25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 07, 2026

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், இராஜபாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் மருத்துவ  சேவையினை குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் 4 தளங்களுடன் மொத்தம் 9118 ச.மீ  பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதன்படி தரைத்தளத்தில், பொது மருத்துவ வெளி நோயாளி பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜீ பரிசோதனை மையம், மைய நீராவி தொற்று நீக்கும் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவும்,முதல் தளத்தில், அறுவை அரங்குகள் (3 எண்ணம்), எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, முதியோர் மருத்துவ பிரிவு, கண்காணிப்பு பிரிவு, குழந்தை மருத்துவ வெளிநோயாளி பிரிவு, மயக்கவியல் பிரிவும், இரண்டாம் தளத்தில், ஆண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி மற்றும் தொற்று நோள் ஆய்வகமும், மூன்றாம் தளத்தில், பெண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, பெண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும், நான்காம் தளத்தில், பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்பது கிராமப்புற மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது. மருத்துவ சேவைகளுக்கு குறிப்பாக உயர் மருத்துவ சேவைகளுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. தற்போது இந்த பகுதியிலேயே இராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதனால் இப்பகுதி மக்கள் விருதுநகர் வரை செல்லாமல் அருகிலேயே உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற முடியும். இதனால் நேரமும், பண விரயமும் மிச்சமாகும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில்குமார், சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜபாளையம் நகர்மன்றத்தலைவர் திருமதி பவித்ரா ஷ்யாம், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

Feb 06, 2026

ஆணைக்குட்டம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி தரம் குறித்து ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆணைக்குட்டம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் (05.02.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வி தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Feb 06, 2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  பல்வேறு  திறன் அடிப்படையிலான  பயிற்சிகள்  வழங்கப்படுகிறது. 

 தாட்கோ  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு   உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர் தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), ஆடை வடிவமைப்பு (ம)  மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management)   ஆகிய பயிற்சிகள்  வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியில்  சேர   ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியின   இனத்தை  சார்ந்தவர்களாகவும், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர் தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), போன்ற பயிற்சிகளுக்கு 18  முதல் 25 வயது  வரை  உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும்,  ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி(Glam and Cosmetology Salon Management)   போன்ற பயிற்சிகளுக்கு 18  முதல் 40 வயது  வரை  உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ்  மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்  இருக்க வேண்டும்.இப்பயிற்சியினை  பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால  அளவு  மூன்று மாதங்கள்  ஆகும்.  மேலும் சென்னையில்  உள்ள  விடுதியில்  தங்கி  படிக்கும்  வசதி  மற்றும்  உணவுக்கான    செலவினம் தாட்கோ மூலமாக  வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 06, 2026

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தமிழ் பாடி ஊராட்சியில்  தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தமிழ் பாடி ஊராட்சியில் இன்று (05.02.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Feb 06, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள் தேர்வு -II , முதன்மை எழுத்துத் தேர்வு -,பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் .

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்எதிர்வரும் 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள் தேர்வு -II (தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination) பதவிகளுக்கான போட்டித் தேர்வு விருதுநகர், கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் (K.V.S HR SEC SCHOOL VIRUDHUNAGAR) முற்பகல் 228 தேர்வர்கள் மற்றும பிற்பகல் 231 தேர்வர்கள் மொத்தம் 459 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை 08.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 09.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு பிற்பகல் 01.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 02.00 மணிக்கு மேல்  தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வர்கள் பிற்பகல் 05.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.   தேர்வர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN Card) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் கருப்புநிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  மேலும் தேர்வர்கள் தேர்வு கூடத்தின் உள்ளே மொபைல் போன், மின்னணு கைக்கடிகாரம் (Electronic Watch) புளுடூத் (Bluetooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்கள் (Simple Analog Watches) பயன்படுத்தலாம். தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் தேர்வு நாளன்று காலை 06.00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 05, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு-2024-2026 ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(04.02.2026) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு 2024-2026 ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் திரு.எஸ்.காந்திராஜன்(வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்(வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), திரு.ஈ.ராஜா(சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்), திரு.இராம கருமாணிக்கம்(திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) ஆகியோர் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை), பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை), சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அறநிலையங்கள் துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை), இயற்கை வளங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, அதன் பயன், தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறையை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.28 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு  ரூ.16,196 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டியினையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3000 மதிப்பில் தார்பாலினையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.72,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.60,210 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 05, 2026

பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு .

