25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Feb 19, 2025

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாக, அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் பிப்., 21ல் வெளியாகிறது . ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் வெளியானது. காதல், காதல் தோல்வி, நண்பர்களுடனான லூட்டி என டிரைலர் கலர்புல்லாக இருக்கிறது. டிலைரின் துவக்கத்தில் வரும் தனுஷ், 'இது வழக்கமான கதை தான்' என்று கூறுபவர் முடிவில் 'ஜாலியா வாங்க, ஜாலியா  போங்க' என பேசி உள்ளார். 6 மணிநேரத்திலே 11லட்சம்  பார்வைகளை இந்த டிரைலர் கடந்தது.

Feb 19, 2025

ராஷ்மிகா நடிப்பில் வெளி வந்த ஹிந்திப் படம்  'சாவா'

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அசத்தி வருகிறார். கடந்தாண்டு இவர் நடித்து வெளியான அனிமல் ரூ.900 கோடி, புஷ்பா 2 ரூ.1800 கோடி வசூலை கடந்தன. இவர் நடிப்பில் வெளி வந்த ஹிந்திப் படமான 'சாவா' வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து அசத்தி உள்ளது. இந்த வெற்றியுடன் சேர்த்து ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.

Feb 19, 2025

பிப்ரவரி 21ல் ரிலீஸ் ஆகும் படங்கள்

 'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,ஈடாட்டம், பிறந்தநாள் வாழ்த்துகள், பல்லவபுரம் மனை எண் 666" ஆகிய படங்கள் பிப்ரவரி 21ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன், தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்படங்களுக்குஎதிர்பார்ப்புஉள்ளன. 2025ல்கடந்துபோன 6 வாரங்களில்அதிகபட்சமாக 9 படங்கள் வெளி வந்தன.

Feb 19, 2025

டிராகன்' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ்

'லவ் டுடே' படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், கையடு லோகர், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின், சினேகா நடித்துள்ள 'டிராகன் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இப்படம் பிப்.,21ல் ரிலீசாக உள்ளது.

Feb 19, 2025

நாக சைதன்யாவின் ரூ.100 கோடி வசூலை கடந்த ' படம் தண்டேல்'

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடிப்பில்,சந்து மொன்டேட்டி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடித்த பிப்., 7ல் தெலுங்கு, தமிழில் வெளியான படம் 'தண்டேல்'. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து அசத்தி உள்ளது. நாகசைதன்யா சினிமாவில்அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் முதன்முறையாக இவரது படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

Feb 12, 2025

சிம்பு நடிக்கும் 50வது படத்தை அவரே தயாரிக்கிறார்

.பார்க்கிங் ' இயக்குனர் ராம்குமார்  பாலகிருஷ்ணன் இதை இயக்குகிறார். அடுத்து அவரின் 50வது பட அறிவிப்பும் வந்தது. இதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிம்புவே தயாரிக்கிறார் தற்போது ஓடிடி, சாட்டிலைட் வியாபாரம் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே தயாரிக்க முன்வந்தேன். இதுபற்றி கமல் சாரை சந்தித்து நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன் " என்றார். இதே போல் சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக அறிவித்துள்ளனர். நடிகர் சிம்பு பிறந்தநாளை கொண்டாடினார். அவரது 49வது படஅறிவிப்பு வெளியானது.

Feb 12, 2025

.'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற  ஹிட் பாடலை புதுமையான முறையில் ரீமிக்ஸ்

 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்துள்ளார். ஏப்., 10ல் படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்திலிருந்து 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற பாடலை புதுமையான முறையில் ரீமிக்ஸ் செய்துள்ளாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். 

Feb 12, 2025

காலத்தால் அழியாத கதையில், கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான்

துல்கர் சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். அதை பகிர்ந்து, "இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில், கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். 13வது திரைப்பயணத்தில் இது கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பரிசு" என குறிப்பிடப்பட்டுள்ளார் துல்கர். தெலுங்கு நடிகர் ராணா உடன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்து, நடிக்கும் படம் 'காந்தா'. செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

Feb 12, 2025

பிப்., 14ல் படங்கள் ரிலீஸ்...

தமிழில் இந்தவாரம் 14ல் காதலர் தினத்தில் "2கே லவ்  ஸ்டோரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, அது வாங்கினால் இது இலவசம் ஒத்த ஓட்டு முத்தையா, படவா, தினசரி, கண்நீரா, 9 ஏஎம் டூ 9 பிளம் வேலண்டைன்ஸ் டே, பபி அண்ட் பேபி" ஆகிய 10 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன. இதன் உடன்'கேப்டன் அமெரிக்கா பிரேவ்" நியூ வேர்ல்டு' என்ற ஹாலிவுட் படமும் வெளியாகிறது. 

Feb 12, 2025

ரூ.100 கோடி வசூலை 'விடாமுயற்சி' எட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்., 6ல் வெளியான படம் 'விடாமுயற்சி'. ஆ ஷன் கலந்த கதையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது படம் வெளியாகி 4 நாட்களுக்கு பின் இப்படம் தமிழகத்தில் ரூ.60 கோடி, பிற மாநிலங்களில் ரூ.10 கோடி, வெளிநாடுகளில் ரூ.30 கோடி என ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 2 ... 58 59 60 61 62 63 64 ... 89 90

AD's



More News