25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Feb 12, 2026

T-20 உலக கோப்பை A,'B,C' பிரிவு லீக் போட்டி.

இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பைதொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இதன் 'ஏ' பிரிவில் இன்றுநடக்கும் மோதலில்  இன்று நடப்பு சாம்பியன் ,இந்தியா, நமீபிய அணியை எதிர்கொள்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடக்கிறது..  'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், இலங்கையின் கொழும்புவில் அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த. ஆஸ்திரேலிய அணி  20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு  182 ரன் எடுத்தது அயர்லாந்து அணி 16.5 ஓவரில், 115 ரன்னுக்கு வரிசையாக 2வது தோல்வியை பெற்றது. 'சி' பிரிவு லீக் போட்டியில்  மும்பை, வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பீல்டிங்' தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது, T-20 உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டி.இங்கிலாந்து அணி 18.5 ஓவரில், 166 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது, 

Feb 12, 2026

'டி-20' உலக கோப்பைலீக் போட்டி 12th FEB

நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ,குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மோதின. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/6 ரன் எடுத்தது, ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்னில் ஆல் அவுட்டாக, போட்டி சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. இரு அணிக்கும் தலா  ஒரு ஓவர் தரப்பட்டன. போட்டி மீண்டும் 'டை' ஆனதுஐ.சி.சி., விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை, 'சூப்பர்  ஓவர்' தொடர்ந்து நடத்தப்படும். இரண்டாவது சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 23/0 ரன் எடுத்தது.ஆப்கானிஸ்தான் அணி 19/0 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

Feb 11, 2026

உலக கோப்பை டி-20' லீக் போட்டி .

 நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் சென்னையில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் மோதின . எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 173/6 ரன் எடுத்தது,  நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175/0 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றிபெற்றது. .  'T-20' உலக கோப்பை லீக் போட்டி நேற்று நடந்த கொழும்புவில் யில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 190/9 ரன்  எடுத்து வெற்றி பெற்றது.  அமெரிக்க அணி 20 ஓவரில் முதல் 158/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. நமீபியா, நெதர்லாந்து அணிகள் ,டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. நமீபிய அணி 20 ஓவரில்  156/8 ரன் எடுத்தது, நெதர்லாந்து அணி 18 ஓவரில் 159/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. 

Feb 11, 2026

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர்..

 புரோ லீக் தொடர் ,சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ,7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் கோப்பை வெல்லும் அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கதகுதி பெறலாம்.  முதல் போட்டியில் இந்திய அணி இன்று பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது. நாளை அர்ஜென்டினாவுடன் போட்டிநடத்துகிறது. இரண்டாவது  முறையாக  மீண்டும் ரூர்கேலாவில் பிப் 14-ல் பெல்ஜியம், பிப். 15-ல் அர்ஜென்டினாவை சந்திக்கும்,போட்டிகள் நடக்க உள்ளன.   ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில் (இந்திய அணி கேப்டன்), இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று, இவர்கள்சிறப்பாக செயல் பட்டதுமகிழ்ச்சி தருகிறது.. மீண்டும் தொடர்ந்தால், வெற்றி எளிதாகும்," என்றார். 

Feb 11, 2026

ஜூனியர் பிரிவில் ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பிராச்சி தங்கம் வென்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் டில்லியில், பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச் சுற்று நடந்தது.  இந்தியாவின் விதர்சா (590 புள்ளி) முதலிடம் ,அஞ்சும் மவுத்கில் (587), ஆஷி சவுக்சி (586), ஆக்ரிதி (583), 3, 5, 7 வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர்.  3 பொசிசன்ஸ் ஜூனியர் பிரிவு  50 மீ ரைபிள் போட்டியில் இந்தியாவின் பிராச்சி, அனுஷ்கா, ஹசல் இடம் பெற்ற அணி, மொத்தம் 1748 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்றது. 

Feb 10, 2026

இந்தியா, இலங்கையில்  'டி-20' உலக கோப்பை 10வது சீசன்.

