இதய ஆரோக்கியத்தை பொருத்தவரை, பல ஊட்டச்சத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டு வருகிறது.பழங்கள், காய்கறிகள்,கடுகு எண்ணெய்,உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது .இதில்ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளதால், இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் இதயத்திற்கு நல்லது. இந்த எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருப்பதால், இதனை பயன்படுத்துவது இதய நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பண்புகள் கடுகு எண்ணெயில் உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதுடன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் தவிர்க்கலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலிகைகளில் மிகுந்த மணம் கொண்டது நன்னாரி.நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தி யன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது.நன்னாரி வேர் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது வெளிநாட்டினருக்கு தெரிந்தும் அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இதனை பலரும் பயன்படுத்துவது இல்லை. அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மூலிகையில் இது மிக முக்கியமான ஒன்று.கொடி வகையை சேர்ந்த நன்னாரியின் வேரானது சித்தா ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமியோபதி மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுகிறது. நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.குடிப்பதற்கு இதமாகவும், சிறுநீர் போக்கை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்த நச்சுக்களை அகற்றிரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. இது உடலின் உள் வெப்பத்தை தணிக்கிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை, கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடிய சில சத்தூட்டங்கள் நன்னாரி வேரில் காணப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதீத வெப்பம் தணிந்துஉடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது.
கொத்தவரை செடி வகை தாவரம்.சீனிஅவரைஎன்றும்அழைப்பர்.செடிமூன்றுமுதல், நான்குஅடிஉயரம்வரைவளரும்.இது, நைட்ரஜன் சத்தை மண்ணில்அதிகரிக்கச் செய்து, வளம் பெருக்கும்.மிதமான சூரிய ஒளியும், ஈரப்பதமானகாலநிலையும் இருந்தால் பலவகைமண்ணிலும் வளரும். இந்தியாவின்வடமேற்கு பகுதி மற்றும் அண்டை நாடானபாகிஸ்தானில் அதிகம் பயிரிடப்படுகிறது.கொத்தவரையில் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறைந்த எரிசக்தியும், அதிக நார்ச்சத்தும் உடையது. புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் சத்துகளும் நிறைந்துள்ளன.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இதமான உணவுகளில் ஒன்று. உடல் எடை, கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலை போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து,ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும். இதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவும். போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.கொத்தவரையில்உள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.
வெள்ளைப் பூண்டு, வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். சித்த மருத்துவத்தில், 'லசுனம்' என அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியா பகுதியை தாயகமாக உடையது. பின், உலகெங்கும் பரவியது. உற்பத்தியில் அண்டை நாடான சீனா உலக அளவில் முதலிடத்திலும், நம் நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.பூண்டில் பல வகைகள் உள்ளன.அவற்றில் மலைப்பூண்டும், நாட்டுப் பூண்டும் உணவில் சிறப்பிடம்பெறுகின்றன.மலைப்பூண்டின் பல், பெரிதாக இருக்கும் .நாட்டுப்பூண்டின் பல், சிறிதாக இருக்கும்.உணவில் சேர்த்துக் கொள்வதால், உணவுக்கூழ் வயிற்றில் எளிதாக கரையும். வயிற்றுப் பொருமல் நீங்கும். நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாவதுடன், நோய்த் தொற்றையும் எதிர்க்கும் ஆற்றலை தருகிறது.இதய தொடர்பான நோய்களை தடுக்கும் மிகச்சிறந்த மருந்து, வெள்ளைப் பூண்டு.ரத்தத்தில் வெள்ளை அணு செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. உடலில் சேரும் ஊளை சதையை கரைக்கிறது. தண்டுவட செயல்பாட்டுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நீரிழிவை குணப்படுத்துகிறது. மாதவிடாய் கோளாறுக்கும் மருந்தாகிறது.வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து பகுதியில் உள்ள பிரமிடுகளில், இறந்த உடல்களை பதப்படுத்த பூண்டு முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கைப் பட்டியலில் பூண்டுக்கு முதன்மை இடம் தந்துள்ளனர் எகிப்தியர்.தமிழகத்தில் வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டி தொங்க விடுவது வழக்கம். அதுபோல, பண்டைய கிரேக்கத்தில் பூண்டு தொங்கவிடும் வழக்கம் இருந்துள்ளது.முதல் உலகப்போரில் வீரர்கள் காயத்தை குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின், கபா துறைமுகத்தில் இருந்து, மெசினா துறைமுகம் வந்தடைந்த கப்பலில் ஏற்றியிருந்த சரக்கில், பிளேக் நோய் தொற்று இருந்தது. இது பரவியதால் ஏராளமானோரை காவு வாங்கியது. இச்சம்பவம், 'பிளாக் டெத்' என வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது. பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோயில் இருந்து தப்பிக்க மாமருந்தாக மக்களுக்கு பயன்பட்டது பூண்டு.
