25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Mar 12, 2025

மலையாளத்தில் கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், முதன்முறையாக மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில், 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தை இயக்கினார். சுமாரான வெற்றி பெற்றது. அடுத்ததாக நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் ஆகியோரிடமும் அடுத்தடுத்த படங்களுக்காக பேசி வருகிறார் கவுதம்மேனன். இப்போதைக்கு தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணும் வாய்ப்பு குறைவு என்பதால் சிறிது காலம் மலை யாளத்தில் பயணிக்க அவர் முடிவெடுத்துள்ளார். 

Mar 12, 2025

'ஸ்வீட் ஹார்ட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

 சின்னத்திரையில்இருந்து வெள் ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரியோ ராஜ். ஜோ படத்திற்கு பின் அவர் நாயக னாக நடித்துள்ள படம் 'ஸ்வீட் ஹார்ட்'. நாயகி யாக கோபிகா ரமேஷ் நடிக்க, ஸ்வினீத் எஸ்.சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இசையமைப் பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதை யில் உருவாகி உள்ள இப்படம் மார்ச் 14ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Mar 12, 2025

அல்லு அர்ஜுன் பேச்சால் கலங்கிய சுகுமார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், "சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. நன்றி மட்டும் அவருக்கு போதுமானது அல்ல" என்றார். இதனை கேட்ட சுகுமார் நெகிழ்ந்து கண் கலங்கினார். அதை பார்த்த அல்லு அர்ஜூன், "நீங்கள் கண் கலங்கி என்னையும் கலங்க வைக்காதீர்கள்" என்றார்.

Mar 12, 2025

தந்தையை நினைத்து நெகிழும் அஜித்

தந்தையை நினைத்து நெகிழும் அஜித்  இந்த வருடம் அவர் வாழ்வில் மறக்க முடியாத வருடம். கார் ரேசில் வெற்றி!! வெகு நாட்கள் கழித்து ஒரே வருடத்தில் இரண்டு படங்கள்.. இப்போ பத்மபூஷன் விருது.இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

Mar 05, 2025

MIDDLE CLASS FAMILY பின்னணியில் உருவாகும் '3பிஎச்கே'

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் 40வது படம் '3பிஎச்கே'. இதில் சரத்குமார், தேவயானி, மீதாரகுநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடுத்தர குடும்பத்து வர்க்கத் தினரின் பெரிய கனவுகளில் ஒன்று வீடு. இதை பின்ன ணியாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதன் படப்பி டிப்பு வளர்ந்து வரும் சூழலில் அறிமுக டீசரை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர்.

Mar 05, 2025

திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால்  அறிவித்துள்ளார் .

2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத் தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற  படம் 'திரிஷ்யம்' தமிழ், தெலுங்கு ஹிந் தியிலும் ரீமேக் ஆனது. தொடர்ந்து இரண்டாம் பாகமும் மலையாளம், தெலுங்கில் வெளியானது. இப்போது  திரிஷ்யம் 3 உருவாவதாக மோகன்லால்  அறிவித்துள்ளார். இதுபற்றி “கடந்த காலம் அமைதியாக  இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது" என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்

Mar 05, 2025

9 படங்கள்  மார்ச் 7ல் ரிலீஸ் ஆகும் .9999

மார்ச் 7ல், "அம்பி, அஸ்திரம், படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில்,எமகாதகி' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 இரு மாதங்களில் இதுவரை தமிழில் 45 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் மூன்று படங்கள் மட் டுமே லாபகரமாக அமைந்துள்ளன. . பிப்., 14ல் அதிகபட்சமாக 9 படங்கள் வெளியாகின.

Mar 05, 2025

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரூ. 100 கோடி வசூலைகடந்த ' டிராகன்.

பிரதீப் ரங்கநா தன் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடிப் பில் பிப்.,1ல் திரைக்கு வந்த படம் 'டிராகன்', இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஷ்வத், ரசிகர்கள் அளித்த அன்புக்கு 100 கோடி நன்றி.வெளியீட்டிற்கு முன் என்  தன்னம்பிக்கையை உடைக்க முற்பட்ட போது 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று சொன்ன எல்லோருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். 

Mar 05, 2025

கார்ல இருந்து இறங்கி அடிபட்ட உயிரை காப்பாற்றிய நடிகர் சூர்யா.

ஷூட்டிங் முடிச்சுட்டு நாங்க கார்ல வந்துட்டு இருக்கும்போது ரோட்ல யாருக்கோ ஆக்சிடென்ட் ஆயிருக்கு. சூர்யா டக்குனு கார்ல இருந்து இறங்கி அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருந்தவர தன்னோட கார்ல ஏத்திட்டு பக்கத்துல இருந்த ஹாஸ்பிடலுக்கு (திருப்பதி) அனுப்பி வச்சார். தெரிஞ்ச நண்பர்களுக்கு எல்லாம் போன்பண்ணி 4 டாக்டரை வரவச்சு அந்த நபரை காப்பாற்றிய சூர்யா .

Mar 05, 2025

அஜீத்துடன் நடிக்க விரும்பும்  விஜய்  சேதுபதி!

ரஜினி, கமல்,விஜய் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த, விஜய் சேதுபதிக்கு, அஜித்துடனும் ஒரு படத்தில் நடிக்க முன்பு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் காரணமாகவே. 'அஜித்துடன் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால். இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம்...' என, தகவல் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி.

1 2 ... 56 57 58 59 60 61 62 ... 89 90

AD's



More News