25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


முக்கிய அறிவிப்பு

Jan 19, 2024

ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கத்தில் (காந்தி கலைமன்றம் வளாகம் ) 22.01.2024 MONDAY 10.30 A.M TO 12.30 P.M ''ஸ்ரீ ராம தாரக நாம ஜபம்"

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள்ஆகியோர்களின் பரமானுக்ரஹத்துடன் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை செய்யும் நன்னாளான 22.01.2024  MONDAY  10.30 A.M TO 12.30  P.M''ஸ்ரீ ராம தாரக நாம ஜபம்"நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹா ஜனங்கள் அனைவரும் இணைந்து ஜபித்து ஸ்ரீ ராமபிரான் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.இடம்: ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கத்தில் (காந்தி கலைமன்றம் வளாகம் ) இப்படிக்குபி.ஆர்.வெங்கட்ராம ராஜாகுறிப்பு: அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை பூஜையானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Jan 17, 2024

நீர் நிலைகளில் பயமின்றி குதிக்கும் சிறுவர்கள்

இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. பொங்கலை ஒட்டி பள்ளி தொடர் விடுமுறையால் மாணவர்கள் சிறுவர்கள்ஆர்வம் மிகுதியால் உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் இன்றி நீச்சல் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியவர்கள் கண்காணிப்பின்றி சிறுவர்கள் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டு நீர் நிலைகளில் சிக்கி  உயிரிழக்கும் செய்திகள்  வருகின்றது

Jan 11, 2024

விருதுநகர் - சிவகாசி , அழகாபுரி மற்றும் மீசலூர் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள்

விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி மற்றும் செவல்பட்டி வழியாக மீசலூர் செல்லும் ரெயில்வே இருப்புப்பாதை - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:410 Rly KM:  544/400-500  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.12.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jan 10, 2024

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள்

விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில் (சாத்தூர்-விருதுநகர் சாலை அமைந்துள்ள) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 11.01.2024 ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக - இரயில்வே நிர்வாகம் அறிவிப்புவிருதுநகர்- சாத்தூர் விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407  Rly KM:  541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jan 09, 2024

மாவட்ட சமூகநல அலுவலத்தின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான, திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணபிக்கலாம்

 2023-2024-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விருதின் பெயர்: திருநங்கையருக்கான முன் மாதிரி விருதுதகுதிகள்:1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.4. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) இணையதளம்  மற்றும்  நேரில்  சமர்ப்பிக்க  வேண்டும்.விண்ணப்பதாரரின் கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.2. உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -23. சுயசரிதை4. தனியரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்).5. தனியர் பெற்ற விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம்/விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).6. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).7. சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.8. சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை9. சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரம்.10. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று.11. கையேடு இரண்டு நகல்கள் தமிழில்.திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 31.01.2024 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 31.01.2024-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க  வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.

Jan 08, 2024

ஜனவரி-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Jan 04, 2024

பள்ளி ,கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

  2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.01.2024  அன்று விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளயிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.01.2024 அன்று சிவகாசி தி.ஸாண்டர்டு /பயர்ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரியிலும் நடத்தப்பெற உள்ளன.  பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார்/ அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து  அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/  மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  பங்கேற்கலாம்.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி ,கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்  ஒப்பத்துடனும் , கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ,  அஞ்சல்  முலமாகவோ,  மின்னஞ்சல் - (tamilvalar.vnr@tn.gov.in)   முலமாகவோ 08.01.2024   க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக அறிவிக்கப்பட மாட்டா. போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  பரிசுகள் வழங்கவுள்ளார்.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில்  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம்பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/-  என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள்  வழங்கப்பட உள்ளன.  மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000/- இரண்டாம் பரிசாகரூ.12,000/- மூன்றாம் பரிசாகரூ.10,000/- வழங்கப்பெறும்.

Jan 04, 2024

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், கருத்தரங்கங்கள் ஆகியன மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென  தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் தலைமையில்  சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள்/கல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென இக்குழு தீர்மானித்துள்ளது.அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும்பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர்  திரு.இரா.ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் திரு.மா.செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன், விருதுநகர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை வருகிற 10-1-2024 (புதன்கிழமை) அன்று நடத்துவதென முடிவெடுத்துள்ளது.இக்கருத்தரங்கு 10-1-2024 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பிற்பகல் 3-00 மணியளவில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியிலும் நடைபெறும்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி/கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 03, 2023

கோமாரிநோய் தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 2023 நவம்பர்  06-ஆம் தேதி முதல் நவம்பர் 26 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளதால் கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்திக்  கொள்ளலாம்.  கோமாரி நோய் ஒரு வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் குழம்பு பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.  காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.  இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு. எருதுகளின் வேலைத்திறன் குறைவு கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள்; சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.  இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின்  சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணி  நிறைவு பெற்றுள்ளது.தற்போது 4-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 2023 நவம்பர் 06-ஆம் தேதி முதல் நவம்பர் 26 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1.79 இலட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள் எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Oct 27, 2023

தொடர்ந்து ஆறு மாதங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து ஆறு மாதங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.ரேஷன் கார்டுகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்கவும், பயனாளிகளுக்கு சரியாக உதவிகள் கிடைக்கவும் கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் கார்டுகளை ரத்துசெய்யஉத்தரவிடப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.ரேஷன் கார்டை நிறையப் பேர் தவறாகப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பயனாளிகளுக்கு உதவி கிடைக்காமல் போகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல, ரேஷன் அரிசி திருட்டு போன்ற சம்வங்களும் அதிகமாக நடக்கின்றன.உண்மையில், ரேஷன் கார்டை நம்பியே நிறைய குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அதன் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு போன்றவற்றை வைத்தே தங்களது பசியைப் போக்குகின்றனர். ஆனால், நிறையப் பேர் பெயரளவில் ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமலேயே விட்டுவிடுகின்றனர். நிறைய குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு என்பது வெறும் அடையாள அட்டை போலவே இருக்கிறது.ரேஷன் கார்டில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கேரளா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருகின்றன.கர்நாடக மாநிலத்தில் பிபிஎல் கார்டுதாரர்களுக்கு மாநில அரசு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. கடந்த6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை தற்காலிகமாக ரத்து செய்ய உணவுத் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த6 மாதங்களாக ரேஷன் கிடைக்காத பிபிஎல் கார்டை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம்1.1 கோடி பிபிஎல் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால், கடந்த6 மாதங்களாக3.40 லட்சம் கார்டுதாரர்களுக்கு ரேஷன் வழங்கப்படவில்லை. அத்தகைய அட்டைகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு எந்த அறிவிப்பும் விடாமல் கார்டுகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரேஷன் கார்டுடன் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் கவலையில் உள்ளனர். ஒருவேளை உண்மையாகவே ரேஷன் உதவி தேவைப்படும் குடும்பங்கள் கடந்த6 மாதங்களில் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக, இலவச ரேஷன் உட்பட எந்த வகையான அரசு வசதிகளும் கிடைக்காது. தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாது. ஓய்வூதிய வசதி கிடைக்காது. மத்திய அரசின் திட்டங்களை கூட பெறுவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற நிறைய பின்னடைவுகள் ஏற்படும்.

1 2 ... 20 21 22 23 24 25 26 27 28 29

AD's



More News