நுரையீரல் என்பது மனிதனின் உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில், நுரையீரலை பாதுகாக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொண்டால், அவை நச்சுக்களை அழிக்கும் தன்மை உடையவை என்பதால், நுரையீரலுக்கு பாதுகாப்பாக இருக்கும். அதேபோல், ஆப்பிள் தொடர்ந்து சாப்பிட்டால், நுரையீரல் நோய்கள் வராமல்தடுக்கப்படும்.பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற உணவுகளில் ஆன்ட்டி ஆக்சிடன்ஸ் அதிகமாக இருப்பதால், திராட்சையில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நுரையீரலை சுத்தம் செய்ய பயன்படும்.மாதுளம் பழம், பிஸ்தா, வரமிளகாய் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள வெங்காயம்ஆகியவையும்நுரையீரலைபாதுகாக்கும்உணவுகள்ஆகும்.நுரையீரல்பாதிக்கப்படாமல்இருக்கவேண்டுமென்றால், சோடா மற்றும் மதுபானத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாகவெறும் நீரை மட்டுமே பருக வேண்டும்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வேர்கடலை சிறந்த புரதம் மூலமாகும், இதனை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் பெறலாம்.வேர்கடலையில் மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், நியாசின், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளன. இவை எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.வேர்கடலை நீரிழிவு உள்ளவர்களுக்கு.ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வதில் உதவுகிறது.வேர்கடலை சாப்பிடுவது நன்மையான கொழுப்புகளை வழங்கி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இதன் நியாசின் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் மூலமாக, திசுக்களில் பாதிப்புகள் வராமல் பாதுகாக்க உதவும்.வேர்கடலை சுலபமாக கிடைக்கக்கூடிய, சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கிறது, அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளதால், வயிற்று நிறைவுடன் உணர முடியும். ஜங்க் உணவுகள்சாப்பிடும் குணத்தை குறைக்கலாம்.இது அதிக உணவு அருந்துவதை கட்டுப்படுத்தி எடை குறைய உதவுகிறது.
செவ்வாழைசெவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன.செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும்.பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும்.தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும்.நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும். ரஸ்தாலி (ரசகதலி)பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம்.வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். மொந்தன் வாழை ( பச்சை வாழை)மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும்.இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். தினம் ஒன்றோ, இரண்டோ உணவுக்குப் பின் சாப்பிட்டால், உடல் வெப்பத்தைத் தணிக்கும். சில வகை காமாலையைக் கட்டுப்படுத்தும்.மொந்தன் வாழைக்காயைச் சாப்பிடுவதால், வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் நீங்கும்.இந்தப் பழத்துக்கு `பொந்தன் வாழை’ என இன்னொரு பெயரும் உண்டு. நாட்டு வாழைநாட்டுவாழையின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோலிலும் சத்துக்கள் அதிகம்.மலச்சிக்கல், குடல்புண்ணைக் குணப்படுத்தும்.மக்னீசியம் அதிகமாக இருப்பதால், உடல்நலம் காக்கும்.கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.பெண்கள் நாட்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, உடலுக்கு சக்தி பெருகும்.மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். வெள்ளைப்போக்கைக் கட்டுப்படுத்தும்.அதிகம் இனிப்புச்சுவை கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. கதலிகதலியில், `நெய்க் கதலி’ என்றொரு வகையும் உள்ளது.நெய்க் கதலி மலைப்பகுதிகளில் அதிகம் விளையும். அதிக இனிப்புச்சுவை உடையது. மாவுச்சத்து அதிகம் என்பதால், குழந்தைகள் உடல் வளர்ச்சி பெற உதவும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தசோகை பிரச்னை உடையவர்கள் சாப்பிட்டுவந்தால், ரத்தம் பெருகும்.மலச்சிக்கலைத் தீர்க்கும். குடல்புண்ணைக் குணப்படுத்தும்.சித்தமருத்துவ மருந்துகளுக்கு அதிகம் பயன்படுகிறது.பெண்களின் உடல்நலம், மாதவிடாய் பிரச்னைகள், உடல் சூடு ஆகியவற்றைப் போக்கும். பேயன் ( நாட்டு வாழை )கடினமான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம். இதன் தோலிலும் சத்துக்கள் அதிகம்.அதிக உடல் வெப்பத்தை பேயன்பழம் சாப்பிடுவதன் மூலம் சமன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் கணையச்சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது.உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உடல் எடையை அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மாவுச்சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சிறந்தது.குளிர்ச்சியான உடல்வாகு உடையவர்கள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது நுரையீரலில் சளியைக் கோத்து நுரையீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும். மலை வாழைவாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.நல்ல ருசியும் வாசனையும் கொண்ட பழம். இது, உடலின் வலிமையை அதிகரிக்கும்.சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது, மிகவும் இனிப்பாக இருக்கும். ரத்தசோகையை நீக்கும். ரத்த விருத்தி ஏற்பட்டு, உடல் வலுப் பெறும்.மலச்சிக்கல் நீங்கும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் அழகு பெறும். பூவன் பழம்தினசரி உணவு உண்ட பின், பூவன் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் தீரும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.தசைகளை வலுவாக்கும்.தினமும் பூவன் வாழைப்பழம் உண்டுவர, உடல் சோர்வு, தளர்வு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.ஆஸ்துமா, நெஞ்சுச்சளி பிரச்னை, குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் பூவன் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.இரண்டு நாட்களுக்கு, ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில், பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகள் நீங்கும்.
