25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Oct 18, 2025

கோதுமை துக்கடா.

தேவையான பொருட்கள்கோதுமை மாவு – 400 கிராம் ,மிளகாய் வற்றல் பொடி – 3 ஸ்பூன்,பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்,வெள்ளைப் பூண்டு – 5 பல் (பெரியது),க‌ல் உப்பு – தேவையான அளவு,தண்ணீர் – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு செய்முறைமுதலில் வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின் அதனை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.கோதுமை மாவுடன் மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு திரட்டுவது போல் மாவினை ஒரு சேர உருண்டையாக பிசையவும்.பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும்.சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது.பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய விடவும்.எண்ணெய் காய்ந்ததும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும்.அவ்வப்போது சதுரத்துண்டுகளைக் கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும். சுவையான கோதுமை துக்கடா தயார். இத்துக்கடா ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Oct 18, 2025

நெய் கடலை .

தேவையான பொருட்கள்கடலை பருப்பு – 200 கிராம்,வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது),கறிவேப்பிலை – 2 கொத்து, மிளகாய் பொடி – 1 ஸ்பூன்,மிளகுப் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன் ,பெருங்காயப் பொடி – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவுசெய்முறைகடலை பருப்பினை அலசி சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வெள்ளைப் பூண்டினை தோலுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.வைக்கவும்.கறிவேப்பிலையை அலசி உருவி நன்கு காய வைத்துக் கொள்ளவும்.ஊறிய கடலை பருப்பினை வடிதட்டில் கொட்டி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.தண்ணீர் நன்கு வடிந்ததும் உலர்ந்த துணியில் பருப்பினைக் கொட்டி விடவும். பருப்பின் மேற்புறம் ஓரளவு காய்ந்ததும் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பில் சிறிதளவு போடவும். கடலைப் பருப்பு எண்ணெயில் அடியில் இருக்கும்.கடலைப் பருப்பு வெந்ததும் படத்தில் உள்ளபடி எண்ணெயின் மேற்பரப்புக்கு வந்து விடும்.எண்ணெய் குமிழி அடங்கி சலசலவென வெந்ததும் கடலை பருப்பினை வெளியே எடுத்து விடவும்.வெந்த கடலை பருப்பினை வெளியே எடுக்க வலைக் கரண்டியை உபயோகிக்கவும். அப்போதுதான் வெந்த கடலைப் பருப்பினை ஒரே சீரான நிறத்துடன் கருகாமல் எடுக்க முடியும்.இவ்வாறாக எல்லா கடலைப் பருப்பினையும் வேக வைத்து எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.தட்டி வைத்துள்ள வெள்ளைப் பூண்டினை சிறிதளவு எண்ணெயில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.வாயகன்ற பாத்திரத்தில் வறுத்த கடலை பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வறுத்த வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.சுவையான நெய் கடலை தயார்.கடலைப் பருப்பு நன்கு ஊறினால்தான் வறுத்த பின் மொறு மொறுவென்று இருக்கும்; இல்லையெனில் கடிக்கும் போது கடினமாக இருக்கும்.வெள்ளைப் பூண்டினை சேர்க்க விருப்பாதவர்கள் பூண்டினைத் தவிர்த்து விடலாம்.

Oct 18, 2025

.சீவல்.

தேவையான பொருட்கள்-இட்லி அரிசி – 400 கிராம்,பொரிகடலை – 200 கிராம்,மிளகாய் வற்றல் – 8 எண்ணம்,வெள்ளைப் பூண்டு – 3 பல் (பெரியது),பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்,வெண்ணெய் – 25 கிராம்,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை-இட்லி அரிசியை சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டவும்.அரிசியை கிரைண்டரில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து மிளகாய் வற்றலை சிறிது சிறிதுதாகக் கிள்ளி அரிசியில் சேர்த்து ஆட்டவும்.பின் வெள்ளைப் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரிசியில் சேர்த்து ஆட்டவும்.அரிசி மாவுக் கலவையினை மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.பொரிகடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பின் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.சலித்த பொரிகடலை மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரிசி மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.முறுக்கு உழக்கில் சீவலிற்கான‌ அச்சினைப் போட்டு மாவினை அடைத்துக் கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.எண்ணெய் காய்ந்ததும் மாவினை சீவல்களாகப் பிழிந்து விடவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி விடவும்.சீவலில் எண்ணெய் குமிழி அடங்கியதும் சீவலை எடுத்து விடவும். சுவையான சீவல் தயார்.நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும். இதனை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இச்சிற்றுண்டியை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்பர்.வாணலியில் எண்ணெய் காய்ந்து வரும்போது சிறிதளவு புளியைச் சேர்க்கவும். இதனால் எண்ணெய் பொங்குவது தவிர்க்கப்படும்.

