25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Apr 10, 2024

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வாக்குபதிவு நடைபெறுவதை முன்னிட்டு மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (F.L-1), F.L-2/F.L-3/FL-4A  மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி, மக்களவை பொதுத்தேர்தல் 2024 - வாக்கு பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (Poll Day) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2/F.L-3/FL-4A  மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Apr 09, 2024

ஏப்ரல் 1 முதல் ஜிமெயில் சேவையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன

ஜிமெயில் சேவையை நம்பித்தான் உங்களுடைய ஒவ்வொரு நாளும் ஓடுகிறதென்றால்.. கூகுளின் இந்த இமெயில் சேவை இல்லமால் உங்களால் முழுதாக ஒரு நாளைக்கூட கடக்க முடியாதென்றால்.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிமெயில் விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்கள் ஆனது கூகுள் நிறுவனத்தால் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே கூகுள் நிறுவனம் இந்த கடுமையான விதியை நடைமுறைப் படுத்தி உள்ளது.அடுத்ததாக.. 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பும் எவருமே.. பல்க் செண்டர்கள் தான் என்று கூகுள் நிறுவனம் வரையறை செய்கிறது. எத்தனை துணை டொமைன்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரே முதன்மை டொமைனில் இருந்து அனுப்பப்படும் அனைத்து இமெயில்ககளும் இதில் அடங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படியாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இல்லாததால், அது நிரந்தரமாகி விடும். அதாவது ஒருவர் ஒருமுறை பல்க் செண்டர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவர் எப்போதுமே ஒரு பல்க் செண்டர் என்று தான் அடையாளம் காணப்படுவார், பல்க் செண்டர் வழிகாட்டுதல்கள் ஆனது தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும் இமெயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் கூட, அனைத்து அனுப்புநர்களும் கூகுளின் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதில் கூகுள் வொர்க்பிளேஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துபவர்களும் அடங்குவர்!கடைசியாக.. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) அமலுக்கு வரும். ஜிமெயிலின் க்ரூப் ப்ராடெக்ட் மேனேஜர் ஆன நீல் குமரன் பல பல்க் செண்டர்கள் தங்களின் சிஸ்டம்களை சரியான முறையில் செக்யூர் மற்றும் கான்ஃபிகரேஷன் செய்யவில்லை. இதனால் அட்டக்கர்களால் எளிதாக தங்களை மறைந்து கொள்ள முடிகிறது என்கிறார். இதனால்தான், ஏப்ரல் 1 முதல், பல்க் செண்டர்கள் அனைவரும் தங்கள் இமெயிலை "சிறந்த நடைமுறைகளைப்" பயன்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அதாவது டொமைன் அடிப்படையிலான மெசேஜ் அங்கீகாரம் (Domain-based Message Authentication), ரிப்போர்டிங் மற்றும் கன்ஃபார்ம்மென்ஸ் (Reporting & Conformance), டொமைன்கீஸால் அடையாளம் காணப்பட்ட மெயில் (DomainKeys Identified Mail) மற்றும் செண்டர் பாலிசி ஃப்ரேம்வொர்க் (Sender Policy Framework) போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்ஜூன் 1 முதல் இன்னொரு புதிய ஜிமெயில் விதியும் நடைமுறைக்கு வரும்! மேற்கண்ட புதிய ஜிமெயில் விதிகளை தவிர்த்து 2024 1 ஜூன் ஆம் தேதி முதல் பல்க் செண்டர்கள் அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும். மெயிலிங் லிஸ்ட்டில் (Mailing List) இருந்து அன்சப்ஸ்க்ரைப் முயற்சிக்கும் எவருக்குமே, அது மிகவும் சுலபமான செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் ஜூன் 1 முதல் பல்க் செண்டர்கள் தங்களுக்கு வரும் அன்சப்ஸ்க்ரைப் கோரிக்கைகளை (Unsubscribe requests) 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும்

Mar 26, 2024

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளன்று அவர்களின் சொந்த ஊரில் இருக்க வசதியாக உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் தத்தமது வாக்குரிமையை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களது ஜனநாயக உரிமையான வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்குவதுடன் பணியிடங்களில் பிரதான இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொருந்திய பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 20, 2024

