கேப்டன் ரோகித், இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், "தற்போது ஜூனியர் உலகக்கோப்பையில் எங்களது முழுக்கவனத்தையும்செலுத்துகிறோம். காலிறுதிப் போட்டியில் யார் பங்கேற்பர் என்று இப்போது கூறமுடியாது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கைஇருக்கிறது. அதிக கோல் அடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். போட்டியின் தேவைக்கேற்ப ஆட்டத்தை 'டிபன்ஸ், அட்டாக்' நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்திய அணியில் தற்போது தமிழக வீரர்கள் இடம் பெற. முயற்சி நடக்கிறது. பள்ளி அளவில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இது நீண்டகால முயற்சி. இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2026 உலகக்கோப்பை, 2028 ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது ,நிச்சயமாக இடம்பெறுவர்," என்றனர்.
'நம்பர்-2' ஆக உள்ள இந்திய அணி ,உலகத் தரவரிசையில் 'பி' பிரிவில் சிலி, ஓமன், சுவிட் சர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் சிலி (7-0), ஓமனை (17-0) வீழ்த்திய இந்திய அணி, 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி, 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர், ஆசிய கால்பந்து கூட்ட மைப்பு சார்பில், வரும் 2026, மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 38 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி 'டி' பிரிவில் பாலஸ்தீனம், ஈரான், லெபனான், சீன தைபேவுடன் இடம் பெற்றது. பட்டியலில் முதலிடம் பிடித்தால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். இந்திய கோல் கீப்பர் சர்கார் சிறப்பாக செயல்பட, முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈரானை வென்று,ஆசிய கோப்பை தொடருக்கு 10வது முறையாக தகுதி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்துள்ளது. நேற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் ருதுராஜ் வாய்ப்பு பெற்றார்.தென் ஆப்ரிக்க அணியில் மஹாராஜ், 'ரெகுலர்' கேப்டன் பவுமாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப் பட்டது. 'டாஸ்' வென்ற தற்காலிக கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 349/8 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 332 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் மலேசியாவின் இபோ நகரில் நேற்று நடந்த பைனலில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இந்திய அணி ஆட்டநேர முடிவில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, 4வது முறையாக (2008, 2016, 2019, 2025) 2வது இடம் பிடித்தது. பெல்ஜியம் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
சையது மோடி 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் லக்னோவில் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திரீசா 22, காயத்ரி கோபி சந்த் 22, ஜோடி, ஜப்பானின் கஹோ ஒசாவா, மை டனாபே ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 17-21 என இழந்த இந்திய ஜோடி, பின் அடுத்த இரு செட்களை 21-13, 21-15 எனக் கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2024, 2025) சாம்பியன் பட்டத்தை வென்றது.இந்தியாவின் ஸ்ரீகாந்த் 32, ஹாங்காங்கின் ஜேசன் குனாவன் 21, ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். முதல் செட்டை 16-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2வது செட்டை 21-8 எனக் கைப்பற்றினார்.முடிவில் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
கிளாசிக் செஸ் தொடர் லண்டனில், நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா, 4வது சுற்றில் சக வீரர் பிரனவ் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் போட்டியை டிரா' செய்தார். அடுத்து நடந்த 5வது சுற்றில் பிரக்ஞானந்தா ஹங்கேரியின் தாமஸ் ஜூனியர் போடோரை சந்தித்தார். இப்போட்டி 21வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மற்றொரு 5வது சுற்றில் இந்தியாவின் பிரனவ் ஆனந்த் ,45வது நகர்த்தலில் ரஷ்யாவின் டேனியல் யூபாவை வென்றார். இந்தியாவின் இனியன் 49வது நகர்த்தலில் இங்கிலாந்தின் ஜோனா பி வில்லோவை வென்றார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் பிரனவ் ஆனந்த், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.பிரக்ஞானந்தா, இனியன் உள்ளிட்டோர் தல 4.0 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நேற்று, நடந்த 'ஈ' பிரிவுலீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் கோல் மழைபொழிந்த இங்கிலாந்து 13-0 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு 'ஈ' பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, மலேசியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய நெதர்லாந்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. 'டி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-0 என வென்றது.மற்றொரு 'டி' பிரிவு போட்டியில் நமீபியா அணி 4-2 என, எகிப்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. சென்னையில்உள்ளமேயர்ராதாகிருஷ்ணன்ஹாக்கிமைதானத்தில்நேற்று, நடந்த 'சி' பிரிவுலீக்போட்டியில்நியூசிலாந்து, அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது.'எப்' பிரிவு போட்டியில் தென் கொரியா, வங்கதேசம் அணிகள்'எப்' பிரிவு போட்டியில் மோதின. ஆட்டநேர முடிவில்போட்டி 3-3 என 'டிரா' ஆனது, மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி 8-3 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினா ஜப்பான் அணிகள்'சி' பிரிவு லீக் போட்டியில் மோதின. இதில் அர்ஜென்டினாஅணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, சீனா அணிகள் மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் மோதி, நியூசிலாந்து அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச தரத்திலான ஹாக்கி தொடர் முதல் முறையாக மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.முதல் போட்டியில் ( 'ஏ ' பிரிவு) 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, தென் ஆப்ரிக்க அணியை, 4-0 என வெற்றி பெற்றது. டி' பிரிவில் பெல்ஜியம், நமீபியா அணிகள் மோதி, பெல்ஜியம் அணி 12-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 'டி' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 8-0 என எகிப்தை வென்றது. ஏ' பிரிவில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின. முடிவில் அயர்லாந்து 4-3 என வெற்றி பெற்றது.