Oct 18, 2025

ரசகுல்லா.

தேவையான பொருட்கள் -1 லிட்டர்.பால்,150 கிராம் சர்க்கரை,1 எலுமிச்சை பழம்செய்முறை-ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் பொங்கிவரும் போது குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்இதனுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் பால் திரிந்து தண்ணீர் மற்றும் பனீர் தனியாக பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.இதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அலசி நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.இதனை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துவிட்டு8 முதல்10 எடுத்து நிமிடங்கள் பிசைந்து கொண்டால் பனீர் மிருதுவாக இருக்கும் இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் மிதமான தீயில் வைத்து கொள்ளவும் அதனுடன் பனீர் உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.இதனை10 நிமிடங்கள் மூடி மிதமான தீயில் வைத்து வேக விடவும் இப்போது பனீர் நன்கு வெந்து பனீர் உருண்டைகள் இருமடங்காக பெரிதாக இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விட்டால் ரசகுல்லா சுவைக்க தயார். இதனை ஆற வைத்து பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த ரசகுல்லா வாகும் பரிமாறலாம்.இந்த ரசகுல்லா பாலில் இருந்து பனீர் எடுத்து செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.பாலில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி திரித்து விட்டிலேயே தயாரிக்கலாம்.

Oct 18, 2025

தேங்காய் லட்டு.

தேவையான பொருட்கள்-ஒன்றரை கப் தேங்காய் துருவல்,1/2 கப் சர்க்கரை,1கப் காய்ச்சிய பால்தேவையானஅளவு டெசிகெடட் கோகனட்,1ஸ்பூன் நெய்செய்முறை-அடுப்பில் பேனில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.பிறகு பால் சேர்த்து கலந்து விடவும். பால் சிறிதளவு வற்றி வரும் வரை இடை இடையே கலந்து விடவும்.பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து ஈரப்பதம் இல்லாத நிலை வரும் வரை கிளறி விடவும்.சுத்தமாக ட்ரை ஆன பின்னர் லேசாக சூடு தணிந்த பின்னர் கையில் உருண்டை உருட்டி லட்டு போல பிடித்து வைக்கவும்.லேசாக டெசிகெடட் கோகனடில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.இத போல எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். சுவையான தேங்காய் லட்டு தயார். 

Oct 18, 2025

ரவா பர்பி.

தேவையான பொருட்கள்-1 கப் ரவை,3 கப் பால்,1 கப் சர்க்கரை,30 பாதாம்,5 மேஜை கரண்டி நெய்செய்முறை -ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் நன்றாக வறுக்கவும்.பின்பு மூன்று கப் பால் சேர்த்து சிறிது ரவை கெட்டியானவுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியாக நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.ஒரு தட்டில் எண்ணெய் நன்றாக தடவி சமைத்த ரவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பிக் கொள்ளவும். பின் அதன் மீது நறுக்கிய பாதாமை தூவி விடவும்.15 நிமிடம் கழித்து பர்பி மாதிரி வெட்டி எடுத்து பரிமாறவும்.

Oct 18, 2025

.பாதுஷா .

