அப்போது சொத்து யாருக்கு செல்லும்?இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956உயில் (Will) இல்லாமல் ஒருவர் இறந்தால்,முதல் வாரிசுகள்- மனைவி, மகன், மகள், தாய் வாரிசுச் சான்றிதழ் அவசியம்சொத்து மாற்றம் செய்ய,வங்கி பணிகளுக்கு,சட்ட நடைமுறைகளுக்கு.,சட்டம் என்ன சொல்கிறது?அனைவருக்கும் சம பங்கு வழங்கப்படும்.உதாரணம் - மனைவி + மகன் + மகள் + தாய் இருந்தால், சொத்து 4 பேருக்கும் சமமாக பகிரப்படும்.உயில் எழுதி வைத்தால் குடும்ப தகராறுகளை தவிர்க்கலாம்.
உங்கள் உரிமைகள் காரணம் கேட்க உரிமை உண்டு. சோதனை செய்யும் காரணத்தை கேட்கலாம். அடையாள அட்டை கேட்கலாம் .போலீசின் பெயர், பதவி எண்ணை கேட்கலாம். பெண்களை பெண் போலீஸ் மட்டுமே சோதிக்க வேண்டும் இது உங்கள் உரிமை. வாகன ஆவணங்களை மட்டும் சோதிக்கலாம். DL, RC, Insurance , மட்டும். உங்கள் மொபைலை சோதிக்க அனுமதி இல்லை இது சட்டவிரோதம். போலீஸ் செய்யக்கூடாதவை. லஞ்சம் கேட்பது குற்றம் அதை மறுக்கவும், மிரட்டுவது, தவறாக நடந்து கொள்வது சட்டவிரோதம். உங்கள் பொருட்களை பறிமுதல் செய்ய முடியாது சட்டப்படி அனுமதி இல்லாமல். சட்டப்படி காரணம் இல்லாம தடுத்து நிறுத்த முடியாது. தவறாக நடந்தால் உடனே புகார் செய்ய உரிமை உண்டு. சட்டப்படி தண்டனை (BNS). ₹5,000 ए ₹25,000 அபராதம். 3 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை.
NOTICE வந்தால் மட்டும் செல்ல வேண்டும்.வாய்மொழி அழைப்புக்கு உடனே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் வீட்டிலேயே விசாரனைக்குரிமை உண்டுஇரவு நேரங்களில் போலீஸ் அழைக்க முடியாது. வக்கீலுடன் செல்லலாம்உங்கள் உரிமைகளை பாதுகாக்க வக்கீலுடன் செல்வது முக்கியம். அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். தெரிந்து கொள்ளுங்கள்...இல்லையெனில் தோல்வியும் உங்களதே! சட்டம் தெரிந்தால் பயம் வேண்டாம். BNSS சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றன.
பெற்றோரின் வீடு அவர்களின் உரிமை அவர்களின் விருப்பமே இறுதி! மூத்த குடிமக்களின் பாதுகாப்பும், சொத்து மீதான கட்டுப்பாடும் மிக முக்கியம் என நீதிமன்றம் வலியுறுத்தல்.
மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை ஏற்படுத்தும் மாமியாருக்கு 3 வருடம் சிறை தண்டனை!1PC பிரிவு 498A படி, கணவன் அல்லது அவரது உறவினர்களால் செய்யப்படும் கொடுமைக்கு 3 வருடம் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கலாம்.தொடர்ச்சியாக சண்டை ஏற்படுத்துதல், பழிச்சொல் பரப்புதல், மிரட்டல், மன உளைச்சலை உண்டாக்குதல் இவை அனைத்தும் 'மன ரீதியான கொடுமை என்பதில் அடங்கும். நினைவில் கொள்ளுங்கள்:நீதிமன்றம் கூறுவது ஒன்றை.. ஆதாரம் முக்கியம்! வெறும் வாய்வழி குற்றச்சாட்டு போதாது,சட்டத்தில் திருப்பம்!டெல்லி உயர்நீதிமன்றம் (செப் 2025) விளக்கியது:குற்றவியல் சட்டத்தைத் தாண்டி, துணைவியின் "அன்பை விலக்க மூன்றாவது நபரால் வேண்டுமென்றே தலையிட்டு, திருமண உறவை சேதப்படுத்தினால் அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈடு கோரலாம்.
வக்கீல் ஆலோசனை பெற இனி நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது,whatsapp இல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும் சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும். முறையான சட்ட ஆலோசனைக்கோ அல்லது தொழில்முறை வழக்கறிஞர்களுக்கோ இது மாற்றாகாது.
1.ஒருவர், தன்னுடைய சொத்துகளை யாருக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று எழுதி வைப்பது உயில் (Will). 2.உயில் எழுதியவர் உயிருடன் இருக்கும் வரை, அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றவும் ரத்து செய்யவும் முடியும். 3.உயில் செல்லுபடியாக இருக்க, எழுதியவரின் கையெழுத்தும் குறைந்தது இரண்டு சாட்சிகளின் கையெழுத்தும் அவசியம். 4.உயில் மூலம் சொத்து மாற்றம் நடைபெறுவதால், வாரிசுகளுக்கிடையிலான பிரச்சினைகள் குறையும். 5.சரியாக செய்த உயில் சட்டப்படி செல்லுபடியாகும் ; ஆனால் பதிவு செய்தால் எதிர்கால தகராறுகள் குறையும்.
ஒரு கணவன் தனக்கு பிள்ளைகள் எதுவும் இல்லாத நிலையில் இறந்து விட்டால், மனைவிக்கு அவருடைய சொத்தில் இருந்து ஆறில் ஒரு பாகம் தான் கிடைக்கும்.அதுவே அவருக்கு பிள்ளைகள் இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமே கிடைக்கும்.இவையுமே இறந்தவர் கடனோ அல்லது வஸிய்யத்(மரண சாசனமோ) செய்திருந்தால், அதனை நிறைவேற்றிய பின்னரே பிரிக்க வேண்டும்.
ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் , இந்தியாவைப் பொறுத்தவரை அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது.வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே அலைய வேண்டிய தேவை இருக்காது.குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது, நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
விவாகரத்தான ஒரு பெண் மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். வாரிசு உரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.