மனிதர்களின் பழமையான உணவுப்பொருட்களில் ஒன்று வெங்காயம். இது சுவைக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் பெரும் பலனளிக்கிறது. தற்போது வெயில் காலம் தீவிரமாக இருக்கும் நிலையில் உடல் சூட்டை தணிக்க ஒரு வெங்காயத்தை நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்கலாம். குழந்தைகளுக்கு வெப்ப நோய்கள் வராமல் இருக்க, வெங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தாலோ அல்லது நெய்யில் வறுத்து சாப்பிடவைத்தாலோ சிறந்த பலன் கிடைக்கும். தினமும் சிறிதளவு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். வெங்காயத்தில் உள்ள சல்பர் எனும் சத்து, ரத்தத்தை சுத்திகரித்து மாரடைப்பைத் தடுக்கும். அதேசமயம், இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு தன்மை சுவாசக் குழாய்களைத் தூய்மைப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, காசநோயைத் தடுக்கும். உடலில் தேக்கமாயிருக்கும் நச்சுகளை வெளியேற்றும் திறனும் வெங்காயத்துக்கு உண்டு. மூளையின் செயல் திறனை ஊக்குவிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் வெங்காயம் உதவுகிறது. எனவே, நம் உணவில் வெங்காயத்திற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். இது உணவல்ல, ஒரு இயற்கை மருந்து.
குளிர்ந்த நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும். இது "ஐஸ் கட்டி தெரபி" என அழைக்கப்படுகிறது.கடுமையான உடல் உழைப்பிற்கு பின் ஏற்படும் தசை வலியை குறைக்க இது உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை விரைவாக வழங்கும். உடலில் ஏற்படும் வீக்கம், வலி குறைந்து தசைகள் புத்துணர்ச்சி பெறும். கழிவுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.தூங்குவதற்கு முன்பு 5-10 நிமிடங்கள் ஐஸ் கட்டி நீரில் குளிப்பது, ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.மன அழுத்தம், சோர்வை குறைத்து, மூளையின் செயல்பாட்டை உற்சாகமூட்டும். நெதர்லாந்து ஆய்வுகளின்படி, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்க உடலில் வளர்சிதை மாற்றம் என்ற செயல்பாடு முக்கியமானது. மனிதர்களுக்கு இந்த வளர்சிதை மாற்ற செயல்பாடு இயற்கையாகவே அமைந்தது. வாழ்க்கை முறை, உழைப்பு இல்லாத நிலைக்கு மாற்றம் பெற்றதால் உடலின் இயங்கு தன்மை குறைந்து நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடைப்பயிற்சி மட்டுமே உதவும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், தினமும் சுமார் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்க ளுக்கு, உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதும், மரபணுக்கள் மாற்றம் சரியாக இருப்பதும் தெரிய வந்தது. பொதுவாக, ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது அவர்கள் தங்களை அறியாமல் இனிப்பு பொருட்களை உட்கொள்வது இயல்பு. ஆனால், அது நாளடைவில் சர்க்கரை நோயை உருவாக்கும்.இன்றைக்கு, ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் கீல்வாதம் அனைவரையும் பாதிக்கிறது. ஆய்வுகளின்படி வாரந்தோறும் 5 முதல் 6 மைல்கள் நடைபயிற்சி செய்வது கீல்வாதம் உடலில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கிறது.நடைப்பயிற்சி கால் மூட்டுகள் இலகுவாக இயங்க உதவுகிறது.அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆய்வின்படி, நடைப்பயிற்சி மார்பக புற்று நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. வாரத்திற்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் நடந்த பெண்களுக்கு புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பொதுவாக, நடைப்ப யிற்சி நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் எதையும் திறமையாக சமாளிக்கும் சக்திவாய்ந்த மனநிலையை தருவதுடன், கவலை, சோகம், சோர்வு மற்றும் உந்துதல் இல்லாமை போன்ற எதிர் மறை உணர்ச்சிகளை தடுத்து புத்துணர்வு தரும் ஒன்றாக நடைப்பயிற்சி இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.