தேவையான பொருட்கள் -இரண்டரை கப்  மைதா ,1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2கப் நெய்,2 கப் சர்க்கரை,1/2ஸ்பூன் ஏலக்காய் தூள்,சிறிதளவு புட் கலர்,பொரிப்பதற்கு எண்ணெய்செய்முறை -முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் அத்துடன் உருகிய நெய்யையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்நெய் மாவுடன் கலந்தவுடன் கையில் பிடித்து பார்த்தால் நன்றாக பிடிக்க வரவேண்டும் அதுதான் பதம் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விரல்களால் பிசைய வேண்டும்.. அழுத்திப் பிசைய கூடாது அழுத்திப் பிசைந்தால் லேயர் லேயராக வராது... எல்லாம் ஒன்றாகக் கலந்தால் போதும் நன்றாக பிசைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை..பிசைந்த மாவை இரண்டு கைகளாலும் எடுத்து பிளந்து பார்த்தால் உள்ளே லேயர் லேயராக தெரியும் இதுதான் பக்குவம் அதிகமாக பிசைய வேண்டாம்... இதை 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வைக்கவும்.. 15 நிமிடம் ஆவதற்குள் நாம் சர்க்கரை பாகு காய்ச்சி அதை லேசாக ஆற வைக்கவும் பாதுஷாவை பொரித்து லேசான சூட்டில் இருக்கும்போது சர்க்கரை பாகில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.. பாகு அதிக சூடாக இருக்கக் கூடாது..ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் அரைப் பதம் தெரியவில்லை என்றால் கரண்டியில் சர்க்கரைப் பாகை தூக்கி ஊற்றினால் கடைசி சொட்டு நன்றாக ஜவ்வு மாதிரி கீழே விழும் அதுதான் பக்குவம்...ஏலக்காய் தூளை சேர்க்கவும்.. நான் இதில் கேசர் கலர் சேர்த்து உள்ளேன்.. இது குங்குமப்பூ சேர்த்தது போல் இருக்கும் உங்களிடம் குங்குமப்பூ இருந்தால் நீங்கள் இந்த கலருக்கு பதிலாக அதை சேர்த்துக் கொள்ளலாம்..இப்போது பாதுஷாவை கையில் எடுத்து லேசாக வட்டமாக உருட்டி வடை போல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.. எண்ணெய் எப்படி காய வேண்டும் என்றால் பாதுஷாவை அதில் போட்டால் 1,2 பப்பிள்ஸ் தான் மேலே வரவேண்டும் அதிகமாக எண்ணெய் காய்ந்து இருக்க கூடாது..இருபக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைத்தால் போதுமானது.. அதற்கு மேல் ஊற வைத்தால் குலோப்ஜாமுன் மாதிரி ஆகிவிடும்..விருப்பப்பட்டால் மேலை பிஸ்தாவும் சில்வர் லீப்பும் வைத்து அலங்கரிக்கலாம்.. இப்போது சுவையான இனிப்பான பாதுஷா தயார்...

Oct 11, 2025

பிஸ்கட் அல்வா.

தேவையான பொருட்கள் :பிஸ்கட் பாக்கெட் - 2பால் - 1/2 லிட்டர்நெய் - 150 கிராம்முந்திரி - 100 கிராம்செய்முறை :முதலில் மில்க் பிஸ்கட்களை வாங்கி அதனை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுத்தாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து உருகிய பின்னர் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும்.முந்திரி நன்கு சிவந்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கடாயில் இருக்கும் நெய்யினை சிறிது எடுத்து தனியாகஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இருக்கும் நெய்யில் உடைத்து வைத்துள்ள பிஸ்கட் பீஸ்களை சேர்த்து வதக்கி விட வேண்டும்.பிஸ்கட் வதங்கிய பின் அதில் காய்த்து வைத்துள்ள பாலை ஊற்ற வேண்டும். பால் ஊற்றிய பிறகு, கடாயில் இருக்கும் கலவையை கைவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கட்டிகள் தட்டாதவாறு கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.கலவை அல்வா பதத்தில் வந்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதான் நெய்யின் கமகம மணத்தில் பிஸ்கட் அல்வா ரெடி!

Oct 11, 2025

திணை அல்வா.

தேவையான பொருட்கள்-திணைஅரிசி மாவு - 200 கிராம்,வெல்லம் - 200 கிராம்,ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,சுக்குத்தூள் - 2 சிட்டிகை,முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,நெய் - 100 கிராம்.செய்முறை-திணைஅரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.இப்போது சூப்பரான சத்தான திணைஅல்வா ரெடி.

Oct 11, 2025

அன்னாசிப்பழ அல்வா.

தேவையானவை: நறுக்கிய அன்னாசிப்பழம்ஒரு கப். சர்க்கரை - ஒன்றரை கப், நெய் அரை கப், கலர் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம்பருப்பு - தேவையான அளவு.செய்முறை: அன்னாசிப்பழத்தை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ஒட்டும் பதம் வரும்போது, பழ விழுதைக் கொட்டி கிளறவும். அல்வா இறுகி வரும்போது நெய் விட்டு,கலர், முந்திரி, துருவிய பாதாம்பருப்பை சேர்த்து இறக்கவும்.கெட்டியாகவில்லை என்றால்,2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து விட்டு கிளறினால் அல்வா பதம் வந்துவிடும்.அன்னாசிப்பழ அல்வா ரெடி.

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 72 73

AD's



More News