புனே அணி, சென்னையில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூருவை 'டை பிரேக்கரில்' வீழ்த்தியது.தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு டில்லியில் ,அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரயில்வே அணியின் நிதின் குமார் சின்ஹாவை வீழ்த்தினார்.ஜூனியர் பெண்கள் (21 வயது) ஹாக்கி 5வது போட்டியில் கான்பெராவில், இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் கான்பெரா சில் அணியிடம் தோல்வியடைந்தது.சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சட்டீஸ்கரில் மோனிஷா 2 கோல் அடித்து கைகொடுக்க தமிழக அணி 2-0 என, சட்டீஸ்கரை வீழ்த்தியது.இரட்டையர் பிரிவு சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 1-3 (6-11, 7-11, 11-9, 9-11) என, சீனாவின் ஜோ கிஹாவோ, சென் ஜுன் சாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முதன்முறையாக ஆசிய ‘அக்கு வாடிக்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நடக்கிறது. 200 மீ., 'பட்டர் பிளை' பிரிவு ஆண்களுக்கான நீச்சல் போட்டி பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 57.90 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெண்கலம் வென்றார்.100 மீ., 'பேக்ஸ்டி ரோக்' பிரிவு ஆண்களுக்கான நீச்சல், பைனலில் பந்தய தூரத்தை 55.23 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 3வது பதக்கம் வெண்கலம். வென்றார்.ஏற்கனவே 2 வெள்ளி வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் தாஸ் (56.24 வினாடி) 4வது இடம் பிடித்தார். 13 பதக்கங்கள் வென்ற இந்தியா, இதுவரை 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 9வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (38 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில்,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி12') தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற் றார். இலக்கை 12.13 வினாடியில் கடந்த இவர், முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று அரையிறுதி நடக்கிறது.இந்தியாவின் ஷர்மிளா பெண்களுக்கான குண்டு எறிதல் (‘எப்57') பைனலில் பங்கேற்றார். அதிகபட்சமாக 10.03 மீ., குண்டு எறிந்த இவர், 5வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அமிஷா ரவாத்,குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் விளையாடி 10.11 மீ., எறிந்து 9வது இடம் பிடித்தார். இந்தியா சார்பில் ஹேனி ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்37') பைனலில் களமிறங் கினார். அதிகபட்சமாக 51.22 மீ மட்டும் வட்டு எறிந்த இவர், 4வது இடம் பிடித்தார்.
நேற்று துவங்கிய கிரிக்கெட் முதல் டெஸ்டில் ஆமாதாபாத் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண் டீஸ் கேப்டன் ராஸ்டன் சேஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 38 ஓவரில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் மட்டும் பின்தங்கியிருந்தது. ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று இந்திய பேட்டர்கள் கைவசம் ,8 விக்கெட் இருக்கும் நிலையில், விளையாடி, வலுவான ஸ்கோரை எட்டலாம்.
இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று துவங்குகிறது.அணியில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டன. ரோகித், கோலி, சுழல்ஜாம்பவான் அஷ்வின் ஓய்வு பெற்று விட்டனர்.சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் செயல்பட சிறப்பாக காத்திருக்கின்றனர் புதிய கேப்டன் சுப்மன் கில், தலைமையில் இந்திய அணி, வழக்கம் போல ஆதிக்கம்செலுத்துகிறது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் (2-2) செய்தது.
இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லேர்னர் டீன் சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். இதில் சின்னர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் (11வது சீசன்) இந்தியாவின்ஆமதாபாத்தில் முதன் முறையாக நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் எனநான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. ஆண்களுக்கான 50 மீ., பட்டர்பிளைபிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர் ரோகித் பெனடிக்சன், 23.89 வினாடிநேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ரோகித், புதிய தேசிய சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், முன்னதாக உலக பல்கலை., விளையாட்டில் 23.96 வினாடி நேரத்தில் வந்து இருந்தார்.ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் பைனல் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,, 49.96 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். இத்தொடரில் ஐந்தாவது பதக்கத்தை ஸ்ரீஹரி வென்றார்
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் சர்வதேசசெஸ் கூட்டமைப்பு சார்பில் ஓபன், பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் ஷர்வானிகா, கியானா, திவி உள்ளிட்டோர் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். தமிழகத்தின் அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா, தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி பெற்றார். கடைசி போட்டியில் தோற்ற போதும் 9.0 புள்ளி பெற்றார். மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர்.டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனார். கடந்த 2024 ல் அல்பேனியாவில் நடந்த உலக 'கேடட்' தொடரில் ரேபிட் பிரிவில் தங்கம், 'பிளிட்ஸ்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். இந்தியா வின் சர்பர்தோ மணி, 8.5 புள்ளி எடுத்து, 10 வயதுகுட்பட்ட ஓபன் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்துஎன, மொத்தம் 8 அணிகள்பங்கேற்கின்றன.ஒவ்வொருஅணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள், நவ. 2ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.இந்திய அணி, தனது முதல் போட்டியில் (இடம்: கவுகாத்தி) இன்று இலங்கையை சந்திக்கின்றது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 5, கொழும்பு), தென் ஆப்ரிக்கா (அக். 9, விசாகப்பட்டனம்), ஆஸ்திரேலியா (அக். 12, விசாகப்பட்டனம்), இங்கிலாந்து (அக். 19, இந்துார்), நியூசிலாந்து (அக். 23, நவி மும்பை), வங்கதேசத்தை (அக். 26, நவி மும்பை) எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு சாதகமாக சொந்த மண்ணில் ஹர் மன்பிரீத் கவுர் தலைமையில் உலகின் 'நம்பர் -3' இந்திய அணி,களமிறங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளுக் கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்இந்தியாவில் நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 46 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரிங்கு சிங், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 66.37 மீ., எறிந்து, சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.இப்பிரிவில் உலக சாதனை (2023ல்) படைத்த இந்தியாவின் சுந்தர் சிங் குர் ஜார், ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 64.76 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிவென்றார். இந்தியாவின் தயவந்தி.பெண்களுக்கான 64 வட்டு எறிதலில் 27.94 துாரம் எறிந்துநான்காவது இடம் பெற, வெண்கல வாய்ப்பு நழுவி, ஆசிய அளவில் இது சிறந்த தூரம் ஆனது. ஆண்கள் குண்டு எறிதல் (எப் 40) போட்டியில் ரஷ்யாவின் டெனிஸ் ஜினெஸ்டிலவ், 3, 4வது வாய்ப்பில் 11.85, 11.92 மீ., துாரம் எறிந்து அடுத்தடுத்து புதிய உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார்.