25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 11, 2026

மனதளவில் Strong  ஆக....

.சில பேரை எந்த முன்னறிவிப்பும் இல்லாம வாழ்க்கையில இருந்து கட் பண்ணிடுவீங்க. மன்னிப்பீங்க, ஆனா திரும்ப அவங்க கூட சேர மாட்டீங்க.  உங்க வாழ்க்கையில் நடக்குற எல்லாத்தையும் ஸ்டேட்டஸா போட மாட்டீங்க.  தனியா வாழறதுல உங்களுக்கு பயம் இல்ல. குற்றஉணர்ச்சி இல்லாம "NO" சொல்ல கத்துக்குவீங்க. நிரூபிக்கிறத விட நிம்மதிதான் முக்கியம்னு நினைப்பீங்க. அட்ஜஸ்ட் பண்ணுவீங்க, ஆனா உங்க சுயத்தை இழக்க மாட்டீங்க. சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ண மாட்டீங்க. உங்க காயங்களை யாருக்கும் தெரியாம நீங்களே ஆத்திக்குவீங்க. .அமைதியா இருக்கிறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

May 11, 2026

விண்வெளியில் ஒரு தங்கச் சுரங்கம்.

விண்வெளியில் சுற்றித் திரியும் 16 சைக்கி (16 Psyche) என்ற விண்கல், உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடக்கூடிய ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த விண்கல், வெறும் பாறைகளால் ஆனது அல்ல; இது தங்கம், இரும்பு மற்றும் நிக்கல் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் நிறைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் $700 குவிண்டில்லியன் ($700 quintillion) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்செல்வம் முழுவதையும் பூமிக்குக் கொண்டு வந்து மக்களிடையே பகிர்ந்துஅளித்தால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு கோடீஸ்வரராக (Billionaire) மாற முடியும் என்பது வியக்கத்தக்க உண்மை. தற்போது நாசா (NASA) இந்த விண்கல்லை ஆய்வு செய்யத் தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது, இது எதிர்காலத்தில் விண்வெளி சுரங்கத் தொழிலுக்கு (Space Mining) ஒரு புதியவாசலைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

May 11, 2026

ஈரக் குப்பைகளை பயோகேஸாக மாற்றி LPGக்கு பை?

பெங்களூரில் தினமும் வரும் 3,000 டன் ஈரக் குப்பைகளை பயோகேஸாக மாற்றி, மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு சென்று எரிவாயுவாக பயன்படுத்துகின்றனர்.அந்த வாயுவை ஹோட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.இப்படி செய்தால் LPG தேவையும் குறையும்.குப்பையும் பயனுள்ளதாக மாறும்.

May 09, 2026

45 டிகிரி செல்சியஸ்! அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தியா ஒரு நெருப்புக்கோளம் போலத் தகிக்கப் போகிறது.

இந்தியா முழுவதும் அனல் காற்று தீவிரமடைந்துள்ளது.பல நகரங்களில் வெப்பம் 45°C-ஐ நெருங்குவதால், ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) ஏற்படும் அபாயம் உள்ளது. வறண்ட காற்று மற்றும் மேகங்கள் இல்லாததே இந்த அகோர வெயிலுக்குக் காரணம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பாக இருங்கள்

May 09, 2026

வணக்கம் +2 மாணவ, மாணவிகளே…

 சாத்தூர்  SRNM Politechnic ல் புதியதாக LAB technician course மற்றும் X Ray technician course இருக்கிறது . இந்த course க்கான கட்டணத்தை Siemens நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது . அதுமட்டுமின்றி இரண்டாம் வருடம் Internship கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிர்வாகம் உதவி தொகையுடன் வழி வகை செய்கிறது.இந்த அரிய வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .இதே கல்லூரியில் Fashion Technology course உள்ளது என்பது கூடுதல் தகவல் .

May 09, 2026

டிக்கெட் கன்பார்ம் ஆகலையா? இனி கடைசி நேரத்தில் கூட கன்பார்ம் ஆகும் - வந்தாச்சு புதிய சார்ட் ரூல்ஸ்..

புதிய விதிகளின்படி, இந்தியன் ரெயில்வே முதல் முன்பதிவுப் பட்டியல் 10 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்ட பிறகு, ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இறுதி முன்பதிவுப் பட்டியலை வெளியிடுகிறது. எனவே பயணிகள் முதல் முன்பதிவுப் பட்டியலில் உங்கள் காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டு உறுதிசெய்யப்படவில்லை என்றால் பதற்றமடையாமல் இரண்டாவது (இறுதி) முன்பதிவுப் பட்டியலைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

May 09, 2026

வாகன ஓட்டிகளே கவனம். HSRP நம்பர் பிளேட் இல்லைனா ₹10,000 அபராதம்

இனிமேல் HSRP நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் வாகன புகை பரிசோதனைசான்றிதழை பெற முடியாது என்றும், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் போக்குவரத்து துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது இன்னும் கட்டாயம் என அறிவிக்கப்படவில்லை என்றாலும், மற்ற மாநிலங்களில் தொடர்வதால் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது .

May 09, 2026

தொடர்ந்து மொபைலைப் பயன்படுத்தும் பழக்கத்தால். கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

 ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் .30 வயது பெண்... நள்ளிரவு வரை தொடர்ந்து மொபைலைப் பயன்படுத்தும் பழக்கம் எனக்கு இருந்தது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பல மணி நேரம் திரையில் பார்த்ததால் அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. படிப்படியாக அவளுடையகண்களில் கண்பார்வை பலவீனமடைந்து இறுதியாக கிட்டத்தட்ட மறைந்தது. "இந்தசம்பவம் தொழில்நுட்பம் வசதியை வழங்குகிறது என்பதை நினைவூட்டுகிறது, ஆனால் கவனமாக இல்லாவிட்டால், அதற்கு நிறைய செலவாகும்.

May 09, 2026

2.5 மில்லியன் ஜிகாபைட் (GB).

மனித மூளையின் சேமிப்புத் திறன் சுமார் 2.5 மில்லியன் ஜிகாபைட் (GB). இது சுமார் 300 ஆண்டுகள் ஓடக்கூடிய வீடியோவிற்குச் சமம். ஆனால், போதிய தூக்கம் இல்லையென்றால் இந்தத் தரவுகளை மூளையால் சரியாகச் சேமிக்க முடியாது

May 09, 2026

வானில் நிகழப்போகும்  ப்ளூ மூன்.. விண்கற்கள் மழை!

! மே மாதத்தில் "ப்ளூ மூன்" தோன்றுகிறது. ஏற்கனவே 1 ஆம்தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில், மே 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றுகிறது. வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்; இதுபோக மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" வானில் இந்தமாதம் தோன்ற உள்ளது.

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 131 132

AD's