25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

May 28, 2026

5வது ரூ.100 கோடி வசூலித்த ,மோகன்லால் 'திரிஷ்யம் 3'. படம்.

மோகன்லால், மீனா நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மே 21ல் வெளியான படம் 'திரிஷ்யம் 3'. கலவையான விமர்சனங்கள் வந்தாலும்,வசூல்சிறப்பாக உள்ளது.58 மணிநேரத்தில்ரூ.100 கோடிவசூலைக்கடந்துள்ளது. 'லுலூசிபர், புலி  முருகன், தொடரும், எல் 2 எம்புரான்' ஆகிய படங்களை தொடர்ந்து மோகன்லாலுக்கு இது 5வது ரூ.100 கோடி வசூல் படமாகும்.

May 28, 2026

த்ரிஷாவுக்கு 'கருப்பு ஸ்டார்' பட்டம்... ரசிகரின் பதிவுக்கு 'குந்தவை' கொடுத்த எக்ஸ்பிரஷன்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா கூட்டணியில் வெளியாகி தியேட்டர்களில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளதால் த்ரிஷா செம்ம குஷியில் உள்ளார்.இந்நிலையில், த்ரிஷாவின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தின் தலைப்பை மையமாக வைத்து, அவருக்கு 'கருப்பு ஸ்டார்' என்ற புதிய பட்டத்தைச் சூட்டியுள்ளார். ரசிகரின் இந்த பாசமான பதிவைக் கவனித்த த்ரிஷா, "இது ரொம்ப அழகா இருக்கு... தேங்க்யூ" எனத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ரீ-ட்வீட் செய்து பதிலளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

May 28, 2026

விஜய் ஆண்டனி நடித்து வெளிவர உள்ள 'அப்பா குட்டி'

விஜய் ஆண்டனி  'அப்பாகுட்டி'படத்தில், மு.மாறன் இயக்கத்தில் நடித்து ,இதற்கு 'அப்பாகுட்டி' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். தந்தை மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் குடும்ப படமாக உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

May 28, 2026

கோடை விடுமுறையில் படங்கள் வெளியீடும் குறைந்து விட்டது.

கோடைவிடுமுறையில்அதிகபடங்களைவெளியிட்டு,. 'கருப்பு' தவிர்த்துவெளியானமற்றபடங்கள்எதுவும்வசூலை அள்ளவில்லை.படங்கள் வெளியீடும் குறைந்துவிட் டது. மே 28, 29 முறையே அர்ஜூனின் 'பிளாஸ்ட்', மறைந்த ரோபா சங்கர் ஹீரோவாக நடித்த 'ஈகோ ராமன்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

May 28, 2026

பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகி, இயக்கி,  நடிக்க உள்ளார் .

.பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும் வெற்றியாளராக வலம் வருகி றார். பிரதீப் ரங்கநாதன் நடிகராக, அவரது 3 படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து  வெற்றியாளராக வலம் வருகி றார் .  சத்தமின்றி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி ,தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்க உள்ளார் பிரதீப்., மமிதா பைஜூ நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.

May 21, 2026

'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரீஸ் மீண்டும் வருகிறது.

 மணி ஹெய்ஸ்ட்'உலகின் பிரபலமான வெப் சீரீஸ்,. உலகளவில் அதிகமான நபரால் பார்க்கப்பட்ட வெப் தொடரும் இது. இப்போது அடுத்த சீசனுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்க சுரங்கம், தங்கம் கொள்ளை தொடர்பான கதை என கூறப்படுகிறது.மணி ஹெய்ஸ்ட்'டீசரில் 'புரட்சி ஒருபோதும் முடிவதில்லை' என வாசகம் இடம் பெற்றுள்ளது. 

May 21, 2026

'மா இண்டி பங்காரம்'ஜூன் 19ல் சமந்தா படம் ரிலீஸ் 

 சமந்தா கதையின் நாயகியாக  நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடித்து, தயாரித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'.ஆக் ஷன் பின்னணியில் சஸ்பென்ஸ் படமாக உருவாகி உள்ளது.  படப் பணிகள் முடியாததால் ,நேற்று படம் வெளியாக வேண்டிய. ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது ஜூன் 19ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

May 21, 2026

அய்யாவு இயக்கத்தில் 'கட்டா குஸ்தி 2' ரிலீஸ்.

 'கட்டா குஸ்தி'விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்2022ல் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம்.. இதே கூட்டணியில் தற்போது 'கட்டா குஸ்தி 2' உருவாகிறது. 'சம்பாதிக்கிறது மட்டும் வேலை இல்ல, வீட்டை சமாளிக்கிறதும் புல்டைம் வேலை தான்..' எனக் குறிப்பிட்டு,  படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு ,ஜூலை 3ல் அறிவித்துள்ளனர்.

May 21, 2026

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்,ஒரே நாளில் 2,048.99 கோடிவசூல்.

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'MICHAEL', உலகம் முழுவதும் முதல் வார இறுதியில் $217.4 மில்லியன் வசூல் செய்து வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாக ,பிரம்மாண்ட சாதனையைப் படைத்த  ஒரு பயோபிக் (Biopic) வகைத்திரைப்படம் .அன்டோயின் ஃபுகுவா இயக்கத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் மகன் ஜாபர் ஜாக்சன் நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது.

May 21, 2026

ஜூலை 17ல் ரிலீஸ் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி'.

கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் 'தி ஒடிசி '. டாம் ஹாலண்ட், அன்ன ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சரித்திர பின்னணியில் உருவாகி ,சதிகாரர்களால் துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் மீண்டும் தன் ஆட்சியை பிடிப்பது மாதிரியான கதை. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஜூலை 17ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 89 90

AD's



More News