25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Nov 08, 2025

செஸ் உலககோப்பை 11வது சீசன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், பிரனவ் வெற்றி.

செஸ் உலககோப்பை 11வது சீசன் கோவாவில் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன் குகேஷ், அர்ஜுன் உட்பட 10 இந்திய வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.நேற்று மூன்றாவது சுற்றின் முதல் போட்டி நடந்தது. இந்திய வீரர் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதினை சந்தித்தார். அர்ஜுன், 30வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 1.0-0 என முன்னிலை பெற்றார். இன்று இரண்டாவது போட்டியை 'டிரா' செய்தால், நான்காவது சுற்றுக்கு முன்னேறலாம்.இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, முதல் போட்டியில் பெல்ஜியத்தின்  டேனியலை 1.0-0 வென்று என முன்னிலை பெற்றார். இந்திய வீரர் பிரனவ், லிதுவேனியாவின் திதாசை 102வது நகர்த்தலில் வென்றார். குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக்கை சந்தித்தார். குகேஷ், 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். கடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் பங்கேற்ற, இந்தியாவின் பிரக்ஞா னந்தா, ஆர்மேனியாவின் ராபெர்ட்டை எதிர்கொண் டார்.பிரக்ஞானந்தா, 30 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.

Nov 08, 2025

தேசிய சப்-ஜூனியர் கால்பந்து தொடரில் தமிழக அணி வெற்றி பெற்று, அடுத்த கட்ட சுற்றுக்கு தகுதி பெற்றது.

தேசிய சப்-ஜூனியர் கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. தமிழக அணி 'டையர்-2'ல் 'டி' பிரிவில் புதுச்சேரி, மத்திய பிரதேசத்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது.சத்தீஷ்கரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதின.   இப்போட்டியில் தமிழக அணி 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த கட்ட சுற்றுக்கு தகுதி பெற்றது. 

Nov 07, 2025

T-20 தொடரில் நான்காவது போட்டியில், இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்டு கோஸ்டில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 167/8 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் 18.2 ஒவரில் 119 ரன்னுக்குஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இந்தியா, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை அக்சர் படேல் (21 ரன், 2 விக்கெட்) வென்றார். ஐந்தாவது போட்டி நாளை  பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.  

Nov 07, 2025

உலக கோப்பை வென்றஇந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி  திரவுபதி முர்மு பாராட்டு.

 நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை ,உலக கோப்பை வென்றஇந்திய பெண்கள் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, வீராங்கனைகள் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினர். 'பல்வேறு பகுதிகள், வித்தியாசமான சமூக பின்னணி, சூழல்களில் இருந்து வந்து, இந்தியா என ஒரு அணியாக விளையாடி சாதித்துள்ளீர்கள் ., இளம் தலை முறையினர், பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக அமைந்துள்ளது, ' என ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 07, 2025

ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில் நியூசிலாந்து அணி  வெற்றி .

வெஸ்ட் இண்டீஸ் அணிநியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில்பங்கேற்று,முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நேற்று இரண்டாவதுபோட்டி ஆக்லாந்தில் 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிபீல்டிங்தேர்வு செய்தது.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 207/5 ,வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 204/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

Nov 06, 2025

டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடரில்அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி.

டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ,உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.இதன் 'ஸ்டெபி கிராப்' பிரிவில் உலகின் 'நம்பர் -1' சபலென்கா (பெலா ரஸ்), 'நடப்பு சாம்பியன்' கோகோ காப் (அமெ ரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவோலினி (இத்தாலி) இடம் பெற்றுள்ளனர்.முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சகவீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வியடைய, இரண்டாவது போட்டியில் கோகோ காப், ஜாஸ் மின் பாவோலினியை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று,முதல் வெற்றியைபதிவு செய்தார்.2வது மற்றொரு போட்டியில் அரினா சபலென்கா 6-4, 2-6, 6-3 என ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவுசெய்தார்.

Nov 06, 2025

கிரிக்கெட் முதல் T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்று நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 17 ஓவரில் 109/9 ரன் எடுத்தது. கடைசி 18 பந்தில் 56 ரன் தேவைப்பட்டன.  கடைசியில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 157/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 

Nov 06, 2025

உலக கோப்பை செஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் குகேஷ் .

உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.உலக சாம்பியன் குகேஷ், கஜகஸ்தானின் நோகெர்பெக் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.நேற்று இரண்டாவது போட்டியில் குகேஷ் , துவக்கத்தில் தடுமாறிய போதும், 59வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். குகேஷ்,1.5-0.5 என வென் று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் அர்ஜுன்,மற்றொரு போட்டியில் ,பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை வீழ்த்தினார். 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.  

Nov 06, 2025

சர்வதேச ' டி -20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில்அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, 'நம்பர்-1'

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.,) ,சர்வதேச ' டி -20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை துபாயில் வெளியிட்டது. இந்தியாவின் அபிஷேக் சர்மா,பேட்டர் தரவரிசையில் 925 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.மற்ற இந்திய வீரர்களான திலக் வர்மா (788 புள்ளி, 3வது இடம்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (696 புள்ளி, 8வது இடம்) 'டாப்-10' பட்டியலில் உள்ளனர்.இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ,பவுலர் பட்டியலில் 799 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் (625), அக்சர் படேல் (617) முறையே 15, 17வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா ,'ஆல்-ரவுண்டர்' தர வரிசையில் (219) 2வது இடத்தில் இருந்து ,4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜிம்பாப்வேயின்சிக்கந்தர் ராஜா (251) 2வது இடத்துக்கு முன்னேறினார். 

Nov 06, 2025

பிரதமர் மோடி ,உலக கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் அவரது இல்லத்தில் சந்திப்பு.

நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெண்கள் உலக கோப்பை தொடரில் முறையாக முதன் சாம்பியன் ஆகி புதிய வரலாறு படைத்தது.இந்திய அணி வீராங்கனைகள், தாஜ் ஓட்டலில் தங்கி, நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.வீராங்கனைகள் அனைவரும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'லோகோ' பொறித்த, 'நேவி புளு' நிறத்தினால் ஆன 'கோட்', 'சூட்'  அணிந்தருந்தனர். உலக கோப்பை தொடரில் அரையிறுதி, பைனலில் பங்கேற்று, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா, காலில் காயமடைந்த பிரதிகா, வீல் சேருடன் வந்திருந்தார்.உலக கோப்பையை ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, மோடியிடம் வழங்கினர். மோடியை குறிக்கும் வகையில், 1ம் எண் கொண்ட, 'நமோ' என்ற பெயர் பொறித்த, நீல நிறஜெர்சியை வழங்கினர். இதில் இந்திய அணி வீராங்கனைகள் அனை வரும் கையெழுத்திட்டு இருந்தனர். வீராங்கனை களுக்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்தார். தங்களது வெற்றி அனுப வங்களை வீராங்கனைகள் பகிர்ந்துகொண்டனர். 

1 2 ... 105 106 107 108 109 110 111 ... 188 189

AD's



More News