ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலக்கி குடிக்கலாம்.முருங்கை இலை சாறு2 தேக்கரண்டி வீதம் இரண்டு வேலை பருக வயிற்று வலி நீங்கும். முருங்கை இலை சாறு ஒரு தேக்கரண்டி உடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாக்குப்பூச்சிகள் அழிந்து வயிற்று வலியும் போகும்.முருங்கையிலையை தண்ணீர் ஊற்றி வேகவைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலேஏராளமான நோய்கள் குணமாகின்றன. தேவைப்பட்டால், இந்த முருங்கை நீரில் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது நெல்லிக்காய் சாறையும் கலந்து குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.இயற்கையாகவே நச்சு நீக்கும் தன்மை இந்த முருங்கைக்கு உள்ளதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த தூண்டுகிறது. வாய்ப்புண்ணும், வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது. முருங்கை கீரை சாறு, குடித்து வந்தால் உடல் சூடு மெல்ல தணிந்துவிடும்.
கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து நீர் விட்டு அரைத்து உடல் மீது பூசி குளிக்க உடலில் உள்ள அரிப்பு உடனே குணமாகும்.வெங்காயத்தை அரைத்து வைத்து முட்டிகளில் கட்ட மூட்டு வலி குறையும்.பால் கொடுக்கும் தாய்மார்கள் நாவற்பழத்தை சாப்பிடக்கூடாது .அப்படி சாப்பிட்டால் குழந்தை குடித்த பாலைக் கக்கும்.அதிக அளவில் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதால் மார்பக புற்றுநோய் மிக மிகக் குறைந்த அளவே ஏற்படுகிறது.
பூண்டு எண்ணெய் பல வகையான பயன்களை கொண்டது. இதை சருமத்திற்குபயன்படுத்தி மஞ்சள், முடி குறைவு மற்றும் முக அழற்சி போன்றவந்தை சமாளிக்க முடியும். பூண்டு எண்ணெய் குளோரா மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனால் புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் உள்ளன இது ஆஸ்துமா காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உதவும்.அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக விளங்கும் பூண்டு எண்ணெயை இதய ஆரோக்கியம், தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயன்படுத்தலாம். பூண்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பூண்டு எண்ணெய்யில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. பூண்டில் உள்ள முக்கிய உயிர் வேதியியல் கலவையான டயல் டிசல்பைட், அல்லிசின் கலவை நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, இதய நோய் தடுப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.
நீரைக்காய்ச்சி குடிக்க வேண்டும்.நீர்மோர் நிறைய குடிக்க வேண்டும்.நெய்யை உருக்கி உணவில் சேர்க்க வேண்டும்.தினமும் இரவில் காய்ச்சிய பசும்பால் அருந்த வேண்டும்.பகலில் தூங்கக்கூடாது.மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக் கூடாது.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும்.முந்தைய நாளில் சமைத்த உணவை உண்ணக்கூடாது.மதிய உணவில் தயிர் சேர்க்க வேண்டும்.
தூங்கும் முன் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும்.கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கிராம்பு சாப்பிடுவது பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.இரவில் ஒரு கிராம்பு சாப்பிட்டால் இருமல் விரைவில் நீங்கும்.கிராம்புகளில் உள்ள யூஜெனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.கிராம்பு சாறு, கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு,எள்ளுருண்டை,மணத்தக்காளி வத்தல்,அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலைஉருண்டை,விதையுள்ள கருப்பு திராட்சை,நாட்டு மாதுளை, நாட்டுப்பேரீட்சை,கறிவேப்பிலைத்துவையல்,பீர்க்கங்காய்,பிரண்டை, முள்ளங்கி,பனை வெல்லமிட்டு கிண்டியஉளுந்துக்களி,உளுந்து, கேழ்வரகு தோசை,பொன்னாங்கன்னிகீரை,தண்டுக்கீரை,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்,நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்.
கருஞ்சீரகம் அல்லது கருப்பு விதைகள் என அழைக்கப்படும் இது உணவு தயாரிக்கவும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது அது இரத்தத்தில் உருவாகி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பதில் கருஞ்சீரகம் பயனுள்ளதாக சொல்லப்படுகிறது.கருஞ்சீரகம் விதைச்சாறு புற்றுநோய் செல்களை செயலிழக்க செய்ய உதவுவதாக காட்டுகிறது.ஒரு சிறிய சிட்டிகை கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையிலேயே குடிக்கவும்.தினமும் எடுத்தால் மூட்டு வலி, உடல் வீக்கம் மற்றும் உடல் சோர்வு குறையும்.அரை கரண்டி கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன் எடுத்தால் தூக்கம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உணவில் சமைக்கும் போது அரை கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் செரிமானம் சீராகி வயிறு வீக்கம், வாயு மற்றும் குடல் தொந்தரவு குறையும்.
வெந்தயம்: முந்தைய இரவுவெந்தயம்1ஸ்பூன் அளவு எடுத்து ஊற வையுங்கள் மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும் வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் வலிகுறையும்.பூண்டு: பூண்டு முடக்குவாதத்திற்கான மிகச்சிறந்த மருத்துவஉணவு2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள் இது முடக்குவாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.கொத்தமல்லி தழை:கொத்தமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்தமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் இது யூரிக்அமிலத்தை குறைக்கச்செய்கிறது இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து மூட்டு வலியை போக்கும்.ஓமம் மற்றும் இஞ்சி:ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும்.இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும்.இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.
ராகி கீரை அடை: இரும்புச்சத்து, ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும், சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும்.ஆப்பம்: செரிமானமாவது எளிது, வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும்கோதுமை ரவை புட்டு: ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு காலை உணவாக கொடுக்க சிறந்தது.
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். வால்நட்ஸில் உள்ளMUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும்.ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில்4 கிராம் புரதம்,2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது.