விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.07.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர் நண்பன்”- (Yuva Aapda Mitra Volunteers Training) பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்ற பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் பார்வையிட்டார். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாக, உயிர்ச்சேதத்தைக் குறைக்கவும், துரிதமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், “இளம் பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ் (NSS), மை பாரத் (My Bharath) தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெற்று வருகிறது.விருதுநகரில் 200 தன்னார்வலர்கள் மற்றும் சிவகாசியில் 155 தன்னார்வலர்கள் என மொத்தம் 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக தலா ரூ.8,500/-வீதம் மொத்தம் ரூ.30.17 இலட்சம் மதிப்பில் 16-வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது.இந்த பாதுகாப்பு உபகரணங்களில் தனிநபர் மிதக்கும் சாதனம் (பாலியூரிதேன் நுரையால் செய்யப்பட்ட உயிர் காப்பு அங்கி) (Personal Floatation Device (Life Jacket made of Polyurethane foam), 2 டார்ச் அல்லது அவசரகால விளக்கு (சூரிய சக்தியில் இயங்குவது) (Torch or emergency light (solar enabled), பாதுகாப்புக் கையுறைகள் (Safety Gloves (Leather), Pocket Knife, முதலுதவிப் பெட்டி (காயக்கட்டுத் துணிகள், பஞ்சு, கிருமிநாசினி களிம்புகள், கத்தரிக்கோல், இடுக்கி, கையுறைகள், சிபிஆர் முகமூடிகள், பிளவுக்கட்டுகள், இரத்தப்போக்கை நிறுத்தும் கட்டுகள்) First Aid kit (Bandages, cotton, antiseptic creams, scissors, tweezers, gloves, CPR masks, splints, tourniquets)), எரிவாயு பற்றவைப்பான் (Gas Lighter), விசில் (Whistle), தண்ணீர் புட்டி (Water Bottle), முதுகுப்பை மற்றும் கொசுவலை (Rucksack and Mosquito net Red colour uniform Dress with NDMA logo backside and SDMA logo front she and tracksuit (2 set)) (பின்புறத்தில் NDMA சின்னமும், முன்புறத்தில் SDMA சின்னமும் கொண்ட சிவப்பு நிற சீருடை மற்றும் டிராக்சூட் (2 செட்)), நீர் புகாத உடை / மழை அங்கி (Water Resistant Clothing / Rain coat), கம் பூட்ஸ் (Gum Boots), பாதுகாப்புக் கண்ணாடிகள் (Safety Goggles), பாதுகாப்புத் தலைக்கவசம் (நீர் புகாதது) ராஃப்டிங்) (Safety Helmet (Water Rafting)), தூசி எதிர்ப்பு முகக்கவசம் (Dust Resistant Mask), பிரதிபலிப்பு ஜாக்கெட்(Reflective Jacket) உள்ளிட்ட 16 தொகுப்புகள் உள்ளன. இதன் மூலம் இயற்கை இடர்பாடு காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மைத்துறை) திரு.சோனையன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (06.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S,. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.16 இலட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 670 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம் 08.07.2026 அன்று சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், 08.07.2026 அன்று சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம். ஏற்கனவே, பெறப்பட்ட மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.07.2026) ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன் விவரங்கள், உரிய தேதியில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி சலுகைகள், மானியங்கள், விவசாய நகைக் கடன்கள் உள்ளிட்டவை குறித்தும், சங்கத்தின் கணக்குகள், தணிக்கை விவரங்கள், கணிணி மயமாக்கல் பணிகள் குறித்தும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலிக்கப்படுகிறதா, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுகிறதா, பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, கணினி மற்றும் இணைய வசதிகள் முறையாக செயல்படுகிறதா, பணியாளர்களின் சேவை தரம் திருப்திகரமாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பொதுமக்கள் சிரமமின்றி அரசு சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த ஆய்வின் போது சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கே.புதூர் கிராமத்தில்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், வீட்டுமனை ஒதுக்கீடு உத்தரவுகள் பெற்ற 25 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (04.07.2026) வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் கே.புதூர் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் இலவச வீட்டுமனை உத்தரவுகள் பெற்றுள்ளதாகவும்,இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், இடங்களை அளவீடு செய்து, பட்டா வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, 25 குடும்பங்களுக்கான இடங்களை அளவீடு செய்து, இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களுக்கான அரசு உத்தரவுகளை பெற்றிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் எங்கள் இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து, இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.தேவசகாயம்,விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியர் திரு.பா.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாறு தடுப்பணை அருகே சாத்தூர் இன்னர் வீல் கிளப் (SATTUR INNER WHEEL CLUB ) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில், சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றி மரம் நட்டு பராமரிக்கும் பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கடற்கரைராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (04.07.2026) தொடங்கி வைத்தார்.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தோன்றும் நிசபா நதி, தேவியாறு, நகரியாறு, சீவலப்பேரியாறு மற்றும் காயல்குடியாறு ஆகிய சிற்றாறுகள் ஒன்றிணைந்து வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் வைப்பாறாக உருவாகின்றன. அங்கிருந்து விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக சுமார் 80 கிலோமீட்டர் பயணித்து வங்கக் கடலில் கலக்கின்றன. இந்நதி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.தற்போது சாத்தூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வழியாகப் பாயும் சுமார் 2.50 கிலோமீட்டர் நீளமுள்ள வைப்பாற்றின் கரைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில், நீரோட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் திடக்கழிவுகளால் ஆற்றின் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு, வைப்பாற்றை தூய்மைப்படுத்துதல், சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுதல், ஆற்றங்கரைகளை சீரமைத்தல், மேலும் கரையோரங்களில் நாட்டுமரக் கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்குதல் ஆகிய பணிகளை சமூக நல நோக்கத்துடன் INNER WHEEL CLUB SATTUR என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம் சாத்தூர் பகுதியில் பாயும் வைப்பாறு தூய்மையான, இயற்கை வளம் மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆறாக மாற்றப்படுவதோடு, நீரோட்டம் மேம்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பெரும் பயன் கிடைக்கும்.