25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jan 08, 2025

அமீர்கான் படத்தில் சிவகார்த்திகேயன்

சிவ கார்த்திகேயன் அளித்த பேட்டியில் "அமீர்கான் என்னை அழைத்து அவரது தயாரிப்பில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும்படி கூறினார். என்  கைவசம் உள்ள படங்களை முடித்ததும், அவர் தயாரிப்பில் நடிப் பேன்" என்றார். இதன்மூலம் பாலிவுட்டில் களமிறங்க  உள்ளார் சிவகார்த்திகேயன். அமரன் படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ், சுதா கெங்கரா, சிபி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன். 

Jan 01, 2025

விஜய் சேதுபதி நடித்த முதல் தமிழ் திரைப்படம்  “மகாராஜா” 10 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்தது சீன பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதித்துள்ளது.

மகாராஜா தமிழ் திரைப்படம் ஒரு அசாதாரண நிகழ்வில் தனது மகளுக்கு நீதி தேடும் ஒரு மனிதனைச் சுற்றி வருகிறது. நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பாதிக்கப்பட்டவரின் உண்மையான தந்தை முக்கிய எதிரியாக இருப்பதைக் காணலாம். இப்படத்தில்விஜய்சேதுபதி, அனுராக்காஷ்யப், மம்தாமோகன்தாஸ், சச்சனா நமிதாஸ், திவ்யபாரதி, அபிராமி, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 14, 2024 அன்று இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் தற்போது Netflix இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பாருங்கள். இப்படம் சமீபத்தில் வெளிநாட்டு சந்தையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியதுவர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, ஒரு வெளிநாட்டு சந்தையில் இவ்வளவு நல்ல வியாபாரம் செய்த முதல் தமிழ் திரைப்படம் மகாராஜா. இப்படம் சீனாவில் நவம்பர் 29, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட அண்டை நாட்டில் சிறப்பாக செயல்பட்டது.  டிக்கெட் விண்டோஸில் படம் பலமான வேகத்தில் தொடர்வதால், படம் விரைவில் சீனாவில் ரூ 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Jan 01, 2025

2025 ஆண்டு சிறிய பட்ஜெட் படங்களுடன் புதிய வெளியீடுகள் ஆரம்பமாகின்றன

2024ல் தமிழில் 230 படங்கள் வெளியாகின. 2025ல் அதை விட அதிக படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.  2025 ஆண்டு  முதல் வெள்ளிக்கிழமையான ஜன., 3ல்  "பயாஸ் கோப், எக்ஸ்ட்ரீம், கலன், லாரா" ஆகிய படங்கள் வெளியாகின்றன.  

Jan 01, 2025

கேம் சேஞ்சர்' படம் ஜன.10ல் ரிலீசாகிறது .

 படம் ஜன.10ல் ரிலீசாக உள்ள  ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ளனர்.  இப்பட விழாவில் பேசிய ஷங்கர், "30 ஆண்டுகளாக திரை வாழ்வில் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு அளித்து வரும் அன்பிற்கு நன்றி. இந்த படத்தை எனது பாணியில் தனித்துவமான ஒரு கதையில் இயக்கி இருக்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' ராம்சரண் மூன்று விதமான கெட்டப் புகளில் நடித்திருக்கிறார்.

Jan 01, 2025

 'சன்னிதானம் பி.ஓ' . 5 மொழிகளில் வெளியாகிறது.

அமுதா சாரதியின் வசனம். இயக்கத்தில் உருவாகி வரும் 'சன்னிதானம் பி.ஓ' படத்தில் யோகி பாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் மூவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இயக்குனர் கூறுகையில், ''சபரிமலைக்கு பயணிக்கும் பக்தர்கள் செல்லும் வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இத்திரைப்படம். தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் 5 மொழிகளில் கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Jan 01, 2025

'மார்க் ஆண்டனி -2'

கடந்தாண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால்,எஸ். ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி  வரவேற்பை பெற்ற படம் 'மார்க் ஆண்டனி'. தொடர் தோல்வியை சந்தித்த விஷாலுக்கு இப்படம் வெற்றி தந்தது. இந்த படத்தின் 2ம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அஜித்தின் 'குட் பேட் அக்லி' பட வேலைகளில் உள்ள ஆதிக், அதை முடித்ததும் மார்க் ஆண்டனி 2 பட பணியில் இறங்க உள்ளார்.

Jan 01, 2025

யார் படத்தில் அஜித் நடிப்பார் .வெங்கட் பிரபு ? சிவா ?

அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்கள் அடுத்தாண்டு வெளி யாக உள்ளன. இதையடுத்து கார் ரேஸில் பங்கேற்கும் அஜித் அதை முடித்ததும் ஐந்தாவது முறையாக மீண் டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் இப்போது வெங்கட் பிர புவும் அஜித்திடத்தில் ஒரு கதை சொல்லியிருக்கி றாராம். இவர்களில் யார் படத்தில் அஜித் நடிப்பார் என்பது தெரியவரும். விரைவில்.

Dec 25, 2024

'மகாராஜா' இயக்கிய நித்திலன் சாமிநாதனருக்கு சொகுசு கார் பரிசு

 ரூ.100 கோடிக்கு மேல் வசூலை கடந்த விஜய் சேதுபதியின் 50வது படமாக இந்தாண்டு வெளியான படம் 'மகாராஜா'. நித்திலன் சாமிநாதன் இயக்கினார்.. இப்போது சீனாவிலும் 80 கோடி வசூலை கடந்துள்ளது. மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். 

Dec 25, 2024

சிறந்த நடிகர்  விஜய் சேதுபதி, சிறந்த நடிகை சாய் பல்லவிக்கு விருது

மகாராஜா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், அமரன் படத்திற்காக சிறந்த நடிகை சாய் பல்லவி, சிறந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் விருது  சென்னையில் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பெற்றனர். இவர்கள் தவிர அரவிந்த்சாமி(மெய்யழகன் படம்), தினேஷ்(லப்பர் பந்து படம்) உள்ளிட்ட பலரும் விருது பெற்றனர். 

Dec 25, 2024

நடிகர் தனுஷ் சந்திரபாபு வாழ்க்கை  வரலாறு படத்தில் நடிக்க உள்ளார் .

 தமிழ் சினிமாவில் நடிகர், காமெடியன், இயக்குனர்., பாடகர் 60, 70 கால கட்டத்தில் கலக்கியவர் சந்திரபாபு.1974ல் அவர் இயற்கை எய்தினார். இவரின் வாழ்க்கையை படமாக உருவாக்க நடிகர் தனுஷ் அவரது வேடத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கான பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே இசையமைப்பாளர் இளைய ராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 2 ... 62 63 64 65 66 67 68 ... 89 90

AD's



More News