25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Jan 21, 2025

CHINMAYA VIDYALAYA: P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL , RAJAPALAYAM , FIFTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEET

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA:P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL ANDCHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMsolicit your esteemed presence for theFIFTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEETon Thursday, 23rd January, 2025 at 8.00 a.m. in the School Campus, Ilanthope.Chief Guest Commander Rajalingam Nagappan Executive Officer, INS Kattabomman.

Jan 09, 2025

CHINMAYA VIDYALAYA: SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAM:TWENTY-SIXTH SCHOOL YEAR SPORTS MEET

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA: SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAM: Cordially request your gracious presence on the occasion of TWENTY-SIXTH SCHOOL YEAR SPORTS MEET on Saturday, the 11th January, 2025 at 8.00 a.m. at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. Commander Rajalingam Nagappan Executive Officer, INS Kattabomman. has kindly consented to be the chief guest. He will preside over the function and give away the prizes. 

Jan 06, 2025

Rotary Karmaveerar Kamarajar Heart Care Bus. (  Rotary Club of Rajapalayam Dist 3212, Elders Welfare Association இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்)

Rotary Karmaveerar Kamarajar Heart Care Bus.Kavery Hospital, TirunelveliRotary Club of Rajapalayam Dist 3212, Elders Welfare Association இணைந்து நடத்தும் At Honourable P.S. Kumarasamy Raja Centenary Memorial Thirumana Mandapam '& Rajapalayam . இலவச இருதய பரிசோதனை முகாம்.P.S.K. Mandapam,Tenkasi roadJanuary 8, 2025Wednesday At 9:00 am..Morningவழங்கப்படும் இலவச இருதய பரிசோதனைகள்Digitalized BMI Vital Screening• சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு பரிசோதனைகள் .மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள்.• எலக்ட்ரோ கார்டியோ கிராம் (ECG)• எக்கோ கார்டியோ கிராம் (ECHO)

Jan 03, 2025

சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்

சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில்,05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இன்னிசை, பேருரை, பரிசளிப்பு, பாராட்டுநடைபெற உள்ளது.மன்றப் பணிகள்இல்லந்தோறும் திருமுறை ஒதுதல். மகாசிவராத்திரி - அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு கொடைநூல்கள் வெளியிடுதல்.தேவார இன்னிசை, பெரியபுராணம் கட்டுரைப் போட்டி, வள்ளலார் பேச்சுப் போட்டி நடத்தி பரிசளித்தல்.நடனம், நாடகப் போட்டி நடத்தி பரிசளித்தல்.மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூட்டம்  மறக்கண்ணு மண்டபத்தில் சொற்பொழிவு. 

Dec 26, 2024

முன்னாள் நிதி அமைச்சரும், பிரதமருமான மன்மோகன் சிங் காலமானார். 

  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு குடி பெயர்ந்தார். பஞ்சாப் பல்கலையிலும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையிலும், பொருளாதார படிப்பை முடித்தார். அதன் பின், பொருளாதார பேராசிரியராக பணியை துவங்கினார்.மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் குழு துணை தலைவர் போன்ற முக்கிய பதவிகளை பல்வேறு காலக் கட்டங்களில் வகித்துள்ளார். 1990ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.கடந்த, 1991ல் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது இவர் கொண்டு வந்த தாராள மயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது. மயக்கமடைந்த 'மன்மோகன் சிங்கை உறவினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில், 26 december இரவு 8:06  மணிக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி, இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, எய்ம்ஸ் மருத்துவ மனை, அதிகாரபூர்வமாக அறிவித்தது.    நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின் மீண்டும் பிரதமரானவர் என்ற பெருமைக்கு உரியவர். 

Dec 13, 2024

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் 5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட்  5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவுநிகழ்த்துபவர் பூஜ்யஸ்வாமி ஸ்ரீமத் சிவயோகானந்தாஅவர்கள் (ஸ்தாபகர், சின்மயா மீனாக்ஷி, மதுரை)15.12.2024  TO  20.12.2024  தினசரி  மாலை  6:30 - 07:45 "ஸ்ரீமத் பகவத்கீதை"16.12.2024  TO  20.12.2024   தினசரி காலை10:00 - 11:00 ''கடோபநிஷத்"இடம் :ஸ்ரீமதி P.S.K ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்ற வளாகம்) பி.ஏ.சி.ராமசாமிராஜா சாலை, இராஜபாளையம்.இப்படிக்குபி.ஆர்.வெங்கட்ராம ராஜா டிரஸ்டிகுறிப்பு:1. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பகவத்கீதை மற்றும் கடோபநிஷத் புத்தகங்களை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.2. வழக்கம்போல் பழையபாளையத்திலிருந்து காலை, மாலை பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

Nov 15, 2024

மா விளைச்சல் பாதிக்கப்பட்ட 144.45 ஹெக்டேர் மா பயிர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.26 லட்சம் 155 விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

 மாவட்டத்தில்மேற்குதொடர்ச்சிமலையைஒட்டியஇராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் மா மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 2023 நிதி ஆண்டில் மாமரங்கள் பூக்கும் காலத்தில் சாரல் மழை பெய்ததால் பூக்கள் அழுகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் இழப்பீடு குறித்து கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மா மரங்களை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட 144.45 ஹெக்டேர் மா பயிர்களுக்கு இழப்பு வழங்குவதற்காக ரூ.26 லட்சத்து 190 ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 185 விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. 

Nov 12, 2024

மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவர்களுக்கும்  “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சியானது 14.11.2024  அன்று நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில், மேனாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப.,  (ஓய்வு)  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.மேலும் இந்நிகழ்ச்சியானது, காலை 09.00 மணி முதல் 12.45 மணி வரை மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும், பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில்,  மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 12, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் - 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 05, 2024

"டாஸ்மார்க் " விற்பனை 430 கோடி .பின் தங்கப்போகும் தமிழகம்.பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ,டாஸ்மார்க் கடைகளில் 430 கோடி ரூபாய்க்கு விற்றதாகக் கூறி தமிழகமே ஏதோ சாதனை விற்பனை ஆனது போல செய்திகளை வெளியிடுவது வெட்கமும், வேதனையும் தருகிறது.தமிழ்நாட்டில் முதியோர் முதல், பள்ளி, மாணவ மாணவிகள் வரை மது குடிப்பதை பெருமையாக எண்ணிக் கொண்டு குடிக்கின்றனர். பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இப்படியே சென்றால் தமிழகம் போதைக்கு அடிமையாகி சீரழிவது நிச்சயம்.மது விலக்கை கொண்டு வந்தால் தான், நம் தமிழகம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. மது விலக்கை கொண்டுவருவதாக வாக்களித்தால் ஒட்டு கிடைக்காது என்பதால் ஆட்சிக்காரர்கள் ஐரூராக மது விற்பனை செய்கின்றனர். இந்தக் கடைகளை மூடிவிட்டால், கள்ளச்சாராயம் விற்பனைக்கு வந்து விடும் என சாக்கு சொல்கின்றனர் அமைச்சர்கள். கள்ளச்சாராயத்தை அரசு, மற்றும் காவல் துறையினால் தடுக்க முடியாதா ?குஜராத் மற்றும் பீஹார் மாநிலங்களில் ஒட்டு குறைந்தாலும், பரவாயில்லை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு பூரண மது விலக்கை அங்கே உள்ள ஆட்சியாளர்கள் கொண்டு வந்து பின் தங்கிய தங்கள் மாநிலங்களை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை அதிகரிப்பதால் தமிழ்நாடு குட்டிச்சுவராகும் என்பதில் ஐயமில்லை.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 26 27

AD's



More News