கேப்டன் பதவியை ஏற்ற போது, உலகக்கோப்பை வெல்வதே இலக்காக இருந்தது.. தோல்வி பாடமாக அமைந்து. 'டி-20' உலகக்கோப்பை (2024) தொடரில் முழுகவனம் செலுத்தி சாதித்தேன்.  'விமானத்தைவிரைவாக தரையிறக்க விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்க விரும்புகிறேன்," என ஓய்வு குறித்து ரோகித் சர்மா தெரிவித்தார். 

Dec 22, 2025

இந்தியா பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை வென்றது .

முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு ,இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 121 ரன்னில்கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக் கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஸ்மிர்தி மந்தனா 25 ரன்னிலும்,9 ரன்னிலும், ஷைபாலி வர்மா  கேட்ச் ஆனார்கள். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்களுடனும் (44பந்து, 10 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகி விருதை ஜெமிமா பெற்றார்.

Dec 22, 2025

ஜோஷ்னா, வீர் சோட் ரானி வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

.மும்பையில், 'வெஸ்' டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் 80வது சீசன் மும்பையில் ,பெண்களுக்கான பைனலில் ஜோஷ்னாசின்னப்பா, சானியா வாட்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோஷ்னா3-1 (7-11, 11-8, 11-8, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் ஆண்களுக்கானபைனலில் மோதினர். இதில் சோட்ரானி 3-0 (11–9, 11-9, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக சாம்பியன் ஆனார்.. 

1 2 ... 88 89 90 91 92 93 94 ... 188 189

AD's



More News