25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Oct 09, 2025

இந்தியா, சிங்கப்பூர்  ஆசிய கால் பந்து தகுதிச் சுற்றில் சந்திக்க உள்ளது.

சவுதி அரேபியாவில் ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது.  24 அணிகள் இதற்கான மூன்றா வது கட்ட தகுதிச்சுற்றில்பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 134 வதுஇடத்திலுள்ளஇந்தியஅணி 'சி' பிரிவில்ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் இரு போட்டியில் தலா ஒரு டிரா (வங்கதேசம்), தோல்வியுடன் (ஹாங்காங்) 1 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் கடைசியாக உள்ளது. இன்று தனது மூன்றாவது போட்டியில் தரவரிசையில் 158 வது இடத்திலுள்ள சிங்கப்பூர் அணியை அதன் சொந்த மண்ணில் (கல்லாங்) சந்திக்க உள்ளது. இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தால் மட்டுமே ஆசிய கோப்பை செல்ல முடியும் . 

Oct 09, 2025

தெலுங்கு டைட்டன்ஸ் புரோ கபடி லீக் 12வது சீசன் போட்டியில்  வெற்றி !

புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, பெங்கால், பாட்னா என, 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஹரியானா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஹரியானா வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி முடிவில் 26-16 என முன்னிலையில் இருந்தது.ஆட்ட நேர முடிவில் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற கணக்கில், தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 'ஆல்-ரவுண்டர்' பாரத் (20 புள்ளி), கேப்டன் விஜய் மாலிக் (8) கை கொடுத்தனர். ஹரியானா சார்பில் மயங்க் சைனி 5, கேப்டன் ஜெய்தீப், வினய் தலா 4 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 13 போட்டியில், 8 வெற்றி, 5 தோல்வி என, 16 புள்ளிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ஏழாவது தோல்வியை பெற்ற ஹரியானா (12 புள்ளி) 8வது இடத்தில் உள்ளது.

Oct 09, 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடரில் காலிறுதியில் இந்தியா .

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,  மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.இந்திய அணி, 'எச்' பிரி வில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ. அணிகள் மோதி, இந்திய அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியாவின் உன்னதி ஹூடா. தான்வி சர்மா, சூர்யாக் ஷ்ரவாத் ஒற்றையரில் வெற்றி பெற்றனர். முதலிரண்டு போட்டியில் நேபாளம், இலங்கையை வீழ்த்திய இந்தியா, வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது .இந்தியா, தென் கொரியா அணிகள் இன்று நடக்கும் காலிறுதியில் மோதுகின்றன

Oct 09, 2025

பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தான்யா,அன்மோல் கார்ப் வெற்றி பெற்றனர்..

பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தான்யா, சீன தைபேவின் ஹுவாங்கை சந்தித்தார். 45 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தான்யா, 22-20, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீன தைபேவின் லின் ஹி மோதி,. அன்மோல் 23-21, 11-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென், ஜப்பானின் நரவோகாவை ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் எதிர்கொண்டார்.. 57 நிமிடம் நடந்த போட்டியின் முடி வில் லக்சயா 15-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்

Oct 08, 2025

ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தொடர்அமெரிக்காவில் ,ஒற்றையர் பிரிவு  பைனலில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் தக்சினேஸ்வர், இத் தொடரின் "நம்பர்-8' வீரர், ஜப்பானின் ஷுன்சுகே மிட்சுயை எதிர்கொண்டார்.முதல் செட்டை தக்சினேஸ்வர், 6-0 என எளிதாக கைப் பற்றினார். , அடுத்த செட்டையும் என 6-3 வசப்படுத்தி னார். முடிவில் தக்சி னேஸ்வர், 6-0, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 

Oct 08, 2025

தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடியில் வெற்றி !

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன்  இந்தியாவில், நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் ,போட்டியின் துவக்கத்தில் 3-2 என முந்தியது தமிழ் தலைவாஸ். இதன் பின்வரிசையாக அவுட்டாக, 9 வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 'ஆல் அவுட்டானது'. 10-13 என பின்தங்கியது.தமிழ்தலைவாஸ் அணிக்கு அர்ஜுன் தேஜ்வல் அடுத்தடுத்து புள்ளியுடன் திரும்ப, பாட்னா அணியை இரு முறை ஆல் அவுட்டாக்கி பதிலடி தந்தது. முதல் பாதியில் 30-19 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார். முடிவில் தமிழ்தலைவாஸ்  அணி 56-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 28 முறை 'ரெய்டு' சென்ற அர்ஜுன் போனஸ் புள்ளி 5 உட்பட, மொத் தம் 26 புள்ளி பெற்றுஅணியின் வெற்றிக்கு கை கொடுத்தார். 

Oct 08, 2025

30 ஆண்டுகளுக்கு பின் செஸ் ஜாம்பவான்கள் ஆனந்த், காஸ்பரோவ் மோத உள்ளனர்.

முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 53. ரஷ்யா வின்கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் அமெரிக்காவில் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லூசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் நடக்கும். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.28 கோடி.காஸ்பரோவ் ஆறு முறை (1985, 1986, 1987, 1990, 1993, 1995) உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்செஸ் அரங்கில் ஆனந்த் ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012), உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்1995 இல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் மோதினர். நியூயார்க்கின் பழைய உலக வர்த்தக மையத்தின் 107வது மாடியில் இருவரும் மோதிய இப்போட்டியில் காஸ்பரோவ்  சாம்பியன் ஆனார். மொத்தம் 12 போட்டி முடிவில் முதலிடம் பெறும் வீரருக்கு ரூ.62 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற் றால் ரூ. 44 லட்சம் தரப்படும். ஒருவேளை இருவரும் சம புள்ளி பெற்றால், தலா ரூ. 53 லட்சம் என சமமாக வழங்கப்படும்.

Oct 08, 2025

ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' ஐ.சி.சி., தரவரிசையில்  …..

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.அடுத்த இரு இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட் (731), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (713) உள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், (612), 16 வது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அரைசதம் அடித்த தீப்தி சர்மா (610) ஒரு இடம் (17) முந்தினார்.கடந்த இரு போட்டியில் சிறப்பாக செயல் பட்ட ஹர்லீன் (48, 46 ரன்) 7 இடம் முன்னேறி 38 வது இடம் பிடித்தார்

Oct 08, 2025

உலக ஜூனியர் பாட்மின்டனில், இந்தியாவெற்றி.

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,  மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ ), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கையை சந்தித்தது. இதில் இந்திய அணி 2-0 (45-27, 45-21) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் உன்னாதி ஹூடா, ரக்ஷித்தா ஸ்ரீ உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 

Oct 07, 2025

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை தங்கம் வென்றார்  அருந்ததி சவுத்ரி .

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை முதல் சீசன் சென்னையில்,  நேற்று பெண்களுக்கான ,65-70 கிலோ பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரி 5-0 என, அனைத்து இந்திய போலீஸ் (ஏ.ஐ.பி.) அணியின் ஸ்னேஹாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.அசாம் வீராங்கனை அங்குஷிதா 3-2 என, ராஜஸ்தானின் பார்த்வி கிரேவலை,  60-65 கிலோ பிரிவு பைனலில், வென்று  தங்கத்தை  கைப்பற்றினார்.இந்திய விளையாட்டு ஆணையம் அணியின் 57-60 கிலோ பிரிவு பைனலில் ,பர்வீன் ஹூடா 3-2 என, ஹரியானாவின் பிரியாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

1 2 ... 114 115 116 117 118 119 120 ... 188 189

AD's



More News