 விருதுநகர் மாவட்டத்தில் (04.02.2026) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர்  திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்(வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), திரு.இராம கருமாணிக்கம்(திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) ஆகியோர் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 7.57 கோடி மதிப்பில் தினசரி சந்தை மார்க்கெட் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம்  குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்தில் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்கள்.பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் அரசு மானியம் பெற்று செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, மருந்தகத்தின் செயல்பாடுகள், மருந்துகளின் வகைகள், கொள்முதல் செய்யும் முறை, நுகர்வோரை அணுகும் முறை, பொதுமக்கள் பெறும் பயன்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை, நேரில் சென்று பார்வையிட்டு, பூங்காவின் அமைப்பு, வளர்க்கப்படும் மரங்கள், தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா, நடைபாதை, அடர்வனம்(மியாவாக்கி)  உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் கே.புதூர் - சிவகாசி ஒன்றிய சாலையில் அர்ஜுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர  அறிவுறுத்தினார்கள்.பின்னர், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட, கோட்டைப்பட்டியில்  நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில்,  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து  பயன்பாட்டிற்கு கொண்டு வர  அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிருஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் கடனுதவி பெற்று, சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் பயனாளியை நேரில் சந்தித்து, தயாரித்து வரும் பொருட்கள், விற்பனை குறித்து கேட்டறிந்து, தொழிலை மேலும் விரிவுபடுத்த அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும், விருதுநகர் நகராட்சியில்  நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலை கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து  பயன்பாட்டிற்கு கொண்டு வர  அறிவுறுத்தினார்கள்.

Feb 05, 2026

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10 ஆயிரம் முகாம்கள் பயனாளிகள் மற்றும் புதிய சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் (04.02.2026) நடைபெற்ற அரசு விழாவில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 1533 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன்படி, வருவாய்த்துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 75 இலட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 600 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 46 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலும்,மாவட்ட தொழில்மையம் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.37 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழிலாளர் நலவாரியம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.9,600/- மதிப்பிலும்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 11 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 42 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.74 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், மின்சாரத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளையும்என ஆக மொத்தம் 1533 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான்,I A S அவர்கள், சீர்மரபினர் நலவாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன் அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 05, 2026

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு 09.02.2026 அன்று இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய /மாநில / பொதுத்துறை நிறுவனங்கள்(SSC/RRB/LIC AAO/IB/ ASST Commandant....) மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு, நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு (தமிழ்/ ஆங்கிலம்) போன்ற பாடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகரில் 09.02.2026 அன்று முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.எனவே, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பொதுவான பாடங்களுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 04, 2026

“என் ஊர், என் கனவு” (Vision-2030) திட்டம் இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (03.02.2026) “என் ஊர், என் கனவு” (Vision-2030) திட்டம் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில், இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான  கலந்தாய்வுக் கூட்டத்தினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ராஅவர்கள், I A S ., துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு துறைகள் மூலமாக உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனுடைய அடுத்த முன்னெடுப்பாக “என் ஊர் என் கனவு” திட்டமானது 2030 க்கான கனவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது."என் ஊர் என் கனவு" (My Town My Dream) என்ற திட்டமானது, 2030-க்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரையும், மாவட்டத்தையும் இலக்கு வைத்து, வளர்ச்சிக்கான தொலைநோக்கு அறிக்கை (Vision Document) தயாரிக்கும் தமிழக அரசின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது.கூடுதலாக மாவட்ட வளர்ச்சிற்காக திட்டமிடுவதற்காக “என் ஊர் என் கனவு” திட்டம் மூலம் 2030 எதிர்கால தொலைநோக்கு பார்வையோடு, விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளில் சிறந்த சாதனையாளர்கள், தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிகள், அலுவலர்கள், துறை வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO’s) சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிற பங்குதார்களை கொண்டு கருத்துகள் கேட்பதற்காக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றது.இதன் மூலம் கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று விவாதித்து 2030 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் திட்ட ஆவணத்தை (preparation of vision 2030 Strategy and plan Document) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக தொழிலாளர் நலத்துறை, கல்வி வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை, உள்கட்டமைப்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய 5 முதன்மைத் துறைகள் தேர்வு செய்து, அதன்கீழ் பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அத்துறைச்சார்ந்த வல்லுநர்களால் அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த திட்டங்களை Template ஆக உருவாக்கப்படவுள்ளது.அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்ட கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 இடங்களில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அனைத்து துறைச்சார்ந்த வல்லுநர்களால் அளிக்கப்பட்ட திட்டங்கள் தொகுக்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் ஒருநாள் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு அனுப்பப்பப்படும்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முன்னெடுப்புக்கு தேவையான கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.முன்னதாக, இக்கூட்டத்தில் சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த சிறுதானிய உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்து மாறாமல் மதிப்புக்கூட்டி 16 வகையான பொருட்களை தயார் செய்து வெற்றிகரமாக லாபம் ஈட்டி ஆசியா புக் ஆப் ரிக்கார்டடு விருது, புதிய கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசின் தேசிய விருது, தமிழ்நாடு வர்த்தக சங்கத்தால் மில்லட் மேன் தமிழ்நாடு விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற  திரு.எஸ்.சிவகுமார் அவர்கள்,கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வீணை இசையில் முதலிடம் பிடித்த விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.மோகன அரசி அவர்கள்,சதுரங்க போட்டியில் 3 முறை இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் (SGFI) 2 முறை தங்கப்பதக்கமும், 1 முறை வெள்ளிப்பதக்கமும் பெற்ற செல்வன் ஷதுர்ஷான் அவர்கள் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்இக்கூட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திருமதி கு.மோகனா,  மேற்பார்வை பொறியாளர் (விருதுநகர் மின் பகிர்மான வட்டம்) திருமதி லதா, அரசு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO’s) சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 61 62 63 64 65 66 67 ... 157 158

AD's



More News