25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Feb 24, 2026

பகல் நேரத்தில் தூங்கினால் வரும் நன்மைகள்.

* ரத்த அழுத்தம் குறையும்.*இதய நோய் வரும் அபாயம் குறையும்.* மூளை சிறப்பாக செயல்படும்.* களைப்பு, உடல் சோர்வு குறையும். *அதிகமாக தினமும் தூங்கினால் மன நலம் குறையும் அபாயம் உண்டு.* மதியத்தில் 1 - 3 மணி நேரத்துக்குள் 15-30 நிமிடங்கள் தூங்குவது சிறந்தது.

Feb 20, 2026

விக்கல் அடிக்கடியோ, தொடர்ந்தோ ஏற்பட்டால்…

மூச்சுக்குழல் தசையின் திடீர் கருக்கத்தால்விக்கல் ஏற்படுகிறது, பெரும்பாலான நேரங்களில் தானாகவே நிற்கும், ஆனால் நீண்ட நேரம்விக்கல் தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் .குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம்.ஒரு டிஸ்பூன் வெண் சர்க்கரையை நாக்கில் வைத்து மெதுவாக சாப்பிடவும். இது நரம்புகளை மறுசீரமைக்க உதவும்.ஒரு சொட்டு எலுமிச்சை சாறு நாக்கில் இட்டால் விக்கல் நிற்கும்.ஆழமாக மூச்சை இழுத்து, 10 முதல் 15 வினாடிகள் வரை மூச்கை பிடித்துக்கொண்டு பின்னர் மெதுவாக வெளியே விடவும்.மூக்கையும் வாயையும் மூடி சில விநாடிகள் மூச்சை வெளியில் விடாமல் இருக்க வேண்டும்.கவனத்தை மாற்றி வேறு ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் சில நேரங் களில் விக்கல் தானாக நிற்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நரம்புதளர்ச்சி போன்ற காரணங்களால் விக்கல் உண்டாகலாம். விக்கல் அடிக்கடியோ, தொடர்ந்தோ ஏற்பட்டால் சில உடல்நல பாதிப்புகள் அதற்கு காரணமாகஇருக்கலாம்.  மருத்துவரை கண்டிப்பாக அணுகுவது அவசியமானது.

Feb 17, 2026

உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழையசோறு முதலிடம்.

உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப் பட்டியலில் பழையசோறு முதலிடம் வகிக்கிறது. இது அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு. 'பிரியாணிகூட இரண்டு மணி நேரத்துல கிடைக்கும். ஆனா பழையசோறு வேணும்னா ஒருநாள் காத்து இருக்கணும்' என்று சொல்வார்கள் நமது வீட்டுப் பெரியவர்கள். அது உண்மை தான். சோற்றில் நீர் ஊற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி என்ன இருக்கிறது பழையசோற்றில்... வடித்த சோற்றில் 3, 4 மி.கி. இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சோறாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும். பாரம்பரியத்தைப் போற்றுவோம்! இனி கொஞ்சம் பழைய சோற்றுக்கு மாறித்தான் பார்ப்போமே!

Feb 16, 2026

பூரான் கடித்தால் ..

யாருக்காவது பூரான் கடித்து விட்டால் கல் உப்பை தண்ணீரில் கரைத்து கடிபட்ட இடத்தில் கழுவவும். உப்பு ஆன்டிசெப்டிக்காக பயன்படுகிறது. பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டவும். இதை கட்டுவதால் பூரான் விஷம் உடனடியாக குறைந்துவிடும். இன்னொரு முறையும் உண்டு. பூரான் கடித்தால் வெற்றிலையுடன், மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் விஷம் குறைந்து விடும்.

Feb 14, 2026

சளி சம்பந்தமான நோய்கள் குணமாக கற்பூரவள்ளி இலை

கற்பூரவள்ளி இலையை காலை வேளையில் எடுத்து வந்தால் ,சளி ,இருமல், தொண்டை வறட்சி, தொண்டை கம்மல், உடனே குணமடையும்.பத்து கற்பூரவள்ளி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதாவது மூன்று டம்ளர் தண்ணி அளவு2 டம்ளராக குறைய வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி, ஆற வைத்து சிறிது தேன் சேர்த்து பருகினால், சளி சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமடையும்.

Feb 12, 2026

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும் கொடுக்காப்புளி.

காற்று மூலம் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், கொடுக்காப்புளி கிடைக்கும் போதெல்லாம் அதை சாப்பிடுவது நல்லது. கொடுக்காப்புளியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்(Phytochemicals) இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்(Glucose) அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க அல்லது அதைக் கட்டுக்குள் வைக்க இது நன்மை பயக்கும்.

Feb 11, 2026

ஜலதோஷம், சளிக்கு வீட்டு மருந்து…

ஜலதோஷம் வருவது போல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு,1 சிட்டிகை மஞ்சள்,1 சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ் நீரோடு சாப்பிட வேண்டும் அதன் பிறகு குறைந்த பட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகச்சிறந்த கிருமி நாசினி இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.

Feb 10, 2026

கொழுப்பை எரிக்க பிளாக் காபி....

பிளாக் காபி என்றால் பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி ஆகும். இது காபியை தண்ணீரில் மட்டுமே கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 4 கப் கருப்பு காபி குடிக்கலாம். உங்களது கொழுப்பை எரிக்க நீங்கள் விரும்பினால் கருப்பு காபி குடிப்பது மிகவும் நல்லது.ஒவ்வொரு 1 கப் ப்ளாக் காபிக்குப் பிறகும் 2 கப் தண்ணீர் குடிக்கவும், இதனால் நீரிழப்பு ஏற்படாது. 1கப் கருப்பு  காபி தோராயமாக 17 கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 2 கப் கருப்பு காபி குடித்தால்  அது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் சுமார் 300 மில்லிகிராம் காஃபின் உட்கொண்டால், அது உங்கள் வொர்க்அவுட்டின் தீவிரத்தை அதிகரிக்க உதவுகிறது.காஃபின் உள்ளடக்கம் காபியிலிருந்து காபி வரை மாறுபடும்.

Feb 09, 2026

கொய்யாபழத்தை இரவில் சாப்பிடுவதால் ....

கொய்யாப்பழத்தைமாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடக்காது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.ஜலதோஷம், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் உள்ளவர்களுக்கு, அந்த பாதிப்புகளை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. செரிமான கோளாறு மற்றும் வயிற்று தொந்தரவுகளை இரவில் ஏற்படுத்தலாம். எனினும், பழுத்த கொய்யாப்பழம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது. 

Feb 07, 2026

 கழுத்து வலி, மூட்டுவலி  குணமாக...

முருங்கைக் கீரையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சில நாட்களுக்கு சூப்பு போல குடிக்கலாம். ருசிக்கு மிளகு சீரக தூள் கொஞ்சம் போட்டுக்கலாம், கழுத்து வலி, மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும். சர்க்கரை வியாதி, சளி, ஆஸ்துமா, இரத்தசோகை(ஹீமோகுளோபின்). உடல்சூடு, மலச்சிக்கல், தலைமுடி வளர்ச்சியின்மை, நரைமுடி, அல்சர், வாய்ப்புண், பற்கள் உறுதியின்மை. தலைவலி, தாய்பால் சுரப்பின்மை இதெல்லாம் கூட குணமாகிவிடும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 51 52

AD's



More News