25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Nov 27, 2024

ரீ ரிலீஸ் ஆகும் 'குணா' படம்

  'குணா' படம் நல்ல விமர்ச னங்களை பெற் றாலும், வெற்றி பெறவில்லை.. இப்படத்தில் உள்ள 'கண்மணி அன்போடு' பாடல் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இடம்பெற்றிருந்தது. அப்படம் ஹிட்டானதற்கு அப்பாடலும் ஒரு காரணம். இதனால் குணா படம் பற்றிய பேச்சுகளும் பரவலானது. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991ல் வெளிவந்த படம் 'குணா' .இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு பிறகு 'குணா' படத்தை முதல் முறையாக ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். நவ., 29ல் படம் வெளியாகிறது.

Nov 27, 2024

 'பைரதி ரணங்கள்'நவ.29ல் தமிழில் ரிலீஸ்

கன்னடத்தில் சிவராஜ் குமாரின் வெற்றி படமான 'மப்டி' படத் தின் இரண்டாம் பாகம் 'பைரதி ரணங்கள்' எனும் தலைப்பில் உருவானது. நாரதன் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், சாயா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். சில வாரங்க ளுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்ப டம் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் நவ. 29ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Nov 27, 2024

மலையாள படங்களுக்கு இசையமைக்க தயார்".

இளையராஜா கூறுகையில், "மலையாள படங்களில் இசையமைக்க ஆசைதான். ஆனால் அங்கு வீட்டிற்கு ஒரு இசையமைப்பாளராவது இருக்கிறார்கள். அவர்களே இசையை உருவாக்க துவங்கி விட்டார்கள். 1978ல் 'வியாமோகம்' படம் மூலம் மலையாளத்தில் கால்பதித்தார் இசையமைப்பாளர் இளையராஜா. அதன் பிறகு 'யாத்ரா, மைடியர் குட்டிச்சாத்தான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் தமிழில் பிஸியானதால், மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க வில்லை.மலையாள படங்களுக்கு இசையமைக்க அழைத்தால் நிச்சயம் தயாராக இருக்கிறேன்" என்றார்.

Nov 27, 2024

ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்

 டாக்டர், பீஸ்ட்,கோலமாவு கோகிலா, ஜெயிலர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக மீண்டும் ரஜினியை வைத்து 'ஜெயிலர் 2' படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும் ,தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார். இதற்காக ஜூனியர் என்டிஆரிடம் கதை சொல்லி ஓகே செய்துவிட்டாராம்.

Nov 27, 2024

"கலகலப்பு 3 "யை இயக்கப்போகிறார் சுந்தர் சி.

 கலகலப்பு 3யை இயக்கப்போகிறார் சுந்தர் சி. இதுபற்றி சுந்தர் சியின் மனைவி, நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், "துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி உடன் இணைந்து கலகலப்பு 3 படத்தை நாங்களும் தயாரிக்கிறோம். அடுத்தாண்டில் படம் ரிலீஸாகும். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு' ,கலகலப்பு  2' படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன .

Nov 20, 2024

ரூ.300 கோடி வசூலை நெருங்கிய 'அமரன்' படம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கி உள்ளது. இயக்குனர் கூறுகையில், "கதையில் பல காமெடி காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளை வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வாழ்க்கை குறித்த கதை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தோன்றியதால் காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன்” என்றார். 

Nov 20, 2024

2024ல் வெளியான திரைப்படங்கள் 200ஐக் கடந்தது

தமிழ் சினிமாவில் 2023ல் 240 படங்கள்.வெளியானது. ஆனால் இந்தாண்டு இது வரை 200 படங்களே வெளியாகியுள்ளன. அதில் பெரிய நடிகர்களின் படங்களே எதிர்பாராத வசூலை பெறாமல் ரசிகர்களை ஏமாற்றியது. ஒரு சில படங்கள் மட்டும் ஹிட்டானது. 2024 முடிய இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் டிச.20ல் வெளியாகும் 'விடுதலை 2' பெரிய பட்ஜெட் படம். அதாவது ஹிட் கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Nov 20, 2024

ரஜினி பிறந்த நாளில் 'தளபதி' ரீ ரிலீஸ்

1991ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்து வெளியான படம் 'தளபதி'. 33 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி திரைப்ப டம் முதல்முறை யாக ரஜினியின் பிறந்த நாளான டிச.12ல் புதுப் பொலிவுடன் வெளியிடுவதாக அறிவித்துள்ள னர். பெரும்பா லும் ரஜினி பிறந்த நாளில் பாட்ஷா, சிவாஜி, பாபா ஆகிய படங்கள் தான் ரீ ரிலீஸ் ஆகும். இந்தாண்டு தளபதி படம் ரீ ரிலீஸ் ஆகிறது.  

Nov 20, 2024

வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்

'விருமன்' படம் மூலம் தமிழில் அறிமுகமான அதிதி ஷங்கர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே 'பைரவம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்கத்தில் பெல்லம் கொன்டா சீனிவாஸ் நடிக்கும் இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் அதிதி நடிக்கிறார். இப்படம் தமிழில் வெளி வந்த 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக். 

Nov 20, 2024

16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால்.

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் 2008ல் 'டுவென்டி  20' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாகினர். தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ  போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது. 

1 2 ... 65 66 67 68 69 70 71 ... 89 90

AD's



More News