மார்பகப் புற்றுநோய் உட்பட சுமார் 137 வகையான அவசியமான புற்றுநோய் மருந்துகளின் விலை சுமார் 70% வரை குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த மருந்துகளின் மீதான லாப வரம்பு அதிகபட்ச சில்லறை விலையில் 30%-ஆக மட்டுமே நிர்ணயிக்கப்படும் என்றும், இந்த விலை மாற்றங்கள் வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் விமான இணைப்புகளை மேம்படுத்தவும் உதவும் என நிறுவனங்கள் கருத்து!விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரியை(VAT) குறைத்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் நன்றி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழக அரசின் இந்த வரிக் குறைப்பு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தவும் உதவும் என நிறுவனங்கள் தெரிவித்ததாகச் செய்தி. வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ்!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.லாபம் ஈட்டாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.3,000 தீபாவளி போனஸாக வழங்கப்படும்.மொத்தம் 2.60 லட்சம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க ரூ.367.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள்(ATF) மீதானVAT வரியைக் குறைக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வரவேற்றுள்ளார்.விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயணிகளின் நலனே எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய முடிவை எடுத்த தமிழக அரசிற்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
குழந்தைகள் தினத்தை (நவ.14) முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஸ்பாஞ்ச் கேக் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.செலவு: ₹9.27 கோடி,எண்ணிக்கை: 61,84,566 கேக் துண்டுகள்,எடை: ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
வீடுகள்தோறும் மேற்கூரை சூரியசக்தி (ROOFTOP SOLAR) அமைக்க தமிழ்நாடு அரசின் சிறப்பு கூடுதல் மானியம்."மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி என்ற இலக்கு"திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர்தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் விண்ணப்பிக்க மற்றும் அனைத்து விவரங்களையும் பெற,www.tnebltd.gov.in/usrp/. நிறுவுதிறன்1 கிலோவாட் வரை 2 கிலோவாட் வரை 3 கிலோவாட் வரை மத்திய அரசு மானியம் - ரூ. 30000 , ரூ. 60000 , ரூ. 78000தமிழ்நாடு அரசு சிறப்பு கூடுதல் மானியம் - ரூ. 5000, ரூ. 10000, ரூ. 22000மொத்த மானியம் - ரூ. 35000, ரூ. 70000, ரூ. 100000இரண்டு மாதத்திற்கு மின் கட்டண சேமிப்பு (தோராயமாக) - ரூ. 2016, ரூ. 6552 , ரூ. 11592இருமாதத்திற்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்கட்டணத்தின் அடிப்படையில் மற்றும் சோலார் மின் உற்பத்தி உள்ளூர் வானிலையின் அடிப்படையில் மாற்றத்துக்கு உட்பட்டது. சிறப்பம்சங்கள் - மத்திய அரசு மானியத்துடன் தமிழக அரசின் கூடுதல் மானியம்.மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் (அ) கீழ்கண்ட -QR Code-ஐ பயன்படுத்தி பதிவு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அறியலாம்.மானிய விவரங்கள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் திட்டத் தகவல்களை ஒரே தளத்தில் அறியலாம்.தமிழக அரசின் கூடுதல் மானியத்திற்குத் தனியாக இரண்டாவது விண்ணப்பம் தேவையில்லை.
நாகூர் தர்காவில் நடைபெறும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழாவிற்காக (நவம்பர் 10), 45 கிலோ இரண்டாம் தர சந்தனத்தை இலவசமாக வழங்குவதற்கான அரசு ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் நாகூர் தர்கா பிரதிநிதிகளிடம் (அக்டோபர் 22, 2026) வழங்கினார்.உடனிருந்தோர்:சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜே. முகமது ஃபர்வாஸ், வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி.முதலமைச்சரைச் சந்தித்த முக்கிய அதிகாரிகள்.ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகள்: தமிழ்நாடு மாநில குடிமைப் பணியிலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) அண்மையில் பதவி உயர்வு பெற்ற 11 அதிகாரிகள் (ஆர். பிரியா, எஸ். பிரசன்னா ராமசாமி, எம். இந்துமதி, ஆர். ராஜாகிருபாகரன், எஸ். சங்கீதா, கே. பிரியா, எம். மணிமேகலை, ஏ. மீனா பிரியதர்ஷினி, என். காளிதாஸ், டி. செங்கோட்டையன், எஸ். சாந்தி) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள்: சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தின் தூதரகத் தலைவர் (Consul General) சிலாய் ஜாகி, துணைத் தூதரக அதிகாரிகள் கத்ரீனா நாப், அலெக்சாண்டர் வெனிசியானோ மற்றும் மேலாளர் வி. கார்த்திகேயன் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.தெற்கு ரயில்வே பொது மேலாளர்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் யு. சுப்பா ராவ் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், அதற்குத் தேவையான ஆதரவை மாநில அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.நாகூர் தர்காவில் நடைபெறும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழாவிற்காக (நவம்பர் 10), 45 கிலோ இரண்டாம் தர சந்தனத்தை இலவசமாக வழங்குவதற்கான அரசு ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் நாகூர் தர்கா பிரதிநிதிகளிடம் (அக்டோபர் 22, 2026) வழங்கினார்.உடனிருந்தோர்:சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜே. முகமது ஃபர்வாஸ், வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி.முதலமைச்சரைச் சந்தித்த முக்கிய அதிகாரிகள்ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகள்: தமிழ்நாடு மாநில குடிமைப் பணியிலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) அண்மையில் பதவி உயர்வு பெற்ற 11 அதிகாரிகள் (ஆர். பிரியா, எஸ். பிரசன்னா ராமசாமி, எம். இந்துமதி, ஆர். ராஜாகிருபாகரன், எஸ். சங்கீதா, கே. பிரியா, எம். மணிமேகலை, ஏ. மீனா பிரியதர்ஷினி, என். காளிதாஸ், டி. செங்கோட்டையன், எஸ். சாந்தி) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள்: சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தின் தூதரகத் தலைவர் (Consul General) சிலாய் ஜாகி, துணைத் தூதரக அதிகாரிகள் கத்ரீனா நாப், அலெக்சாண்டர் வெனிசியானோ மற்றும் மேலாளர் வி. கார்த்திகேயன் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.தெற்கு ரயில்வே பொது மேலாளர்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் யு. சுப்பா ராவ் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், அதற்குத் தேவையான ஆதரவை மாநில அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
அரசு அறிவிப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்.சென்னையில் ரூ.3,108 கோடியில் குடிநீர் திட்டம்.சென்னையில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 9 முக்கிய குடிநீர் ஆதாரங்களை ஒன்றிணைக்கும் பிரம்மாண்ட 'ரிங் மெயின் சிஸ்டம்' திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 8 வயது முதலே வீரர்களைக் கண்டறிந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்குவதை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) கடன் பெறும் விகிதம் 21% சரிவடைந்துள்ளது.மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவிலும் 21% குறைவு ஏற்பட்டுள்ளது.இத்தகவலை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.