அந்த வகையில் சாத்தூர் நகரின் வழியாகப் பாயும் வைப்பாறு நதியில் உள்ள முள்செடிகளை அகற்றிமரம் நட்டு பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், செயற்பொறியாளர்(வைப்பாறு வடிநிலக் கோட்டம்) திருமதி மலர்விழி, சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் (03.07.2026) வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வேளாண்மை – உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, மருத்தும் – மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வி துறை, இயற்கை வளங்கள் துறை, நீர்வளத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, எரிசக்தி, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, மனித வள மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசு அலுவலர்களின் பங்கு இன்றியமையாதது. அவ்வகையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் துரிதமாக மக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது அலுவலர்களின் முதன்மை கடமையாகும். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணவேண்டும்.அனைத்து துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டமும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதையும், அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்னணு நிர்வாகம் மூலம் விரைவான சேவைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் மேலாண்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு, தூய்மை பணிகள் போன்ற பணிகளுக்கு அலுவலர்கள் முன்னுரிமை அளித்திட வேண்டும். மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும்.மேலும், பல்வேறுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை கண்ணியமாகவும், பொறுமையுடனும் கேட்டறிந்து அவர்களுக்கு புரியும் வகையில் அதற்கான உரிய தீர்வுகளை வழங்கி, நமது மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்ல பெயர் ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும். அதுபோல, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களில் தகுதியின்மை கண்டறியப்பட்டால் அதற்கான காரணங்களையும் விளக்கிக் கூற வேண்டும்.எனவே, அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக திகழ வேண்டும் எனத் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) ராஜசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திருமதி சசிகலா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கோட்டாட்சியர்கள், அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.தற்போது, இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.06.2026-லிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (மாவட்ட ஆட்சியர் வளாகம், 5வது தளம் - அறை எண் 505-இல்) உரிய ஆவணங்களுடன் 15.07.2026-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் (02.07.2026) கள ஆய்வு மேற்கொண்டார்.மல்லாங்கிணறு பேரூராட்சியில் சாலைகள் ஒருங்கிணைப்பு திட்டம் 2025-2026 (CRIDP 2025-2026) திட்டத்தின் கீழ், ரூ.39.95 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்குரிய வளங்களாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வளம் மீட்பு பூங்காவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மல்லாங்கிணறு பேரூராட்சியில் மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியினை பார்வையிட்டு மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள் மற்றும் விடுதி வளாகத்தின் தூய்மை குறித்து, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் அளவு குறித்தும், மாணவர்களுக்குத் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சரியாகச் சென்றடைகிறதா என்பது குறித்தும், சமையல் கூடம் மற்றும் பாத்திரங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சுழி சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவேடு, கல்வித்திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் குறித்தும், பள்ளி வகுப்பறைகளின் வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை குறித்தும், மேலும், திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புப் பதிவேடுகள் (Stock Registers) குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2025-26 ன் கீழ், ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதனையும் வேளாணூரணி ஊராட்சியில், பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா (PMKKY 2025-26) திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்ட எல்லையான நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்திலிருந்து, இராமநாதபுரம் மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்திற்கு சாலை வசதி செய்து தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன், I A S., அவர்கள் ஆகியோர் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
'வளர்ச்சி அடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்' மாவட்டம் முழுவதும் தொடங்குவதை முன்னிட்டு, திட்டப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான அறிமுக மற்றும் விளக்கக்கூட்டம் (02.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக, தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களுடன் இந்த 'விபி-ஜி ராம் ஜி' திட்டம் ஜூலை 1, 2026 முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு நேரடியாக வாழ்வாதார உத்தரவாதம் வழங்கும் இந்த விபி-ஜி ராம் ஜி திட்டத்தை அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாளர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். பழைய திட்டத்தை விட இதில் வேலை நாட்களும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சரியான பணியினைத் தேர்வு செய்து கிராமப்புறக் குடும்பங்களுக்கு பணி வழங்கப்படும். இத்திட்டமானது, கணினிப் பதிவேற்றம் முதல் களப்பணிகள் வரை அனைத்திலும் துல்லியத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இருக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டிற்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி குறைந்தபட்ச ஊதியமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், விவசாய பருவ காலம் தவிர்த்து மற்ற காலங்களில் பணிகள் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு, ஏரிகள் தூர்வாருதல், கிராமப்புறச் சாலைகள் மற்றும் வாழ்வாதார உள்கட்டமைப்புகள் போன்ற பணிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தரமாகவும், கிராமத்திற்குப் பயனுள்ள நிரந்தரச் சொத்தாகவும் மாறுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, இந்த திட்டத்தை அனைவரும் இணைந்து நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட களப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.