ஸ்ரீ ராஜகணபதி,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம்

நிகழ்ச்சி நிரல்காலை 7.00 மணி-குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம்காலை 7.15 மணி-ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம்காலை 7.45 மணி-ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம்காலை 8.30 மணி-ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம்காலை 9.00 மணி-ஸஹஸ்ரநாம அர்ச்சனைகாலை 10.00 மணி-தீபாராதனை, ப்ரசாதம்மாலை 6.30 மணி-ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள்மாலை 7.15 மணி-ரதோற்சவம்ஸ்ரீ குருப்யோ நம:தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள்அவர்களின் பரிபூர்ண ஆசிகளுடன்நிகழும் மங்களகரமான 1198ம் ஆண்டு சோபகிருது வருஷம் பங்குனி 09ம் தேதி (22.03.2024) வெள்ளிக்கிழமையும் திரயோதசி திதியும் மகம் நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்ஸ்ரீ ராஜகணபதி,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்குஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் -ஸ்ரீ சாரதா சமிதி,இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்

Mar 20, 2024

மலையடிப்பட்டி ரயில்வே கேட் நாள் மார்ச் 22-ம் தேதி மூடப்படுகிறது

இராஜபாளையம் சஞ்சீவிமலை இடையே ரயில் பாதையில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. இந்த கேட் பராமரிப்பு பணிக்காக நாளை மார்ச் 22-ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூடப்படும். இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம். என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mar 19, 2024

85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட “படிவம் 12D” -ஐ பூர்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 25.03.2024 ற்குள் நேரில்; வழங்கி பயன்பெறலாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதற்காக தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரில் வழங்கப்படும் “படிவம் 12D” -ஐ பூர்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 25.03.2024 ற்குள் நேரில்; வழங்கி பயன்பெறலாம் என 34- விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 18, 2024

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

 எதிர்வரும்  19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இப்பணிக்காக மதிப்பூதியம் மற்றும் தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65ஆகும்.எனவே விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் திருவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடனடியாக நேரில் வருகை தந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

Mar 11, 2024

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் விரிவாக்க சேவைக்காக ஓராண்டு பட்டய படிப்பிற்கு TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட அளவில் இணையதள போர்டல் TNஅக்ரிஸ்நெட் வலைதளத்தில் முகப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் (MANAGE)  உடன் சமிதி பயிற்சி நிலையமும் இணைந்து வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பினை (DAESI)  நடத்தி வருகிறது.வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாது வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினை பெற்றிருப்பதில்லை.எனவே, வேளாண்மையில் இடுபொருள் விற்பனையாளர்கள் தொழில் நுட்பதிறனை/அறிவினை மேம்படுத்துவதற்கும், வேளாண் இடுபொருள்களை விற்பதற்கும் இப்பட்டையப் படிப்பில் இணைந்து பயன் பெறமுடியும்.இப்படிப்பிற்கு மாவட்ட வாரியாக விண்ணப்பதாரர்கள் மேற்காணும் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் தனியொரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://www.tnagrisnet.tn.gov.in/daesi/இணையதள இணைப்பினை பயன்படுத்தி விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 10, 2024

இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற துவக்கக் கூட்டம்

 நம் நகரத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் நலனுக்காக வரும் 13-03-2024 புதன் கிழமை அன்று புதிய சங்கம் தொடங்க ஆலோசனை சிறப்புக்கூட்டம் நடக்கவுள்ளது.அறுபது வயது நிறைவடைந்த ஆண், பெண் இரு பாலரும் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான பதிவுகள் ஏற்கப் படும்.கூட்டதேதி 13-03-2024, நேரம் . 5.00 - 7.000.இடம்-ஆனந்தா கார்டன், தென்காசி சாலை, இராஜபாளையம்.தலைமை கேப்டன் சிங்கராஜா அவர்கள்.(முன்னாள் தலைவர் சீனியர் சிட்டிசன்ஸ் பியுரோ, சென்னை)விளக்கவுரை, வாழ்த்துரை, திரு எம்.ஆர். அழகராஜா தலைவர் தென்காசி மூத்தோர் மன்றம். டாக்டர் S. குமரேசன், ஸ்ரீரெங்கா குழந்தைகள் நல மருத்துவ மனை,இராஜபாளையம்.சிறப்புரை திரு R. முத்துக்கிருஷ்ணன், முதுநிலை மேலாளர், ஹெல்ப்பேஜ் இந்தியா, சென்னை.மூத்தோர் நலச்சங்கம், பல முக்கிய நகரங்களில் நிறுவப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாமும் நமது இராஜை நகரில் இச்சங்கத்தினை துவக்கி பல நன்மைகள் பெறலாம்..எனவே, இராஜபாளையம் மூத்தோர் பெருமக்கள், இந்த நல்லநிகழ்ச்சியில் குடும்பத்துடன் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படிக்கு இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற அமைப்பு,

Mar 05, 2024

விருதுநகர் மாவட்டம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக  08.03.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN,  INFONET COMMUNICATION ENTERPRISES, PENTAGON GARMENTS, WILLIAMS WONDERS போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 08.03.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 18 19 20 21 22 23 24 25 26 27

AD's



More News