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, கனடா அணிகள் மோதின. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்தது, கனடா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 156 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இத்தாலி அணி. 'டி-20' உலக கோப்பைபோட்டியில் அறிமுகம்.  ஸ்காட்லாந்து, இத்தாலி அணிகள் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டி-20' உலக தொடரில் அறிமுகம் ஆன இத்தாலி அணிக்கு, கேப்டன்வெய்ன் மேட் சென், 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 207/4 ரன் குவித்தது.இத்தாலிஅணி 16.4 ஓவரில் 134 ரன் னில் ஆல் அவுட்டாகியது.  ஓமன், ஜிம்பாப்வே அணிகள் ,இலங்கையின் கொழும்புவில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல் டிங்' தேர்வு செய்தது.ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்னுக்கு  ஆல்அவுட் ஆனது.  106 ரன் எடுத்து ,ஜிம் பாப்வே அணி 13.3 ஓவரில் 2 விக்கெட் வெற்றி பெற்றது. 

Feb 10, 2026

சென்னையில் 'ஸ்டார் கண் 'டென்டர்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி.

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 2021 முதல் 'ஸ்டார் கன்டெண்டர்'  தொடர் நடத்தப்படுகிறது. தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இத்தொடர் இன்று சென்னையில் துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி.  80க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ,கலந்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் போட்டி நடக்க உள்ளன.  தகுதிச் சுற்று  போட்டிகளில் அதிகபட்சம்27 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் களமிறங்குகின்றனர்.  ஆசிய யூத் சாம்பியன் திவ்யான்ஷி, அனுஷா, சயாலி, காவ்யா, தியா சிட்டாலே பெண்கள்பிரிவில் விளையாடுகின்றனர். இத்தொடரில் கோப்பை வெல்லும் பட்சத்தில் ரூ. 15.41 லட்சம் (ஒற்றையர்), ரூ.4.98 லட்சம் (இரட்டையர்) பரிசு வழங்கப்படும். 

Feb 10, 2026

இந்திய வீராங்கனை மனு பாகர்  (25 மீ., 'பிஸ்டல்') ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார்.

டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் ('ரைபிள்' / 'பிஸ் டல்") தொடர் டில்லியில், பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (589.24 புள்ளி), மனுபாகர் (584.18) முதலிரண்டு இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் (578.22) 7வது இடம் பிடித்தார், மனு பாகர், ஈஷாசிங், ரிதம் சங்வான் அடங்கிய இந்திய அணி,25 மீ 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் 1751.64 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது,   நாம்யா கபூர், அஞ்சலிபகவத், பாரிஷா குப்தா அடங்கிய இந்திய அணி ,ஜூனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் (1723.39) தஙகம் வென்றது.அஞ்சலி பகவத் தனி நபர் பைனலில் வெண்கலம் வென்றார். 

Feb 09, 2026

'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்.

நேற்று இந்தியா இலங்கை 20 அணிகள் பங்கேற்கின்ற உலக கோப்பை 10வது டி -20' சீசன் துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது. அமெரிக்க அணி 20 ஓவரில் 132/8 ரன் எடுத்து தோற்றது.சூர்யகுமார் (84 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார், ---------சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்08.02.2026 நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில்நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதின. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 182/6 ரன் எடுத்தது,நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 183/5 ரன் எடுத்து வென்றது......……….  இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை,அயர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற அயர் லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.   அயர்லாந்து அணி 19.5 ஓவரில் 143 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.-----------------மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் நேபாளம், இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது,நேபாள அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

Feb 09, 2026

இளவேனில், அர்ஜுன் ஜோடி ஆசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கம்,.

ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில், கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் பாபுதா ஜோடி 632.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பைனலில் இந்திய ஜோடி, 505.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றது.   10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு ஜூனியர் கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ஷம்பவி, ஹிமான்ஷு ஜோடி (502.4 புள்ளி) தங்கம் வென்றது.  25மீ., 'ஸ்டேன்டர்ட் பிஸ்டல்' பிரிவில் ஆண்களுக்கான  பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் (575.16 (571.14), அமன்பிரீத் சிங் புள்ளி), ஹர்ஷ் குப்தா (569.11) தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.  இதுவரை 20 பதக்கம் வென்ற 11 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 188 189

AD's



More News