சிவகார்த்திகேயன் தயாரித்த 'தாய் கிழவி' படம் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஹிட்டானது. அடுத்து அதே இயக்குனர் படத்தில், கமல் தயாரிக்க, சிவ கார்த்திகேயன் 'சேயோன்' படத்தில் நடிப்பதாக , பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு துவங்கும் மூன்று மாதங்களில் படப்படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.என அறிவிக்கப்பட்டுள்ளது.
'அம்மா அறியான்' என்ற மலையாள ஆவணப்படம் ,கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்றது.இது 1986ல் ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் உருவானது. பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனாலும், சினிமா கற்கும் மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தேசிய திரைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிரின்ட்களை வைத்து '4கே' தரத்தில் புதுப்பித்து இப்போது திரையிட்டதில் பாராட்டை பெற்றது.
கார்த்திக் சுப்ப ராஜ்.'பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட' என இது வரை 9 படங்களை இயக்கியுள்ளார் .தன் படங்களில் இளைய ராஜாவின் பழைய பாடல்களை பயன் படுத்தி வந்த இவர், தன் 10வது படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். படத் தலைப்பு உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகிறது.இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ், கனவு 10 ஆசீர்வாதம் 1540' எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது இளையராஜாவின் 1540வது படம் இது.
மீராகதிரவன் இயக்கத்தில், இயக்குனர் கஸ்தூரி ராஜா நடித்திருக்கும் படம் 'ஹபீபி'. மே 28ல் ரிலீசாகிறது. பட விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், "நான் கஸ்தூரி ராஜா இயக்கிய படங்களை பார்த்ததில்லை. ஆனால், இப்படத்தில் அவர் நன்றாக நடித்து இருக்கிறார் என பாராட்டி பேசியுள்ளார்.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணி யில் திரிஷ்யம் 1, 2வை தொடர்ந்து உருவாகி வரும் படம் 'திரிஷ்யம்3, ஏப்.,2ல் திரைக்கு வருவதாக அறி விக்கப்பட்டது. இதன் ரிலீஸில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் போர் பிரச்னையால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டமானசூழலால் மே 21ல் மோகன்லால் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
அமீர்கான். மாதவன், ஷர் மன் ஜோஷி, கரீனா கபூர் நடித்து வெளி யான 3 இடியட்ஸ் ஹிந்தி படம் 2009ல் ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில் ஹிட்டானது. இதன் 2ம் பாகம் குறித்து பேசிய அமீர்கான் "அதற்கான கதையை கேட்டேன். நல்லபடியாக வந்துள்ளது. கதையை இறுதி செய்ய பல வேலைகள் உள்ளன. அதே நகைச்சுவை பாணி இருந்தாலும் இதுவரை சொல்லப் படாத கதையாக இருக்கும்.
அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த,"! சூர்யாவின் அகரம் அறக்கட்டளை," தமிழகம் முழுவதும்,"பாழடைந்த 50,,க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தத்தெடுத்து, "நவீன வசதிகளுடன், " அவர்கள் சீரமைத்து வருகிறார்கள் இந்த செயலை வாழ்த்தி, வணங்குகிறோம் .
'வாழை' படத்தில் நடித்த பொன் வேல் +2 பொதுத்தேர்வு முடிவுகளில் 600-க்கு 506 மார்க்குகளை பெற்றுள்ளார். நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த, பொன் வேல் தற்போது தனது படிப்பிலும் சிறப்பாக" செயல்பட்ட பாராட்டுகளை பெற்று வருகிறார்.
'நுாறு சாமி விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் ,பற்றி இயக்குனர் சசி கூறுகையில், "கள்ளக் குறிச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பற்றி ஒரு டாக் ஷோவில் பேசினார்கள். அப்போது இந்த கரு உருவானது. இந்த படம் பார்த்த பலர் தங்கள் உறவு பெண்ணுக்கு அதை செய்து இருக்கலாமே என நினைப்பார்கள்" என்றார். மறுமணம்,விதவை திருமணத்தைஆதரித்து இந்தப்படம் இருக்கும். முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதால் விரைவில் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
100வது படத்தில் ,தெலுங்கு நடிகர் நாகார் ஜூனா இப்போது நடிக்கிறார். இதை தமிழில் “நித்தம் ஒரு வானம்” படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்க, தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ் மிதா பட் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிரீயட் படமாக உருவாகும் இந்த கதையில் நாகார்ஜூனா கேங்ஸ்டராகவும், தபு முதல்வராகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.