உலக ஸ்னூக்கர் கத்தார் தலைநகர் தோஹாவில் (15-'ரெட்') பைனலில், இந்தியாவின் அனுபமா 23, ஹாங்காங்கின் இங் ஆன் யீ மோதினர். சென்னை வீராங்கனை அனுபமா 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
நவ.15-26ல் காது கேளா தோருக்கான ஒலிம்பிக்போட்டி ,ஜப்பான்தலைநகர் டோக்கியோவில், ('டெப்லிம் பிக்ஸ்') ,இந்தியா சார்பில் முதன் முறையாக 111 பேர், தடகளம், பாட்மின்டன், கோல்ப், ஜூடோ உள் ளிட்ட 11 வகையானபோட்டிகளில் பங்கேற்கின்றனர்.துவக்க விழா அணி வகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை பாட்மின்டன் வீராங்கனை, தமிழகத்தின் ஜெர்லின் அனிகா 21, ஏந்தி வரவுள்ளார். மதுரை சேர்ந்த இவர், 3வது முறை யாக (2017, 2022, 2025) ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார்.கடந்த 2022ல் பிரேசிலில் நடந்த போட்டியில் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார். இதனையடுத்து 2022ல் நாட்டின் உயரிய அர்ஜுனா விருதை வென்றார்.ஜெர்லின் கூறுகையில், "இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்ல இருப்பதுமிகப் பெரிய கவுரவம். இது, எனது கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன்," என்றார். இந்தியா சார்பில் 2022 இல் பிரேசிலில் நடந்த போட்டியில் 65 பேர் பங்கேற்றனர். இதில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கம்கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 9வது இடம் பிடித்தது.
பார்வை குறைபாடு உள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்தி ரேலியா, இலங்கை, நேபாளம் 7 உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 209 ரன் குவித்தது.ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 57 ரன் னுக்கு தோல்வி யடைந்தது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் தீபிகா தட்டிச் சென்றார்.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோகி வடனாபே மோதினர். மொத்தம் 39 நிமிடம் போட்டியில் லக்சயா சென் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் பிரனாய் மற்றொரு போட்டியில் 16-21, 21-13, 23-21 என மலேசியாவின் ஜூன் ஹாவோ லியோங்கை வீழ்த்தினார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் 20-22, 10-21 என, மலேசியாவின் ஜிங் ஹாங் கோக்கிடம் தோல்வியடைந்தார்.
போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்கு வாஷ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ,பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ராதிகா சீலன் 3-0 (11–7, 11-3, 11-3) என்ற நேர் செட் கணக்கில், தாய்லாந்தின் அனன்டனாவை வீழ்த்தினார்.சீன ஓபன் ஸ்குவாஷ் தொடர் ஷாங்காய்நகரில்,பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் 1-3 என்ற செட் கணக்கில் உலகின் 'நம்பர்-15' வீராங்கனை, எகிப்தின் சனா இப்ராஹிமிடம் தோல்வியடைந்தார்.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில், காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது.இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி காலிறுதியில் 159–155 என வியட்நாமை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதி யில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.இந்திய அணி 156-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்ஷிகா குமாரி, யாஷ் தீப் சஞ்சய் ஜோடி, 0–6 என சீன தைபே ஜோடி யிடம்தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்க உள்ளது.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 'ரைபிள் 3' பொசிசன்ஸ் பிரிவில் தகுதிச்சுற்று நடந் தது. இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், 'நீலிங்' (200), 'புரோன்' (200) பிரிவில் முழு புள்ளி பெற்றார். அடுத்து 'ஸ்டாண்டிங்' பிரிவில் (197) மொத்தம் 597 புள்ளி பெற்று, முதலிடம் பெற்றார். உலக சாதனையை சமன் செய்தார்.மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (592) 5வது இடம் பெற, இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.பைனலில் ஐஸ்வரி பிரதாப் சிங் (466.9) 0.2 புள்ளி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டார். சீனாவின் யுகுன் லியு (467.1) தங்கம் வென்றார். நீரஜ் (432.6) 5வது இடம் பிடித்தார். இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கத்துடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா நீடிக்கிறது.
உலக கோப்பை செஸ் 1வது சீசன் கோவாவில். மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரனவ், கார்த்திக் வெங்கடராமன் என 5 வீரர்கள்,நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோவை, நேற்று துவங்கிய நான்காவது சுற்றில்சந்தித்தார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் இருவரும் 'டிரா' செய்ய சம்மதித்தனர். ஸ்கோர் 0.5-0.5 என சமனில் உள்ளது.பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனில் டுபோவை எதிர்கொண்டு துவக்கத்தில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, 41 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். பிரனவ்-உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், ஹரிகிருஷ்ணா - சுவீடனின் கிரான்டெலியஸ், கார்த்திக்வெங்கடராமன்-சீனாவின் லியம் லீ மோதிய முதல் போட்டிகள் நான்காவது சுற்றில் 'டிரா' ஆகின.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,தனிநபர் பெண்களுக்கான நடக்கிறது. தனிநபர் பெண்களுக்கான ரீகர்வ் பிரிவு போட்டி நடக்கின்றன. காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, 7-3 என தென் கொரியாவின் லீ காயுனை வீழ்த்தினார். இந்தியாவின் அன்கிதா, மற்றொரு போட்டியில் 6-4 என தென் கொரியாவின் ஜன் மிங்கியை சாய்த்தார். இந்தியாவின் சங்கீதா, 7-1 என ஈரானின் ஜாரேவை வென்றார். மூவரும் அரையிறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா,தனிநபர்ஆண்களுக்கான ரீகர்வ், பிரிவு காலிறுதியில் ,6-5 என கஜகஸ்தானின் சடிகோவை வென்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ராகுல் 6-2 என சீன தைபேவின் லீன் சியாங்கை சாய்த்தார்.
இந்தியாவின் ஜோதி தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் 147 -145 என தென் கொரியாவின் யூக்யுனை வீழ்த்தினார். மற்றொரு போட் டியில் இந்தியாவின் பிரித்திகா 148-146 என சக வீராங்கனை சிகிதாவை வென்றார்.இந்தியாவின் அபிஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில் 235-234 என மலேசியாவைவீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்து மோதின.இப்போட்டி 235-235 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' இந்திய ஆண்கள் அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.இந்திய பெண்கள் அணி காலிறுதியில்'ரீகர்வ் பிரிவில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. அன்ஷிகா குமாரி, அன் கிதா, சங்கீதா இடம் பெற்ற இந்திய அணி, 4-4 என சமன் செய்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 24-27 என தோற்றது.